தேவார பாடல் பெற்ற சிவ தலங்கள்-அகத்தியான் பள்ளி
🔶இறைவன்- அகத்தீஸ்வரர்
🔶இறைவி- மங்கை நாயகி
🔶தலமரம் – வன்னி
🔶தீர்த்தம்- அகத்தியர்( திருக்குளம்), அக்கினி (கடல்)
🔶பாடல்- சம்பந்தர்
🔶நாடு- சோழ நாடு (தென்கரை)
🔶வரிசை எண்-243
🔶தொலைபேசி- 04369-250012
🔶அலைபேசி-?
🔶முகவரி :
அ / மி . அகஸ்தியர் கோயில்,
சேது ரஸ்தா சாலை,
அகஸ்தியம்பள்ளி& அஞ்சல்,
(வழி) வேதாரண்யம்,
வேதாரண்யம் வட்டம்,
நாகை மாவட்டம் – 614810
அருகிலிருக்கும் தலங்கள்
திருமறைக்காடு, கோடிக்கரை
கோவில் திறந்திருக்கும் நேரம்
காலை – 6:30-12:00
மாலை -5:00-8:30
தலசிறப்புகள்
இறைவனின் திருமண கோலம் காண அகஸ்தியர் தவம் செய்த தலம்
சம்பந்தர்
வாடிய வெண்டலை மாலைசூடி மயங்கிருள்
நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி ஆடிய எம்பெருமான் அகத்தியான் பள்ளியைப்
பாடிய சிந்தயினார்கட்கு இல்லையாம் பாவமே
பண் - காந்தாரம்
இராகம் - நவரோசு
திருமுறை- இரண்டு
பதிகம்-76
பாடல் -1
சம்பந்தர்
தெரிந்ததுவும் கணையொன்று முப்புரம் சென்றுடன்
எரிந்ததுவும் முன்னெழிலார் மலர் உறைவான் தலை
அரிந்ததுவும் பொழில்சூழ் அகத்தியான் பள்ளியான்
புரிந்ததுவும் உமையாள் பாகம் புனைதலே
பண் - காந்தாரம்
இராகம் - நவரோசு
திருமுறை- இரண்டு
பதிகம்-76
பாடல் -6
சம்பந்தர்
ஞாலம் மல்கும் தமிழ்ஞானசம்பந்தன் மாமயில்
ஆலும்சோலை புடைசூழ் அகத்தியான் பள்ளியுள்
சூலம் நல்ல படையானடி தொழுதேத்திய மாலை வல்லார் அவர்தங்கள் மேல்வினை மாயுமே.
பண் - காந்தாரம் இராகம் - நவரோசு திருமுறை- இரண்டு பதிகம்-76 பாடல் -11
வழித்தடம்
வேதாரண்யத்திலிருந்து கோடிக்கரை செல்லும் வழியில் 1.5கி. மீ தொலைவில் அகத்தியான் பள்ளி கோவில் உள்ளது..
கோவில் இருப்பிடம்