நெல்லை காந்திமதி அம்மன்
வரலாறு :
மதுரையில் இருந்து 180 கி.மீ. தொலைவில் . திருநெல்வேலியில் , நெல்லை காந்திமதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.இவ்வாலயம் நெல்லையப்பர் ஆலயம் என்றும் அழைக்கப்படுகிறது.சிவபெருமான் இவ்வாலயத்தில் நெல்லையப்பராக அருள் புரிகிறார்.நெல்லையப்பர் நெல்லைக்காப்பவர் இக்கோவிலுடன் 32 தீர்த்தக்குளங்கள் தொடர்பு கொண்டுள்ளன.பரதக்கலையின் குருவான நடராஜர் , தனது ஆடலை இவ்வாலயத்தில் அரங்கேற்றினார் .
சிறப்பு :
நெல்லை காந்திமதி அம்மன் மதுரை மீனாட்சி அம்மனுக்கு நிகராக வணங்கப்படுகிறாள். தன் பிள்ளைகள் போல் கவனித்துக் கொள்பவள்.பொருள் வளம் , குடும்பத்தில் இன்பம் ஆகியவை தவிர,ஞானம் , வாழ்வின் சிக்கலிருந்தும் விடுதலை போன்றவற்றையும் தன் பக்தர்களுக்கு காந்திமதி அம்மன் அருள்பாலிக்கிறார்.
பரிகாரம் :
இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் நெல்லையப்பருக்கும் . காந்திமதிக்கும் புதிய வஸ்திரங்களை வழங்கியும் , ஆலயம் வந்திருக்கும் பக்தர்களுக்கு உணவுகள் அளித்தும் , இறைவனுக்கு பூஜை செய்து நிவேதனம் அளிப்பர். கல்வியில் சிறந்து விளங்க விரும்பும் பிள்ளைகள் , காந்திமதி அம்மனைதொடர்ந்து வழிபடுதல் நன்று.
வழித்தடம் :
திருநெல்வேலி டவுனில் இவ்வாலயம் அமைந்துள்ளது. திருநெல்வேலி பழைய பஸ் ஸ்டாண்டு , புதிய பஸ் ஸ்டாண்டுகளிள் இருந்து மாநகரப் பேருந்து வசதிகள் உள்ளன. தமிழ்நாட்டின் பகுதிகளிலிருந்தும் நெல்லைக்கு தொலைதூரப் பேருந்து வசதிகள் உள்ளன.ரயில் நிலையமும் உள்ளது.
Google Map: