கண்ணாடி தானம்
பவுர்ணமி தினம் சக்திவாய்ந்தது என்பதால் தான் அன்று விரதம் இருக்கவும் சிறப்பு பூஜைகள் செய்யவும் பெரும்பாலானவர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்ககள்.ஆனால் பவுர்ணமியன்று பூஜை வழிபாடுகளுடன் செய்தால் தானம் செய்தால்தான் 100 சதவீத புண்ணியம் கிடைக்கும்.
தானத்தில் பல வகை உள்ளது. எந்த தானத்தை எப்போது செய்ய வேண்டும் என்ற ஐதீகம் இருக்கிறது.
அந்த வகையில் பவுர்ணமி நாட்களில் பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை தானமாக கொடுப்பது மிகவும் நல்லது என்று நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்துள்ளனர்.ஏதோ ஒரு பவுர்ணமிக்கு மட்டும் கொடுத்தால் போதாது .
ஓராண்டில் வரும் 12 பவுர்ணமிக்கும் முகம் பார்க்கும் கண்ணாடியை தானமாக கொடுக்க வேண்டும். ஆடி அல்லது மாசி மாதம் கண்ணாடி தானம் கொடுப்பதை தொடங்கலாம்.இந்த தானத்தை வெற்றிலை , பாக்கு , பழம் , தட்சணை , துளசி தனம் வைத்து தானம் கொடுக்க வேண்டும் . இந்த தானம் கொடுப்பதின் நோக்கம் , கண்ணாடியில் நமது முகம் தெரியும்.அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.
கண்ணாடியில் தெரியும் நமது முகம் அழகாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்பினால் நமது அகத்தை அதாவது மனதை அழகாக வைத்து கொள்ள வேண்டும். இப்படியாக அகத்தின் அழகை முகத்தில் காட்டும் கண்ணாடியை தானம் கொடுப்பவர்களும் , தானம் வாங்குபவர்களும் , மனதை நிர்மலமாகவும் அதாவது தூய்மையாகவும் , அழகாகவும் வைத்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தி கொடுத்து வருகிறார்கள்.
நெய் தானம்
ஆடி மாதம் சுக்ல பவுர்ணமியிலிருந்து இன்னொரு ஆடி பவுர்ணமி வரை சாதுர் மாத துவாதசிகளில் தேனும் நெய்யும் கொடுப்பது மிகவும் சிறப்பான தானமாகும். தானம் கொடுக்கும் முறை ஒன்றுதான் . துவாதசிகளில் கொடுப்பதை பவுர்ணமி அன்று கொடுப்பது.மொத்தம் 12 பவுர்ணமி நாட்களில் இந்த தானத்தை கொடுத்து முடிக்கலாம்.விருப்பமும் வசதியும் உள்ளவர்கள் , 13 – வது பவுர்ணமிக்கு நிறைவாக கொடுத்து முடிக்கலாம்.
சங்கு தானம்
ஆடி மாத பவுர்ணமியில் இருந்து ஜேஷ்ட மாதபவுர்ணமி வரை கொடுக்க வேண்டும் . வெற்றிலை , பாக்கில் தட்சணை , துளசி வைத்து அபிஷேகம் செய்வதற்கு உபயோகிக்கும் சங்கு வைத்து கொடுப்பது நல்லது.
மகாலட்சிமியின் ஸாந்நித்யம் நிறைந்த சங்கு தானமாக கொடுப்பதினால் நமக்கு லட்சுமி கடாட்சம் இருக்கும் மற்றும் வெற்றி முழக்கம் செய்வது சங்கு என்பதால் அதனால் நமக்கு காரிய வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த தானமும் சாதுர் மாத துவாதசிகளில் ஆரம்பித்து 24 துவாதசியும் அல்லது சாதுர்மாத துவாதசிகளில் மட்டும் கொடுக்கலாம்.
பூஜைக்கு படுத்தும் எந்த பொருளை தானம் கொடுத்தாலும் , அதன் பலன் நமக்கு எப்பிறவிகளிலும் கிடைக்கும் பூஜை செய்யும் பாக்கியமும் , அதற்கு தேவையான பகுதி , பொருள் வசதி ஆரோக்கியம் எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
நிர்மலமான மனதினால் நாம் பக்தி செய்தால் முக்தி பெற தகுதி உடையவர்கள் ஆவோம். இந்த முக்கியமான கருத்தை மனதில் கொண்டு தான் , நம் பெரியவர்கள் தானங்களும் , தருமங்களும் , நமக்கு உண்டான நியமங்களும் , விரத ஆசரணைகளும் , பூஜைகளும் தவறாமல் செய்து வந்தார்கள் .நமது பெரியவர் காட்டிய நல்வழியில் செல்வது என்பது நமக்கு நல்லதை கொடுக்கும் . ஆகையால் கூடுமானவவை முடிந்த அளவுக்கு நம்மால் தான தருமங்கள் , நியதிகள் , விரத ஆசரணைகள் , பூஜைகள் முதலிய வற்றை செய்வது நல்லது.
மூக்குத்தி தானம்
பெண்களுக்கு முறத்தில் தாலிப்பொட்டு , மூக்குத்தி மற்றும் பொருட்களை முறத்தில் போட்டு கொடுப்பதற்கு முறவாயண தானம் என்று பெயர். மொத்தம் 12 பவுர்ணமிகள் கொடுக்க வேண்டும். கௌரீ முறத்திற்கு போடக்கூடிய சாமான்களை தவிர மூக்கு பொட்டு , தாலிப்பொட்டு , மெட்டி , சவுரி எல்லாம் போட்டு புடவை , ரவிக்கை கொடுத்து முறவாயணம் கொடுக்க வேண்டும்.
தாலிப் பொட்டு , மூக்குத்தி போன்றவைகளை தற்காலத்தில் தங்கத்தில் வாங்கி போடுவது என்பது சிரமம் . ஆகையால் புடவை , ரவிக்கை கொடுத்து முறத்திற்குப் போடும் வழக்கமான சாமான்களை போட்டு மூக்குத்தி , தாலி பொட்டு , மெட்டி போன்றவைகளுக்கு சுமாரான தட்சணையை முறத்தில் போட்டு கொடுக்கலாம்.