மா பாட மங்களா தேவி
ஒடிசாவில் பூரி ஜகன்னாதர் ஆலயத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில், சாலையோரத்தில் மா பாட மங்களா தேவி கோவில் அமைந்துள்ளது.
இவ்வூரில் சக்தி ஆராதனையும் சிறப்பு பெற்று விளங்குகிறது. அவற்றில் பிரதானமானது மா பாட மங்களா தேவி கோவில்.
பூரி ஜெகன்னாதரின் எல்லை மா பாட மங்களா தேவி கோயிலில் இருந்து தொடங்குகிறது. படைத்தல் தொழிலை தொடங்க முயற்சித்த பிரம்மாவிற்கு உலகம் முழுவதும் வெறுமையாக காணப்பட்டது. அப்போது மங்களா தேவி தோன்றி சிருஷ்டிக்கான வழியை காட்டியதாகவும், அதன்பின் பிரம்மா நாராயணனின் நாபிக்கு கீழே வையகம் அமைந்துள்ளதை கண்டு தன் சிருஷ்டியை தொடங்கியதாகவும் ஐதீகம்.
நபகலேபரா என்பது பூரி ஜகன்னாதர் ஆலயத்தில் பழைய மர விக்கிரகங்களை மாற்றி புதிய விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்வதாகும். இந்த விக்கிரகங்களை உருவாக்க மரம் தேடும் முன், மங்களாதேவி முன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்த பின்னரே தேட தொடங்குவார்கள். அதேபோல உரிய மரம் கிடைத்த பின் அதனை மாட்டுவண்டியில் எடுத்து வந்து மங்களா கோயிலில் பூஜை செய்துவிட்டே பூரி ஆலயத்திற்கு மரம் கொண்டு செல்லப்படும்.
பத்மாசனக் கோலத்தில் காட்சி தரும் தேவியின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. ஒரு கையில் பாசக்கயிற்றை யும் மறுகையில் அங்குசத்தையும் தாங்கி அருள் செய்கிறாள். மா பாட மங்களா தேவி மூன்று கண்களைக் கொண்ட மங்களாதேவியை அருகில் சென்று தரிசிக்கலாம்.ஆலத்தி என்று அழைக்கப்படும் விளக்கிள் திரியிட்டு ஆரத்தி காட்டி பக்தர்கள் மங்களாதேவியை வணங்குகிறார்கள்.
பூரி ஜெகநாதர் ஆலயம் செல்லும் பக்தர்கள் வாகனங்கள் அனைத்தும் இக்கோயில் முன்நிறுத்தி மா பாட மங்களா தேவியை வழிபட்ட பின்னே பயணத்தைத் தொடர்கின்றன.
துர்க்கா பூஜை,தசரா மற்றும் சைத்ர மாத பூஜைகள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது..
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …