சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023-மகரம்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023 – மகரம்

ஸ்ரீ மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 1-ம் தேதி(14.04.2023) வெள்ளிக்கிழமை, சூரிய உதயாதி 22-25 நாழிகை அளவில் பகல் 2:59 மணிக்கு சிம்ம லக்னம், கடக நவாம்சத்தில் சூரிய பகவான் மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலம் மங்களகரமான சோபகிருது வருடம் பிறக்கிறது.

சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள்

சனி பகவானின் அருள் பெற்ற மகர ராசி அன்பர்களே !!!சித்திரை மாதம் 8-ம் தேதி முதல் குருபகவான் உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். சனிபகவான் வருடம் முழுவதும் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார். ராகு கேதுக்கள் முறையே ஐப்பசி மாதம் 13-ம் தேதி வரை 4 மற்றும் 10-ம் இடங்களிலும், பிறகு 3 மற்றும் 9-ம் இடங்களிலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

எந்த காரியத்தை ஆரம்பித்தாலும் சிறிது தடை ஏற்பட்டு பிறகு நடக்கும். உங்கள் கீழ் பணி புரியும் பணியாளர்களாலும் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு பிறகு சரியாகும். தொழில் துறையில் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து ஓரளவு லாபத்தை பெறுவீர்கள். தொழில் துறையில் உத்தியோகஸ்தர்களுக்கு இடம் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. நண்பர்கள், உறவினர்கள் மூலம் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு பிறகு சரியாகும்.

சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023

மாணவர்கள் கடுமையாக உழைத்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும்.படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு இந்த வருடம் நிச்சயம் கிடைக்கும். தாய் மற்றும் தந்தையரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். ஐப்பசி மாதம் 13-ம் தேதிக்கு பிறகு தொழில் துறையில் புதிய முயற்சிகள் செய்யலாம். பணம் வசூல் ஆவதில் காலதாமதம் ஆகும். சிலருக்கு தொழில் நிமித்தமாகவும், குடும்ப சலசலப்பு காரணமாகவும் தனி குடித்தனம் செல்ல வேண்டி இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலதிபர்களுக்கும் சீரான வளர்ச்சி உண்டு. இந்த வருடம் திடீர் அதிர்ஷ்டம் கிடையாது.

பலன் தரும் பரிகாரம்

இந்த வருடத்தில் ஒருமுறை வியாழக்கிழமையில் திருச்செந்தூருக்கும், சனிக்கிழமைகளில் திருநள்ளாருக்கும் சென்று வருவது சிறப்பு.

Leave a Comment

error: Content is protected !!