மகர லக்னம் அல்லது மகர ராசி
🎯இவர்களின் குடும்ப நிலையை அறிய இவர்களின் 7 ஆம் பாவ மான கடகத்தைக் கவனிக்க வேண்டும்.
🎯கடகத்தில் குரு , சனி , புதன் சார நட்சத்திரங்களான புனர்பூசம் , பூசம் , ஆயில்யம் உள்ளன.
🎯கடகம் சந்திரனின் வீடு ஆதலால் மகர லக்ன வாழ்க்கைத் துணைவர் எப்போதும் பரபரவென்று வேகமாகச் செயல்பட்டுக் கொண்டே இருப்பார்.
🎯தாய்மை குணம் நிரம்பியவர் . அன்பானவர் சுறுசுறுப் பானவர். இங்கு குரு உச்சமடைவார். அதனால் மகர லக்ன , மகர ராசி வாழ்க்கைத் துணைவர்கள் ஆன்மிக சிந்தனையோடும் ஒழுக்கத்துடனும் , வீரத்துடனும் , விவேகத்துடனும் நடந்து கொள்வர்.எல்லாராலும் வணங்கத் தக்கவர்களாக இருப்பர்.
🎯மகர லக்ன 7 – ஆம் அதிபதி உச்சமானால் நிறைய வளங்கள் , விவசாய நிலம் , செல்வம் , பிரபலம் , அழகு , செல்வாக்கு , சொல்வாக்கு நிரம்பிய வாழ்க்கைத் துணைவர் அமைவர்.
🎯இதே மகர லக்ன 7 – ஆம் அதிபதி நீசமானால் இவர்களின் வாழ்க்கைத் துணை எப்போதும் மனக் குழப்பத்தோடு காணப்படுவார்.சோம்பேறிகளாக கலகம் செய்பவர்களாக பிறர் வாழப் பொறுக்காதவர்களாக இருப்பர்.
🎯இவர்களின் மாமியார் யாரையும் பார்த்த மாத்திரத்திலேயே அவர்களை மதிப்பிடும் அறிவு பெற்றி ருப்பார் . மாமனார் எப்போதும் அலைந்து கொண்டிருப்பவராகவும் தெய்வபக்தியோடு ஆன்மிக பயணம் செய்பவராகவும் இருப்பார்.
🎯இவர்களின் மாமனார் வீடு கடை வீதிகளுக்கு அருகில் இருக்கும். சிலருக்கு நீர் நிலைகளுக்கு அருகில் இருக்கும்.
🎯இவர்களின் களத்திர தாய் வீடு மேற்கு அல்லது தென்கிழக்கு திசையில் இருக்கும்.
🎯 ஹி , ஷீ , ஹே , ஹோ , டி , டு , டே , டோ , யி , ஹ ஆகிய எழுத்துகளில் வாழ்க்கைத் துணையின் பெயர் ஆரம்பிக்க வாய்ப்புள்ளது .