மருத்துவ ஜோதிடம் -நோய்களுக்கான பரிகாரம்
சில வியாதிகள் என்ன மருந்து சாப்பிட்டாலும் சரியாகவில்லை என்று ஏங்கும் காலமாக உள்ளது
கிழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் படி இரண்டு விதமாக இதை பயன்படுத்துங்கள்.அதாவது ஒவ்வொருநாளும் என்ன நட்சத்திரமோ அந்த நட்சத்திரத்திற்கு சொன்ன பதார்த்தத்தை வீட்டிலுள்ள அல்லது கோவிலுள்ள கடவுளுக்கு நெய்வேத்யம் செய்து விட்டு சாப்பிடுங்கள் .
அடுத்தது மாதாமாதம் உங்கள் நட்சதிரத்தன்று என்ன உள்ளதோ அதை கோவில் அல்லது வீட்டில் படைத்தது நெய்வேத்யம் செய்து சாப்பிட்டு வரவும் .
நம்பிக்கை மற்றும் பக்தியுடன் இதனை செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிட்டும் .
எண் | நட்சத்திரம் | பதார்த்தம் | நோய்களுக்கான பரிகாரம் |
1 | அஸ்வினி | தேங்காய் சாதம் ,இட்லி | வயிற்று அழற்சி ,குடல் நோய்கள் |
2 | பரணி | உளுந்து கொழுக்கட்டை ,புளி சாதம் | முழங்கால் முதல் பாதம் வரை உள்ள நோய்கள் |
3 | கார்த்திகை | தோசை ,அவல் உப்புமா | கர்பப்பை சம்பந்தமான நோய்கள் |
4 | ரோகிணி | வெண்பொங்கல் ,கேசரி | முகத்தில் வரும் நோய்கள் |
5 | மிருகசீரிடம் | மோர்சாதம்,போண்டா | கைகளில் வரும் நோய்கள் |
6 | திருவாதிரை | மசால் வடை ,சக்கரை பொங்கல் | இருதய சம்பந்தமான நோய்கள் |
7 | புனர்பூசம் | சாம்பார் சாதம் ,கை முறுக்கு | ரத்தநாளங்களில் வரும் நோய்கள் |
8 | பூசம் | பிசிபேலாபாத் ,கத்தரிக்காய் கொஸ்து | நுரையீரல் சம்பந்தமான நோய்கள் |
9 | ஆயில்யம் | பருப்பு பொடி சாதம் ,கருவேப்பிலை பொடி சாதம் | கல்லீரல் மண்ணீரல் சம்பந்தமான நோய்கள் |
10 | மகம் | மாங்காய் சாதம் ,காரக்குழம்பு சாதம் | சிறுநீரக நோய்கள் |
11 | உத்திரம் | மோர்க்குழம்பு சாதம் , | தொண்டை நோய்கள் |
12 | பூரம் | கீரை சாதம் ,கொத்தமல்லி சட்னி சாதம் | கல் அடைப்புகல் நீங்கும் |
13 | ஹஸ்தம் | அவியலுடன் சாதம் , | நரம்பு நோய்கள் நீங்கும் |
14 | சித்திரை | தக்காளி சாதம் ,ஊறுகாய் | கபால நோய்கள் |
15 | சுவாதி | வெண்டைக்காய் சாதம் ,முளைக்கீரை சாதம் | மன நோய்கள் |
16 | விசாகம் | கத்தரிக்காய் சாதங்கள் ,பீர்க்கங்காய் சாதங்கள் | கண்ணேறு கோளாறுகள் |
17 | அனுஷம் | உப்புமா ,எண்ணெய் கத்தரிக்காய் சாதம் | அலர்ஜி நோய்கள் |
18 | கேட்டை | சப்பாத்தி ,பூரி | தோல் நோய்கள் |
19 | மூலம் | இடியாப்பம் ,கருணைக்கிழங்கு சாதம் | உஷ்ண சம்பந்தமான நோய்கள் |
20 | பூராடம் | காரம் ,இனிப்பு ,சீயம் | ரத்த கொதிப்பு நோய்கள் |
21 | உத்திராடம் | பட்டாணி சாதம் ,நீர் | மாந்தம்,பித்த நோய்கள் |
22 | திருவோணம் | காய்கறி சாதம் | தொற்று வியாதிகள் |
23 | அவிட்டம் | ஊத்தப்பம் | பால்வினை நோய்கள் |
24 | சதயம் | பொங்கல் ,உளுந்து வடை | லாகிரி வஸ்துவால் வரும் நோய்கள் |
25 | பூரட்டாதி | பருப்பு துவையல் சாதம் ,கேழ்விரகு அடை | பூச்சி ,விஷ கடிகள் |
26 | உத்திரட்டாதி | சேமியா கிச்சடி ,அவல் உப்புமா | செய்வினையால் வரும் நோய்கள் |
27 | ரேவதி | இட்லி ,வடகறி ,கேரட் சாதம் | சூன்ய மருந்து வைப்பதால் வரும் நோய்கள் |