மிதுன ராசியை பற்றிய சில குறிப்புகள்
மிதுனம்
💚எந்த சமயத்திலும் உழைக்கத் தயங்காதவராக இருக்கும் உங்களுக்கு பலம் , பலவீனம் இரண்டுமே உங்க புத்திசாலித்தனம்தான். எத்தகைய சூழலையும் சமாளிக்கக்கூடிய நீங்கள் , வேண்டாத சிக்கலையும் சில சமயம் விலைகொடுத்து வாங்கறீங்களே , அதைத் தவிர்த்தாலே எல்லாமும் நன்மையாகும் .
💚புதன் கிரஹத்தின் ஆதிக்கத்துல உள்ள ராசியில் ,
பிறந்த உங்களுக்கு,இயல்பாகவே எதையும் சட்டென்று கற்றுக்கற திறமையும் , எளிதில் புரிஞ்சுக்கற புத்திசாலித்தனமும் இருக்கும்.
💚அதேசமயம் எந்தச் செயலையும் முழுமையாக முடிக்காம அரைகுறையாக விடும் குணத்தை மாற்றிக்கறது முக்கியம்.
💚உங்க பெயரில் வீடு வாங்கற சமயத்துல அல்லது கட்டும் போது அந்த வீட்டின் தலைவாசல் மேற்கு திசையில் அமைவது நல்லது.வடக்கைத் தவிருங்கள்.
💚உங்க வாழ்க்கைல முக்கியமான உயர்கல்வி , வேலை , சுபகாரியம் இப்படி ஏதாவது விஷயமாகச் செல்லும்போது வயதுல முதிய ஏழைத் தம்பதிகள் யாருக்காவது , இயன்ற உணவு , உடையை தானம் செய்துட்டுச் செல்வது , உங்க எதிர்காலம் பசுமையாக இருக்க உதவும்.
💚உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம் , பச்சை. இது அடர்பச்சை , இளம் பச்சைன்னு எதுவாக இருந்தாலும் சிறப்பான பலனே கிடைக்கும்.வாழ்க்கைல முக்கியமான சமயங்கள்ல இந்த நிறத்துல உடை அணிவது சிறப்பு . அது இயலாவிட்டால் இந்த நிறத்துல ஒரு சிறு கைக்குட்டையை வைச்சுக்குங்க.
💚மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் படத்தை வீட்டுல வைச்சு புதன் கிழமைகள்ல பூஜை செய்யுங்க. அன்றைய தினம் அசைவம் தவிருங்க. முடிஞ்சா ஒருவேளை உண்ணா விரதம் இருங்க . மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருளால உங்க வாழ்க்கை மிகப் பிரகாசமாகும்க .