மூலதிரிகோணம்
மூலதிரிகோணம் என்றால் என்ன ?
மூல திரிகோணம் என்பது கிரகத்தின் வலிமையை கூறும் இடமாக நம் ஜோதிட நூலகள் தெரிவிக்கின்றன .அவை எவ்வாறு அப்படி வகுக்க பட்டவை என்பதை கூறும் பதிவு இதுவாகும் .
மூல திரிகோணம் என்பது ஒரு கிரகம் தந் கத்தி வீச்சுகளை நிலையாகவோ அல்லது அடர்த்தியாகவோ புவியின் மீது செலுத்தும் இடம் ஆகும் ..அதனால் அவை நிச்சயம் ஆட்சி பெற்ற வீடாகவோ அல்லது உச்சம் பெற்ற வீடாகவோ இருக்க வேண்டும் .
செவ்வாய்
கால சக்ர தத்துவத்தில் செவ்வாய் ஆட்சி பெரும் வீடான மேஷம் மற்றும் விருச்சிகம் இரண்டு ஆட்சி வீடுகள்.இதில் முதல் வரும் வீடு மேஷம் அங்கு நிலை பெரும் சூரியன் உச்சம் பெற்று செவ்வாய் தன கதிர் வீச்சுகளை தருவதால் மேஷமே செவ்வாயின் மூல திரிகோண வீடு.
சந்திரன்
கடகத்தில் சந்திரன் ஆட்சி பெற்றாலும் ,ரிஷபத்திலிருந்தே அதிக கதிர்வீச்சுகளை புவி மீது பிரதிபலிப்பதால் ,சந்திரனுக்கு ரிஷபமே மூல திரிகோண வீடு ,மேலும் சந்திரன் நீசம் பெரும் விருச்சிகத்தில் சூரியன் நிலை பெற்று சந்திரன் ரிஷபத்தில் இருக்கும் போது ,பிரகாசமான நிலவை ரிஷப ராசியில் கார்த்திகை தீபம் அன்று காணலாம்.
சுக்கிரன்
ரிஷபத்தில் உச்சம் பெற்று சந்திரன் மூலத்திரிகோண வீடாக இருப்பதால் சுக்கிரனின் அடுத்த வீடு துலாமே மூலத்திரிகோண வீடு .ஐப்பசி மாதத்தில் அதிக காம எண்ணங்கள் தோன்றுவதை சுக்கிரனின் அதிக கதிர்வீச்சு விழுகிறது என்று யூகிக்கலாம்.
சூரியன்
யாருடைய சொந்த வீடுகளையும் எடுத்துக்கொள்ளாமல் ,தன சிம்ம வீட்டையே சூரியன் மூல திரிகோணமாக எடுத்து கொண்டுள்ளது.மேலும் உத்திராயணம் எனும் நிலை (சூரியன் வடக்கில் பயணம் மேற்கொள்ளும் மாய தோற்றம் )உண்மையில் புவியே சூரியனின் தெற்கு திசையில் பயணம் தொடங்குகிறது.இதன் மூலம் சூரியன் தன் ஆக்ரோஷமான கதிர்வீச்சுகளை துறந்து,சாந்தம் அடைந்து மிதமான வெப்பத்தை பூமி மீது செலுத்தும் நிலை எனவே சூரியனின் மூல திரிகோண வீடு சிம்மம்.
புதன்
புதனுக்கு ஆட்சி மற்றும் உச்சம் பெரும் வீடு ஒன்றே என்பதால் ,புதன் தன கதிர்வீச்சுகளை கன்னி ராசியில் இருந்து அதிகம் பூமியின் மீது செலுத்தும் .இதனால் புதனின் மூல திரிகோணம் கன்னி.
குரு (வியாழன் )
மீனத்தில் காம கிரகமான சுக்கிரன் உச்சம் பெற்று இருப்பதால் ,குருவின் மூல திரிகோண வீடு தனுசு .காலசக்ரத்தில் குருவின் முதல் வீடு மற்றும் தர்ம திரிகோண கடை வீடு இதுவே.குரு மிகப்பெரிய கிரகம் ,அவரின் கதிர்வீச்சுகள் அதிகம் எவ்வித கிரகத்தின் இடர்பாடுகள் இல்லாமல் பூமி மீது செலுத்தும் இடம் தனுசு.அதனால் அறிவியல் பூர்வாமாக தனுசை குருவின் மெல்ல திரிகோண வீடு என்று முன்னோர் கூறினர்.
சனி
சனி உருவத்தில் இரண்டாவது பெரிய கிரகம் .இதுவும் குருவை போலவே தனித்து கதிர்வீச்சுகளை அதிகம் செலுத்தும் இடம் குமபம்.மகரத்தில் செவ்வாய் உச்சம் பெற்று சனியின் கதிர்களோடு செவ்வாய் கதிர்கள் கலப்பதால் சனியின் கதிர்வீச்சு வீரியம் குறைகிறது எனவே நம் முன்னோர்கள் ,சனியின் கும்ப ராசியை மூல திரிகோண வீடாக வைத்தனர் .