கடகம் – பொறுமை
(புனர்பூசம் 4,பூசம் ,ஆயில்யம் )
சந்திரனின் அருள் பெற்ற கடக ராசி அன்பர்களே !!! இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் இருந்த சனி பகவான் இப்போது எட்டாம் வீட்டில் அஷ்டமத்து சனியாக வந்து அமர்வதால் நீங்கள் இனி எதிலும் முன்னெச்சரிக்கையாக உணர்வுடன் செயல்படுவது நல்லது. கடந்த மூன்று ஆண்டுகளாக கண்ட சனியால் பல அனுபவங்களை பெற்று இருப்பீர்கள். எல்லா சமயங்களிலும் கடவுள் உங்களுக்கு யார் மூலமாக தக்க சமயத்தில் உதவிகள் செய்து வந்துள்ளார் என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். அதே போல இந்த சனிப்பெயர்ச்சியிலும் இறையருள் உங்களுக்கு உண்டு. இந்த சனி அஷ்டமத்து சனியாக வருவதால் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என இருப்பது நல்லது.
மேலும் குடும்ப விஷயங்களை வெளியில் பகிர வேண்டாம். எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது அவசியமாகும். முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும்போது சட்ட ஆலோசகரை கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. உங்களுக்கு வரவேண்டிய பூர்வீக சொத்து பங்கை போராடி பெற வேண்டி வரலாம். நீண்ட நாள் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றவர்கள் பேச்சை கேட்டு அவசரப்பட்டு வேலையை விட்டு விட வேண்டாம். தாய் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வீடு, வண்டி, வாகன செலவுகள் ஏற்படலாம். தக்க சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காமல் போகலாம், வேலை மாற்றம் உண்டாகும்.
ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். வாடகை வீட்டிலிருந்து சில சொந்த வீட்டுக்கு குடிப்புக்குவீர்கள். இல்லத்தரசிகளை பொறுத்தவரை குடும்பத்தில் பெரிய முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். பிள்ளைகளின் உயர்கல்வி , திருமணம் சம்பந்தமான கடமைகள் கவலைகளாக தலை தூக்கும். அலுவலகம் செல்லும் பெண்களை பொறுத்தவரை பணிச்சுமை அதிகமாகும்.
இது அஷ்டமத்து சனி என்பதால் இரவு பகலாக வேலை செய்தாலும் கூட நல்ல பெயரை எடுப்பது கடினமாகும். தொழில் செய்பவருக்கு திடீர் அதிஷ்டம் வரும். அதே சமயம் கடன் பிரச்சனைகளால் அவமானங்களை சந்திக்க நேரலாம். இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன வகைகள், கட்டிட உதிரி பாகங்கள் மற்றும் மூலதனம் போடாமல் தொழில் செய்வோருக்கு நல்ல லாபம் வரும்.
கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களால் மறைமுக பிரச்சனைகளும், எதிர்ப்புகளும் வந்து நீங்கும். சக ஊழியர்களிடம் கவனமாக பழகுங்கள். இந்த சனிப்பெயர்ச்சியால் பலவிதமான நெருக்கடிகள் வந்தாலும் அவை அனைத்துமே சவாலே சமாளி என்போருக்கு இறைவன் அருள் உண்டு. துணிவே துணை என அன்றாட பணியை கடமையாக செய்து வந்தால் அஷ்டமத்து சனியால் எந்த கஷ்டமும் வராது.
சனிபகவான் பார்வை பலன்கள்
சனிபகவான் உங்கள் ராசிக்கு 2,5,10-ம் இடங்களை பார்வை செய்வதால் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வேட்டை பார்ப்பதால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் வரலாம். பண விஷயத்தில் யாருக்கும் வாக்கு கொடுக்காதீர்கள். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டை பார்ப்பதால் தேவையில்லாத விஷயத்தை நினைத்து மனம் குழப்பமடையும். பூர்வீக சொத்தில் பிரச்சனைகள் வந்து சரியாகும்.
இதையும் கொஞ்சம் படிங்க : சனி பகவான் பற்றிய சிறப்பு தகவல்கள்
சனிபகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தை பார்ப்பதால் தொழிலில் மந்த நிலை காணப்படும். கடன் வாங்கி தொழிலை விருத்தி செய்ய வேண்டாம்.
பலன் தரும் பரிகரம்
சனிக்கிழமை சனி ஓரையில் தேனி மாவட்டத்தில் உள்ள குச்சனூரில் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கும் சனி பகவானை எள் சாதம் படைத்து,8நல்லெண்ணெய் தீபம் ஏற்றி , 8 பேருக்கு அன்னதானம் செய்து வழிபட்டு வாருங்கள். அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.