ரிஷப ராசியில்-ராகு
ரிஷப ராசியில் ராகு இருந்து தனது திசை , புத்தி நடத்தினால் பூமி லாபம் , தன லாபம் , வெளி நபர்களால் பாராட்டப்படுதல் . பூஷண வஸ்திர வாபம் , வித்தியா பலம் . சாஸ்திர ஆராய்ச்சி , பொன்னாபரண சேர்க்கை உண்டாகும்.
அசுப சாரம் பெற்றால் சுப பலன்கள் இல்லை
- மேற்படி ராசியில் உள்ள ராகு சூரியன் சேர்க்கை பார்வை பெற்றால் , சுகம் பாதிக்கும் , சொத்து பறிமுதல் , அரசாங்க பயம் , வாகன பயம் , வீடு பங்களாவில் விஷபயம் , தான்ய லாபம் . வெகு கோபம் ஏற்படும்.
- சந்திரன் சேர்க்கை பெற்று நடந்தால் , யோக பலன்கள் இருக்காது
- செவ்வாயின் சேர்க்கை,பார்வை பெற்றால் கடனாளியாகவும்,துக்க சம்பவமும் கண்கோளாறும் தருவார்.
- சுபர் சாரம் பெற்றால் நன்மை சிறிது நடக்கும்.
- புதன் பார்வை சேர்க்கை பெற்றால் சொற்ப யோகங்களைத் தரும்.
- குருவின் சேர்க்கை , பார்வை நன்மையான பலன்கள் தந்தாலும் கடைசியில் ஒன்றும் இருக்காது.
- ரிஷபராகு சக்கிரன் பார்வை பெற்று தனது தசா புத்தி நடத்தினால் களத்திர வகை பீடை, ரோக பயம், தந்தைக்கு தோஷம், திரவிய லாபம், பெண்களின் மூலம் அப கீர்த்தி, ஸ்திரீ நாசம் தரும்.
- சனி பார்வை சேர்க்கை பெற்று இருப்பின் யோதை தந்தாலும், சகோதா வர்க்க தோஷம்,மானஹானி இடையூறுகள் ஏற்படும்.