ரேவதி நட்சத்திர ரகசியங்கள்
மௌன சாமியார்கள்,ராஜதந்திரி, சுயநலவாதிகள், மெதுவான நடை உள்ளவர்கள்.
பிறர் உழைப்பில் வாழ வெக்கப்படமாட்டார். நகைச்சுவையாய் பேசுவார். இவரை யாருக்கும் பிடிக்காது. பொறுப்பில்லாமல் இருப்பார். இவருடைய வேலைகளை பிறர் செய்ய தூண்டுவார்.
உருக்காலை பணி உண்டு. மோதிரம் தொலையும். குளம், குட்டைகளில் வழுக்கி விழ நேரும்.இவர் கூறும் பொய் கூட உண்மை போல் தோன்றும்.
மத்திய வயதில் பேரிழப்பு ஒன்றை சந்திப்பார். டென்னிஸ் விளையாடுவார். கவிதை ரசிகர். சிறந்த வேலை இல்லாவிட்டாலும் சற்று பற்றாக்குடையுடன் வாழ்வை நகர்த்துவார். வெறும் பொழுதுபோக்காக காலம் கடத்துவார்.
மனைவியின் உறவினர் உதவி இல்லாமல் இவரால் செயல்பட முடியாது.
தேன்போல் தித்திக்கும் மதுர வார்த்தைகள் பேசுவான். சண்டை, சச்சரவுகளை உண்டு பண்ணுவதில் ஆர்வம் உள்ளவன். நுட்ப அறிவாளி, மிகுந்த நற்பண்பு உடையவன. எப்போதும் மனக்கவலை உடையவன். களிப்புடையவன்.
தான் என்ற அகங்காரமும், திருட்டு புத்தி உடையவன். அஞ்சாநெஞ்சன், சுகவான், கோபக்காரன், மிகுந்த பாலுணர்வும், அலைபாயும் மனதை உடையவன். மென்மையான தேகம் கொண்டவன்.
பால்போலும் இனிய வார்த்தைகள் பேசுவான், அறிவீனன், தீச்செயல்கள் செய்வான். கபடதாரி, செல்வம் அற்றவன், இரக்கமுள்ள கொடையாளி, நற் பண்பு இல்லாதவன்.
தன்மான உணர்வுள்ள அஞ்சா நெஞ்சன்,வாய்மை பேசுவான்,குல சிறப்பை குலைப்பவன்,சௌக்கியவான்,விரோதிகளை வெல்வான்,துணிச்சலுடன் காரியம் சாதிப்பவன்.
ரேவதி நட்சத்திரத்தில் செய்யவேண்டிய காரியங்கள் :
ருது சாந்தி,பூ முடித்தல், பெயர் சூட்ட, காது குத்த, அன்னப்பிரசானம் செய்ய, உபநயம், விவாகம், ஆபரணம் பூண, விதை விதைக்க,பிரயாணம் செய்ய, கும்பாபிஷேகம், கிரக ஆரம்பம், மருந்துண்ண, குளம் வெட்ட, சுபம் செய்ய ஏற்ற நட்சத்திரம்.
ரேவதி நட்சத்திர அடிப்படை தகவல்:
நட்சத்திரம் -ரேவதி
நட்சத்திர அதிபதி -புதன்
நட்சத்திர நாம எழுத்துகள் -D,தே-தோ-ச-சி(CH)
கணம் -தேவ
மிருகம் -பெண்யானை
பட்சி-வல்லூறு
மரம் -இலுப்பை
நாடி -வாம பார்சுவ நாடி
ரஜ்ஜு -இறங்கு பாதம்.
அதி தேவதை – அரங்கநாதன் ,ஈஸ்வரன்
சூலினே நமோ நம :கபாலினே நம:சிவாய பாலினே
விரிஞ்சி துண்ட மாலினே நம :சிவாய
லீலினே விசேஷ முண்ட மாலிநே நம:சிவாய சீலினே
நம ப்ரபுண்ய சாலினே நம:சிவாய
பொருள் :
சூலத்தையும் ஓட்டையும் கையில் வைத்திருப்பவரும்,தம்மை வணங்கும் ஜீவர்களை காப்பவரும்,பிரம்மாவின் கபாலத்தை உடையவரும்,ஜனங்களின் நன்மைக்காக பல அவதாரங்களை எடுத்து நன்மை செய்பவரும்,நிறைய புண்ணியயும் செய்தவர்களாலேயே அடையக்கூடிய வருமான சிவபெருமானே நமஸ்காரம்.