லக்னம்(லக்னபுள்ளி )
❤மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு(லக்னபுள்ளி ) 0° முதல் 3°-20° வரை லக்னம் உதயமாகி செவ்வாயும் வலுத்து இருந்தால் மிகவும் நல்லது.
❤ரிஷப லக்னக்காரர்களுக்கு நடுவயது மத்திம வயது இவை சௌக்கியமாக இருக்கும். இதில்(லக்னபுள்ளி ) 13°- 20 °முதல் 16°முதல் 40° வரை பிறந்திருந்தால் வாழ்க்கை உயர்வாக இருக்கும். சுக்கிரன் லக்னத்தில் அல்லது 7-ல் இருந்தாலும் நல்ல உயர்வு உண்டு.
❤மிதுன லக்னக்காரர்கள்(லக்னபுள்ளி ) 26°- 40°முதல் 30° பாகை வரை பிறந்திருந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். புதன் லக்னத்தில் இருந்தால் வாழ்க்கை மேலும் உயர்வாக இருக்கும்.
❤கடக லக்னக்காரர்களுக்கு இதன் அதிபதியாகிய சந்திரனைப் போலவே இந்த லக்னத்தில் பிறந்தவர் வாழ்நாள் முழுவதும் உயர்ந்தும் தாழ்ந்தும் மாறி மாறி வாழ்க்கை அமையும் மனைவிக்கு அடக்கமானவர்(லக்னபுள்ளி ) 0°-3°-20° வரை ஜனனம் ஆனால் வாழ்க்கை உயர்வாக அமையும்.
❤சிம்ம லக்னக்காரர்கள் தாய்க்கு வேண்டியவர்(லக்னபுள்ளி ) 13°-20°முதல் 16°-40° வரை பிறந்து இருந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
❤கன்னி லக்னக்காரர்கள் 26°-40° முதல் 30°வரை பிறந்து இருந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.
❤துலாம் லக்னக்காரர்களில் கடைப்பகுதியில் இவர்களுக்கு மேன்மை உண்டு இதில் 0° முதல் 3°-20°வரை பிறந்தவர்களாக இருந்தால் மிகவும் சிறப்படைவார்கள்.
❤விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் இளமையில் நோய்வாய்ப்படுவார்கள் குரு வலுவாக அமைந்து இந்த லக்னத்தில் 13°-20° முதல் 16°-40°வரை பிறந்து இருந்தால் உயர்ந்த வாழ்வு உண்டு.
❤தனுசு லக்னக்காரர்கள் 25°-40°முதல் 30°வரை ஜனனமானால் தரமான நல்ல வாழ்க்கை உண்டு
❤மகர லக்னத்தில் பிறந்தவர்கள் மூத்த பெண்களின் சேர்க்கையால் அவமானம் பழி உண்டாகலாம் இதில் 0° முதல் 3°-20°வரை பிறந்திருந்தால் சிறந்த வாழ்க்கை உண்டு.
❤கும்பம் லக்கினகாரர்கள் 13°-20°முதல் 16°-40°க்குள் பிறந்திருந்தால் வாழ்க்கை உயர்வாக அமையும்.
❤மீன லக்னத்தில் பிறந்தவர்கள் அதிக உழைப்பில்லாதவர்கள் வெளிநாட்டு தொடர்பால் உதவிகள் உண்டு இந்த லக்னத்தில் 26°-40°முதல் 30°பாவிக்குள் பிறந்தால் அதிகம் முன்னேற்றம் உண்டு குரு லக்னத்தில் வழி பெற்றால் மேலும் உயர்வாக வாழ்க்கை அமையும்.