வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன்
வரலாறு:
ஆரிய வைஷ்ணவ குலத்தின் தெய்வமாக விளங்கும் இந்த அம்மனின் ஆலயம் ஆந்திர மாநிலத்தில் உள்ள மேற்கு கோதாவரி பெனுகொண்டா என்ற ஊரில் உள்ளது.
சிறப்பு:
வாசவி என்றால் தெய்வத்தின் குழந்தை என்று பொருள். வர்த்தன மன்னன் இந்த அம்மனை திருமணம் செய்ய விருப்பப்பட்டார். அம்மனுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை. இதனால் அந்த ஊரில் போர் உருவாக இருந்தது. இந்தப் போரினால் பல உயிர்கள் பலியாக வேண்டாம் என்று நினைத்து கோதாவரி நதிக்கரையில் பிரம்ம குண்டா என்ற இடத்தில் 103 அக்னி குண்டங்கள் உருவாக்கி இந்த அம்மனுடன் ஊர்மக்கள் 102 பேர் சேர்ந்து அக்னி குண்டத்தில் குதித்து உயிர் தியாகம் செய்தனர்.
அம்மன் ஆதிபராசக்தியின் மறுபிறவி ஆவார். பெண்களின் மரியாதையை காக்கவும், தர்மம் நிலைக்கவும், வர்த்தன மன்னனை அழிக்கவும், உலக நன்மையை மேம்படுத்தவும் இவர் கலியுகத்தில் தோன்றினார்.
பரிகாரம்:
குடும்பத்தின் மன நிம்மதிக்கும், உடல் நலத்திற்கும் வாசவி கன்னிகா பரமேஸ்வரி வழிபடுதல் நன்று.
வழித்தடம் :
ஆந்திர மாநிலத்தில் உள்ள மேற்கு கோதாவரி பெனுகொண்டா என்ற ஊரில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …