விநாயகர் சதுர்த்தி வரலாறு மற்றும் வழிபடும் முறைகள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

விநாயகர் சதுர்த்தி-2023

விநாயகர் சதுர்த்தி வரலாறு: 

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகைக்கு அடுத்தபடியாக அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான பண்டிகை என்றால் அது “விநாயகர் சதுர்த்தி” தான். ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று  விநாயகர் சதுர்த்தி பெரும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது .

காக்கும் கடவுள் கணேசன்:

“விநாயகர் சதுர்த்தி” மராட்டிய பகுதிகளில் ,தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும் இன்றளவிலும் கொண்டாடப்படுகிறது. சத்ரபதி சிவாஜி  ஆட்சி காலத்தில் ‘விநாயகர் சதுர்த்தி’ தேசிய விழாவாகக் கொண்டாடப்பட்டது. சுதந்திரப் போராட்ட காலத்தில் இந்து மதத்தில் மிகுந்த பற்று கொண்ட இந்திய  தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ‘பாலகங்காதர திலகர்’ ‘விநாயகர் சதுர்த்தி. எல்லை தாண்டி பரப்பினார். 

விநாயகர் சதுர்த்தி

ஆங்கிலேயர்கள் காலத்தில் மராட்டிய இந்துக்கள் மனதில் பிள்ளையார் மிகவும் ஆழமாக பதிந்து விட்டார். அந்த நிலையில் மராட்டிய பகுதிகளில் எலிகளால் நோய் அதிகரிக்க அந்த நோயால் பல மக்கள் இறந்தனர். இதையடுத்து ஆங்கிலேய அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது எலியைப் பிடித்து வருபவர்களுக்கு பணம் தருவதாக ஆங்கிலேய அரசு அறிவித்தது. உடனே பாலகங்காதரதிலகர் விநாயகரின் வாகனம் எலி  அதை அழிக்க ஆங்கிலேயர் அரசு முயற்சி செய்கிறது என போராட்டம் நடத்தினார். 

உடனடியாக ஆங்கிலேய அரசு இந்த உத்தரவை வாபஸ் பெற்றது. இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற்றதால் பாலகங்காதர திலகருக்கு ‘லோகமான்ய’ பட்டம் வழங்கப்பட்டது. அதன் பின்னர்  மகாராஷ்டிர மாநிலத்தில் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் ‘விநாயகர் சதுர்த்தி’ விழாவை கொண்டாட ஆரம்பித்தனர்..

விநாயகர் சிலைகள் :

ஒருவர் வீட்டில் விநாயகர் சிலை வைத்திருப்பதால் அந்த வீட்டில் இருக்கும் தீய சக்திகள் விரட்டப்படும். வீட்டில் இருப்பவர்களுக்கு கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும். நாம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் முன்னேற்றமும் ஏற்படும்.

விநாயகர் சதுர்த்தி

நாம் வாங்கக்கூடிய விநாயகர் சிலைக்கு இடது தும்பிக்கை உள்ளதாக இருக்க வேண்டியது அவசியம். இடதுபுறம் தும்பிக்கை உள்ள விநாயகரை வீட்டில் வைத்து வணங்கினால் நம் வக்கிரங்கள் நீங்கி செயலில் தெளிவு பிறக்கும்.

வலதுபக்கம் தும்பிக்கை உள்ள விநாயகரை வீட்டில் வைக்க வேண்டாம் அது நம் விருப்பம் நிறைவேறுவதை தாமதப்படுத்தும்.

விநாயகரின் வேறு பெயர்கள்

மணக்குல  விநாயகர், பொல்லாப் பிள்ளையார், படிக்காசு விநாயகர், சர்வ சக்தி கணபதி, புஷ்ப கணபதி, வீரகணபதி, துர்கா கணபதி, யோக கணபதி, துவிமுக கணபதி ,சிங்க கணபதி, சக்தி கணபதி, ஊர்த்துவ, கணபதி, குரு கணபதி, சித்தி புத்தி கணபதி, லட்சுமி கணபதி ,சித்தி புத்தி விநாயகர், நிதி கணபதி ,விநாயகன், கணபதி ,கணேசன்.

விநாயகர் வழிபாடு: 

‘விநாயகர் சதுர்த்தி’ அன்று வழிபடும் போது வேறு தெய்வ சிலைகள் விநாயகரை சுற்றி இல்லாமல் இருப்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். விநாயகரை வணங்கி அவரின் மந்திரங்களை உச்சரித்து வந்தால் தீராத வினைகள் யாவும் தீரும்.

எந்த காரியத்தையும் தொடங்குகிற போது, விநாயகரை வணங்கி செயல்பட்டால் எந்த தடங்கலும் இன்றி காரியம் வெற்றி அடையும் என்பது நம்பிக்கை. அதன் காரணமாக நாடு முழுவதும் விநாயகர் வழிபாட்டிற்கு முன்னுரிமையும், முக்கியத்துவமும் கொடுக்கப்படுகின்றது.

அருகம்புல் எதற்காக ?

அனலாசுரன் என்பவன் அனைவரையும் சாம்பலாக்கும் திறன் பெற்றதையடுத்து, தேவர்கள் கோரிக்கையின்பேரில், விநாயகர் அவனை பிடித்து விழுங்கியதால் ஆனைமுக கடவுளின் வயிறும் அனலாய் எரிந்தது. அப்போதும் முனிவர்கள் சிலர் விநாயகரின் உடல் குளிர்ச்சிக்காக ‘அருகம்புல்’ சாற்றினர். அதுமுதல் ‘அருகம்புல்’ விநாயகருக்கு மிகவும் பிடித்தமானதாகிற்று.

விநாயகர் சதுர்த்தி

தோப்புக்கரணம்

விநாயகரை வணங்கி வழிபடும் போது முன் நெற்றியில் 3 முறை கொட்டி, 2 கைகளாலும் காதுகளைப் பிடித்துக் கொண்டு, 5 முறை தோப்புக்கரணம் போட வேண்டும். ‘அகத்திய முனிவர்’ தனது தவற்றுக்காக விநாயகர் முன்பு தோப்புக்கரணம் போட்டதையடுத்து இந்த பழக்கம் ஏற்பட்டது.

வசதிகளை பெற்றுத்தரும் வழிபாடு

  • விநாயகரை மஞ்சளில் பிடித்து வழிபடும்போது அனைத்து வசதிகளும் கிடைக்கும்
  • உப்பில் விநாயகரை பிடித்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும்.
  • குங்குமத்தில் விநாயகரை பிடித்து வழிபட்டால் சகலதோஷமும் விலகும்.
  • வெள்ளருக்கு விநாயகரை வைத்து வழிபடும்போது தீவினைகள் நீங்கும்.
  • சந்தனத்தில் விநாயகரை பிடித்து வழிபடும் போது குழந்தை பேரு கிடைக்கும்.
  • பசுவின் சாணத்தில் விநாயகரை பிடித்து வழிபட்டால் தடைகள் நீங்கி சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.
  • வெண்ணையில் விநாயகரை பிடித்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்.
  • வாழைப்பழத்தில் விநாயகரை பிடித்து வழிபட்டால் வம்சம் விருத்தி அடையும்.

வினை தீர்க்கும் விநாயகர் மந்திரம்: 

ஓம் விநாயகனே போற்றி! ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி! 

ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி! ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி! 

ஓம் அருகினில் மகிழ்பவனே போற்றி!ஓம் அச்சம் தவிர் பவனே போற்றி! 

ஓம் ஆனை முகத்தோனே போற்றி!ஓம் ஆறுமுகன் சோதரனே போற்றி !ஓம் ஆதி மூலமே போற்றி! 

ஓம் ஆனந்த வடிவினனே போற்றி !ஓம் இமவான் சந்ததியே போற்றி!

ஓம் இடரைக் களைவோனே போற்றி !ஓம் ஈசன் மகனே போற்றி! 

ஓம் ஈகை நெஞ்சினிலே போற்றி! ஓம் உண்மைப் பரம்பொருளே போற்றி! 

ஓம் உலகத்தின் தலைவனே போற்றி! ஓம் ஊர்தோறும் உறைபவனே போற்றி!

ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி! ஓம் எளியோர்க்கு எளியவனே போற்றி! 

ஓம் என்னுயிர்த் தந்தையே போற்றி! ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி! 

ஓம் எருக்கம் பூ பவனே போற்றி! ஓம் ஏழைப் பங்காளனே போற்றி! 

ஓம் ஏமாற்றம் அளிப்பவனே போற்றி! ஓம் ஐங்கரனே போற்றி! 

ஓம் ஐந்தெழுத்தின் மகனே போற்றி!ஓம்ஒப்பில்லாத ஒருவனே போற்றி! 

ஓம் ஒளிமயமானவரே போற்றி! ஓம் ஓங்காரப் பொருளே போற்றி! 

ஓம் அவ்வைக்கு அருளியவனே போற்றி! ஓம் கருணாமூர்த்தியே போற்றி! 

ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி! ஓம் கண நாதனே போற்றி! 

ஓம் கணேச மூர்த்தியே போற்றி! ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி! 

ஓம் கலியுக தெய்வமே போற்றி! ஓம் கற்பக விநாயகனே போற்றி! 

ஓம் கந்தனுக்கு அண்ணனே போற்றி! ஓம் கருணைக்கடலே போற்றி! 

ஓம் காருண்ய மூர்த்தியே போற்றி! ஓம் கிருபா சமுத்திரம் போற்றி! 

ஓம் கீர்த்தி மிக்கவனே போற்றி! ஓம் குட்டில் மகிழ்பவனே போற்றி! 

ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி! ஓம் குணக்குன்றே போற்றி! 

ஓம் குற்றம் பொறுப்பாய் போற்றி! ஓம் கூத்தன் பிள்ளாய் போற்றி! 

ஓம் கொழுக்கட்டை ஏற்பாய் போற்றி! ஓம் கோவிந்தன் மருகனே போற்றி! 

ஓம் சடுதியில் அருள்வாய் போற்றி! ஓம் சங்கரியே போற்றி! 

ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி! ஓம் சிறிய கண்ணாய் போற்றி! 

ஓம் சித்தம் தெளிவிக்கும் சுருதியின் கருத்தே போற்றி! ஓம் சுந்தர வடிவே போற்றி! 

ஓம் ஞாலம் காப்பவனே போற்றி! ஓம் ஞான முதல்வனே போற்றி! 

ஓம் தந்தம் உறைந்தவனே போற்றி! ஓம் தந்தம் ஏந்தியவனே போற்றி! 

ஓம் தும்பிக்கை முகனே போற்றி! ஓம் துயர் தீர்ப்பவனே போற்றி! 

ஓம் தெய்வ குழந்தாய் போற்றி! ஓம் தேவாதி தேவனே போற்றி! 

ஓம் விநாயகனே போற்றி! ஓம் தொப்பை அப்பனே போற்றி! 

ஓம் பிள்ளைக் கடவுளே போற்றி! ஓம் பிரம்மச்சாரிய போற்றி! 

ஓம் பிள்ளையார் அப்பனே போற்றி! ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி! 

ஓம் பிள்ளை மானத் தானே போற்றி! ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி! 

ஓம் பெரிய கடவுளே போற்றி! ஓம் பேரருள் மிக்கவனே போற்றி! 

ஓம் பேதம் தவிர்ப்பாய் போற்றி! ஓம் மஞ்சளில் வாழ்பவனே போற்றி!

ஓம் மகிமை நிறைந்தவனே போற்றி! ஓம் மகா கணபதியே போற்றி!!!!

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துகள்

Leave a Comment

error: Content is protected !!