12 ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய கணபதி
பாலகணபதி
32 கணபதிக்கு ஊழல் முதலான இவரை, பிரதமை திதி தினத்தில் வணங்குவது நல்லது. மேஷ ராசிக்காரர்கள் வழிபடுவது விசேஷம். இவரை வணங்குவதால் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். கல்வி, கலைகளில் ஞானம் உண்டாகும்.
பக்த கணபதி
இரண்டாவதான பக்தி(த) கணபதியை துவிதியை திதி நாளில் ஆராதிப்பது சிறப்பு. ரிஷப ராசியினருக்கு உரியவர் இவர். இவரை வணங்குவதால் மன அழுத்தம் குறையும், மனத்துயர் நீங்கும், மனம் ஒருமைப்படும்.
சக்தி கணபதி
மூன்றாவதான சக்தி கணபதி மிதுன ராசியினருக்கு விசேஷமானவர். திரிதியை தினத்தில் இவரை ஆராதிப்பது சிறப்பு. குடும்ப ஒற்றுமை, உறவுகளிடம் இணக்கம், இல்லத்தில் செல்வம் சேர, கலைகள் வளர, நிம்மதி நிலவிட, வணங்கவேண்டிய கணபதி இவர்.
சித்தி கணபதி
எண்ணிய யாவும் சித்தியாகச் செய்பவர். தீய எண்ணங்களை நீங்க செய்து நல்லெண்ணத்தை ஏற்படுத்துபவர். சித்தர்களும், முனிவர்களும் இவரை போற்றுவதாக சொல்கிறது உத்கல புராணம். 32 வடிவங்களில் நான்காவது வடிவான இவரை நான்காவது திதியான சதுர்த்தி தினத்தில் ஆதரிப்பது நற்பலன்களை தரும். மேலும் கடக ராசியினர் இந்த கணபதியை வழிபட கஷ்டங்கள் யாவும் விலகும்.
உச்சிஷ்ட கணபதி
பிள்ளையாரின் 32 வடிவங்களுள் ஐந்தாவதான இந்த உருவமே அவரது எல்லா வடிவங்களையும் விட மிக மேலானதாக புராணம் சொல்கிறது. யோகிகளும், ஞானியரும் விருப்பத்தோடு துதிக்கும் திருவடிவம் உச்சிஷ்ட கணபதி வடிவமே. மனதில் சலனம் இன்றி இந்த கணபதி வடிவினை வணங்குவது எல்லா வகையான செல்வங்களையும் சேர செய்யும், சிம்ம ராசிகாரர்களுக்குவிசேஷ பலன் தரும் இவரை, பஞ்சமி திதி நாளில் வணங்குவது கூடுதல் நற்பலன் தரும்.
ஷிப்ர கணபதி
ஆறாவது திருவடிவமான இந்த கணபதி, கன்னி ராசிகரர்களுக்கானவர். சஷ்டி தினத்தில் இவரை ஆராதிப்பது சிறப்பான பலன் தரும். கால்நடை செல்வம் பெருக வேண்டுவோர் இவரை வணங்குவது சிறப்பு.
விக்னராஜ கணபதி
32 வடிவங்களில் ஏழாவது வடிவ வடிவினரான இவரை சப்தமி திதி தினத்தில் பூஜிப்பது நல்லது. துலாம் ராசிக்காரர்கள் இந்த வடிவ பிள்ளையாரை வணங்குவது கூடுதல் நன்மை தரும். வழக்குகளில் வெல்லவும், முயற்சிகளில் வெற்றி பெறவும், தடைகள் நீங்கவும் வழிபட வேண்டிய கணபதி இவர்.
வர கணபதி
பக்தர்கள் வேண்டிடும் வரத்தினை அருள்பவர். தடை வரும்பொழுது நினைத்தால், உடனே அது நீங்கிட அருள்பவர். வரத ஹஸ்தம் காட்டி அருள்பவர். விருச்சிக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய பிள்ளையாரின் வடிவம் இது. இவரை வணங்குவது எல்லா தடைகளையும் போக்கும்
ருணமோசன கணபதி
ருணம் என்றால் கடன், ரிணம் என்றால் ஆரோக்யம் இன்மை. இந்த இரண்டில் இருந்தும் நிவர்த்தி அளிப்பவர் இவர். நவமி நாளில் இவரை வணங்குவது சிறப்பு. தனுசு ராசியினர் வணங்க வேண்டிய கணபதி இவர். இவரை வணங்கினால் ஆயுள் ஆரோக்கியம் சிறக்கும்.
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் மற்றும் படங்களை பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள பட்டனை கிளிக் செய்யவும்
ஏகாதந்த கணபதி
வியாசர் சொல்ல மகாபாரதத்தை தனது தந்தத்தை உடைத்து எழுதுகோல் ஆக்கி எழுதிய பிள்ளையார் இவர். மற்றொரு சமயம் கஜமுகாசுரனை அழித்திட ஆயுதமாக தன் தந்தத்தை உடைத்து வீசினார் எனவே ஒற்றை மருப்புடன் திகழும் இவரை திரயோதசி தினத்தில் வணங்குவது சிறப்பு. படிப்பு நன்கு வளர, தடைகள் நீங்க, எதிரியிடம் பயம் விலக அருள்பவர். கும்ப ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கணபதி.
ஹேரம்ப கணபதி
ஆனைமுகன், அஞ்சுமுகம் கொண்டவராக காட்சி தரும் வித்தியாசமான வடிவமே ஹேரம்ப கணபதி. ஹே எனில் சங்கடம்,ரம்பம் எனில் காப்பவன் சங்கடங்களில் இருந்து மீட்டு காப்பவர் என்பதாலேயே ஹேரம்பன். சதுர்த்தசி தினத்தில் வணங்கிட வேண்டிய கணபதி இவர். இவரை வேண்டுவதால் எத்தகைய கடுமையான துன்பத்தில் இருந்து தப்பித்து நிம்மதி பெறலாம். மகர ராசியினர் இந்த கணபதியை வழிபட இன்னல்கள் யாவும் விலகும்.
தருண கணபதி
வேண்டியதை வேண்டிய தருணத்திலேயே அருளக்கூடியவர், தருண கணபதி. இந்த கணபதியின் வடிவினை(யும்) துவிதியை தினத்தில் வணங்கலாம். மீனராசியினர் இவரை வணங்கினால் விசேஷ நற்பலன்களைப் பெறலாம்.
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …