12 ராசிக்கும் சுக்கிரன் தரும் பலன்கள்- வராக மிகிரர்
மேஷம் மற்றும் விருச்சிகத்தில் சுக்கிரன்
மேஷம்-விருச்சிகத்தில் சுக்கிரன் இருக்க பிறந்தவன் பிறர் மனைவி மேல் ஆசை கொண்டவனாகவும், அவர்களின் ஆசை வார்த்தைகளில் மயங்கி செல்வத்தை இழந்து விடுபவனாகவும், தன் குடும்பத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துபவனாகவும், எப்போதும் உடலுறவு சம்போகம் பற்றியே எண்ணியும், அதை பற்றி பெருமையாக பேசுபவனாகவும் இருப்பான்.
ரிஷபம் மற்றும் துலாம் ராசியில் சுக்கிரன்
ரிஷபம்-துலாத்தில் சுக்கிரன் இருக்க பிறந்தவன் புத்தி-அறிவுள்ளவனாகவும், தன் சுய முயற்சியால் தன் சம்பாத்தியம் உடையவனாகவும், பந்துக்கள் எனும் உறவினர்களாலும், அரசாலும் மதிக்கபடுபவனாகவும், பயம் இல்லாதவனாகவும், புகழ் கீர்த்தி உடையவனாகவும் இருப்பான்.
மிதுனத்தில் சுக்கிரன்
மிதுனத்தில் சுக்கிரன் இருக்க பிறந்தவன் புத்திக்கூர்மை உள்ளவனாகவும், தன வந்தனாகவும், சங்கீதம்-வாத்தியங்களில் தேர்ச்சி பெற்றவனாகவும், அரசாங்கப் பணி செய்பவனாகவும் இருப்பான்.
கன்னியில் சுக்கிரன்
கன்னியில் சுக்கிரன் இருக்க பிறந்தவன் கஷ்டமான-தாழ்ந்த வேலை செய்பவனாகவும், தாழ்ந்தவர்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கு பணி செய்பவனாகவும் இருப்பான்.
மகரம் மற்றும் கும்பத்தில் சுக்கிரன்
சனியின் வீடுகளான மகரம் கும்பத்தில் சுக்கிரன் நிற்க பிறந்தவன் வெகு ஜன பிரியனாகவும், பெண்களுக்கு அடங்கி நடப்பவனாகவும், கீழ்த்தரமான பெண்களிடம் ஆசை கொண்டு அவர்களுடன் உடலுறவு சம்போகம் செய்பவனாகவும் இருப்பான்.
கடகத்தில் சுக்கிரன்
கடகத்தில் சுக்கிரன் இருக்க பிறந்தவன் இரண்டு மனைவிகள் உடையவனாகவும்,தரித்திரனாகவும், கர்வம்-பயம் உள்ளவனாகவும், பிறரிடம் பொருள் பெறுபவனாகவும் இருப்பான்.
சிம்மத்தில் சுக்கிரன்
சிம்மத்தில் சுக்கிரன் இருக்க பிறந்தவன் ஸ்தீரிகள் எனும் பெண்கள் மூலம் சம்பாதிப்பவனாகவும், அழகு-அதிர்ஷ்டம்- நற்குணங்கள் பொருந்திய மனைவி அடைபவனாகவும், அற்ப புத்திரர்கள் உடையவனாகவும் இருப்பான்.
தனுசில் சுக்கிரன்
தனுசில் சுக்கிரன் இருக்க பிறந்தவன் தனவந்தனாகவும், நற்குணங்கள் உடையவனாகவும், பிறரால் பாராட்டப்படக் கூடியவனாகவும் இருப்பான்.
மீனத்தில் சுக்கிரன்
மீனத்தில் சுக்கிரன் இருக்க பிறந்தவன் செல்வந்தனாகவும், சாஸ்திரங்களை அறிந்த வித்வானாகவும், வெகு ஜன பிரியனாகவும், அரசால் கௌரவிக்கப்படுபவனாகவும் இருப்பான்.
ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …