Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம் -பகுதி -46-5-ஆம் பாவாதிபதி நின்ற பலன்கள்

அடிப்படை ஜோதிடம் -பகுதி -46-5-ஆம் பாவாதிபதி நின்ற பலன்கள்

5-ஆம் பாவாதிபதி நின்ற பலன்கள்

5-ஆம் பாவாதிபதி(5th House in Astrology) லக்னத்தில் இருந்தால் ஜாதகர் அறிவாளியாகவும், சந்ததிகள் உடன் மகிழ்ச்சியாகவும், கருமியாகவும், அடுத்தவர்களின் சொத்துக்களை திருடுவராகவும் இருப்பார்
 
5-ஆம் பாவாதிபதி 2 ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் அதிகமான மகன்களையும், சொத்துக்களையும், கௌரவமான குடும்பம், மனைவியிடம் அன்பாக இருத்தல், உலகத்தில் புகழுடன் இருத்தல் போன்றவை இருக்கும்.
 
5-ஆம் பாவாதிபதி(5th House in Astrology) 3ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் கூடப்பிறந்தவர்களுடன் நேசமாக இருப்பர், கோள் சொல்பவராகவும் எப்போதும் தன்னுடைய சொந்த வேலையை மட்டும் செய்து கொண்டு இருப்பவராகவும் இருப்பார்
 
5-ஆம் பாவாதிபதி 4ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் தாயின் அன்புடன் மகிழ்ச்சியாக இருப்பார். சொத்தும், புத்திக்கூர்மையும், நுண்ணிய அறிவும், அரசுத் துறையிலும் அல்லது அரசியல் துறையிலும் அல்லது ஆசாரியனாகவும் இருப்பார்.
 
5-ஆம் பாவாதிபதி

 

 
5-ஆம் பாவாதிபதி 5ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர்(சுபயோகம்) நன்மை செய்யக்கூடிய வம்சத்தை பெற்றிருப்பார். மேலும் அங்கே அசுபயோகம் கொடுக்காது
 
5-ஆம் பாவாதிபதி ஆறாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் தன்னுடைய எதிரிகளுக்கு சமமான மகன்களை பெற்று இருப்பார். அல்லது அவைகளை இழப்பார் அல்லது தத்து எடுத்துக் கொள்வார். அல்லது மகனை வாங்குவார்.
 
5-ஆம் பாவாதிபதி 7 ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் மரியாதைக்குரியவராகவும், மதத்தில் பற்று உடையவராகவும், மகிழ்ச்சி அளிக்கக்கூடிய சந்ததிகளையும், மற்றவர்களுக்கு உதவி செய்யும் நபராகவும் இருப்பார்.
 
5-ஆம் பாவாதிபதி எட்டாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய சந்ததிகளை பெற்றிருக்க மாட்டார். நுரையீரல் சம்பந்தமான நோய்கள் வந்து போகும்.எப்போதும் கோபத்துடனும் மகிழ்ச்சியற்றவராகவும் இருப்பார்.
 
5-ஆம் பாவாதிபதி(5th House in Astrology) ஒன்பதாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் அரச குலத்தைச் சேர்ந்த பிரபுக்கள் போல் அல்லது அரசருக்கு சமமாக அல்லது கரந்தம், புத்தகம், கட்டுரைகள், வியாசம் போன்றவற்றை எழுதுபவராக அதன் மூலம் புகழ் அடைபவராகவும், முகத்தில் ஒளி வீசும் படியும் இருப்பார்
 
5-ஆம் பாவாதிபதி பத்தாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் ராஜயோகத்தை அனுபவிப்பார். எல்லாவிதமான சந்தோஷங்களையும் பெறுவார். மேலும் மிகவும் புகழ் பெற்றவராவார்.
 
5-ஆம் பாவாதிபதி 11-ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் கற் றறிந்தவராகவும், மக்களை நேசிப்பவராகவும், கதை, புத்தகங்கள், கட்டுரைகள், வியாசம், கிரந்தம் போன்றவற்றை எழுதியராவார்கள், மிகவும் திறமைசாலியாகவும், அதிகமான செல்வத்தையும், மகன்களையும் பெற்றவராக இருப்பார்
 
5-ஆம் பாவாதிபதி(5th House in Astrology) 12ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் தன்னுடைய சொந்தமகன்களிடமிருந்து மகிழ்ச்சியை பறிகொடுத்தவர், மகன்களைதத்து எடுத்துக் கொள்வார், அல்லது மகனை விலைக்கு வாங்குவார். 

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!