சோபகிருது தமிழ் புத்தாண்டு பலன்கள் 2023- கடகம்
ஸ்ரீ மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 1-ம் தேதி(14.04.2023) வெள்ளிக்கிழமை, சூரிய உதயாதி 22-25 நாழிகை அளவில் பகல் 2:59 மணிக்கு சிம்ம லக்னம், கடக நவாம்சத்தில் சூரிய பகவான் மேஷ ராசியில் பிரவேசிக்கும் காலம் மங்களகரமான சோபகிருது வருடம் பிறக்கிறது.
சந்திர பகவானின் அருள் பெற்ற கடக ராசி அன்பர்களே!! சித்திரை 8-ம் தேதி முதல் இந்த வருடம் முழுவதும் குருபகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
சனிபகவான் இந்த வருடம் முழுவதும் அஷ்டம சனியாக உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
ஐப்பசி மாதம் எட்டாம் தேதி வரை ராகு மற்றும் கேது உங்கள் ராசிக்கு 10 மற்றும் 4-ம் இடங்களிலும், அதன் பிறகு 9 மற்றும் 3-ம் இடங்களிலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.
இதன் மூலம் தொழில்துறையில் இவ்வருடம் மாற்றம் செய்ய வேண்டி இருக்கும் தொழில் செய்யும் இடத்திலோ, குடியிருக்கும் வீடோ அவசியம் இடமாற்றம் ஏற்படும். தொழில் துறையில் அலைச்சல் மிகவும் அதிகமாக இருக்கும். தொழில் துறையில் மாற்றம் விரும்பும் உத்தியோகஸ்தர்கள் அடுத்த வேலை கிடைக்கும் வரை இருக்கும் வேலையை விடக்கூடாது இல்லாவிட்டால் சில காலம் வேலைவாய்ப்பில்லாமல் இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
மூட்டு வலி, தசைநார் வலி, சிறுநீரகக் கோளாறு, ஜீரணமின்மை ஆகியவற்றால் சிறு பிரச்சனைகள் ஏற்படும். தொழில் செய்வோர் புதிய தொழில் தொடங்குவதையும் அதிக கடன் கொடுப்பதையும், வாங்குவதையும் கடன் வாங்கி தொழில் செய்வதையும் தவிர்ப்பது நல்லது. எல்லா விஷயங்களிலும் புது ஒப்பந்தங்களை போடுவதையும் தவிர்ப்பது நல்லது.
மாணவர்கள் நன்கு முயற்சித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை.
பலன் தரும் பரிகாரம்
இந்த வருட ஆரம்பத்தில் உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் கணபதி, நவக்கிரக, ஆயுஷ்ய,மிருத்யுஞ்ஜய,தன்வந்திரி ஹோமம் செய்வது சிறப்பு.