குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-துலாம்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-துலாம்

முன்கோபம் அதிகம் இருந்தாலும் தன்னுடைய வாக்கு சாதுர்யத்தால் பிறரை கவர்ந்து இழுக்கும் ஆற்றல் கொண்ட துலாம் ராசி நேயர்களே, சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3, 6-க்கு அதிபதியான குரு பகவான் திருக்கணிதப்படி வரும் 1-5-2024 முதல் 14-5-2025 வரை (வாக்கிய பஞ்சாங்கபடி 1-5-2024 முதல் 11-5-2025 வரை) அஷ்டம் ஸ்தானமான 8-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது மிகவும் நல்லது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025

உங்கள் ராசிக்கு 3, 6-க்கு அதிபதியான குரு பகவான் 8-ல் இருப்பது விபரீத ராஜ யோகம் என்ற காரணத்தால் அதிக பாதிப்பை ஏற்படுத்தாமல் ஒருசில அனுகூல பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தேவையற்ற வீண்செலவுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.

உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கக் கூடிய குருபகவான் 2, 4, 12-ஆகிய ஸ்தானங்களை பார்ப்பதால் இக்கட்டான நேரத்தில் நெருங்கியவர்களின் உதவியானது உங்களுக்கு கிடைக்கும் வீடுகளை புதுப்பிப்பதற்காக சுபச் செலவுகளை செய்வீர்கள். ஒரு சிலருக்கு வெளியூர் பயணங்கள்மூலமாக ஒரு சில ஆதாயங்கள் கிடைக்கும்.

குரு பெயர்ச்சி கிரக நிலைகள்

குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-சிம்மம்

இந்த தருணத்தில் ஒரு ராசியில் அதிக காலம் தங்கும் கிரகமான சனி பகவான் குறிப்பாக உங்கள் ராசிக்கு 4, 5-க்கு அதிபதியும், யோககாரகனுமான சனிபகவான் உங்கள் ராசிக்கு 5-ல் சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பாகும். அதுமட்டுமில்லாமல் சர்ப கிரகமான ராகு பகவான் உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக் கூடிய பலம் உண்டாகும். அசையும்-அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகளும் அதற்காக கடன் வாங்கக்கூடிய நிலையும் ஏற்படும்.

பூர்வீக சொத்துவகையில் நீண்டநாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சினைக்கெல்லாம் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் தேவையற்ற இடையூறுகள் நெருங்கியவர்களாலேயே ஏற்படும் என்பதால் புதிய முயற்சிகளில் ஈடுபடுகின்ற பொழுது சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது. சில முக்கிய விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பதன் மூலம் அடைய வேண்டிய இலக்கை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025

தொழில் வியாபாரத்தில் நீங்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் போட்ட முதலீட்டை எளிதில் எடுக்க முடியும். போட்டிகள் இருந்தாலும் வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் முடிக்கும் பலம் உண்டாகும். அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய பொருளாதார உதவிகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு எந்திரங்கள் பழுதாவதால் வீண்செலவுகள் ஏற்படலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்கள் வேலையையும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை ஏற்படலாம். வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். உங்கள் பணியில் தற்போதைக்கு நீங்கள் கவனமாக செயல்பட்டால் விரைவில் ஒரு நல்ல மாற்றத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. குறிப்பாக குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. ஆரோக்கியரீதியாக சிறுசிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, நேரத்திற்கு சாப்பிடுவது மிகவும் நல்லது.

குருபகவான் பார்வை

குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025-சிம்மம்
குரு பார்வை : 2ம் இடம் (குடும்பம் ,வாக்கு),4ம் இடம் (தாய் ,வீடு,வாகனம்) ,12ம் இடம் (தூக்கம் ,விரயம்)

குருபகவான் வக்ரகதியில் 9-10-2024 முதல் 4-2-2025 வரை

குரு வக்ரகதியில் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் எதிர்நீச்சல் போட்டாவது அனுகூலங்களை அடைவீர்கள். சனி பகவான் 5-ல் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் அனுகூலமான நிலை உண்டாகும். ராகு 6-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும் என்பதால் குடும்பத்தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

கணவன் – மனைவியிடையே ஒற்றுமை நன்றாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் இருந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுவீர்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்ள கூடிய வாய்ப்பு அமையும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025

உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த உயர்வுகளை அடையமுடியும். எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும். பணம் கொடுக்கல்-வாங்கலில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும் செய்யும் தொழில், வியாபாரத்தில் சிந்தித்து செயல்பட்டால் லாபங்களை பெறமுடியும் வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. அரசு வழியில் எதிர்பார்க்கும் உத்தரவுகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் எதிர்காலத்தில் நல்ல வாய்ப்புகளை அடையமுடியும்.

பரிகாரம்

துலாம் ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிப்பதால் வியாழக்கிழமை தோறும் குருப்ரீதி தட்சிணாமூர்த்தியை வழிபடுவது, நெய், தேன் போன்றவற்றை ஏழை எளிய பிராமணர்களுக்கு தானம் செய்வது, மஞ்சள்நிற ஆடைகள் அணிவது நல்லது.

கேது 12-ல் சஞ்சரிப்பதால் கேதுவுக்கு பரிகாரமாக விநாயகரை வழிபடுவது. சதூர்த்தி விரதங்கள் இருப்பது செவ்வல்லி பூக்களால் கேதுவுக்கு அர்ச்சனை செய்வது, சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம் கூறுவது, கருப்பு எள், வண்ண மயமான போர்வை போன்றவற்றை ஏழைகளுக்கு தானம் தருவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண்: 4, 5, 6, 7, 8

நிறம்: வெள்ளை, பச்சை

கிழமை: வெள்ளி, புதன்.

கல் : வைரம்

திசை: தென் கிழக்கு

தெய்வம்: லக்ஷ்மி

Leave a Comment

error: Content is protected !!