7ம் பாவத்தின் முக்கிய விதிகள்
- 7 – ல் புதன் – சுக்கிரன் சேர்க்கை நல்ல ஸ்திரீகளுடன் கூடி போக சுகத்தை அனுபவித்தால் , தனம் , பலருக்கு , வேண்டியவனாகவும் , சுகமுள்ளவ னாகவும் இருப்பர்.
- 7 – க்குரியவர் மேஷம் , மிதுனம் , கடகம் , கன்னி , விருச்சிகம் , மகரம் , மீனத்தில் இருப்பின் பகையால் துன்பம் , துஷ்டர் களால் பழி பாவம் சங்கடம் உண்டு.
- 7 – ல் சந்திரன் புதன் , 4 – க்குரியவர் சேர்க்கை பெற்று சந்திரன் செவ்வாய் பார்வை பெற்று இருப்பின் காதலால் பீடிக்கப்பட்டு காமத்தில் லீனா வினோதம் புரிவார் .சிலர் பெண்களை கண்டாலே வெறுப்படைவர்.வசதிகள் நன்றாக இருக்கும்.
- 7 – ல் சனி , 12 – க்குடையவருடன் செவ்வாய் சேர்க்கை பெற்று 4 – ல் இருக்க சகோதரி விதவையாவாள்( அ ) புத்திரர் இருக்காது.இவனுக்கு 2 தாரம் உண்டு.இல்லறம் சோபிக்காது.
- 6,8,12 ல் 4 க்குரியவர் குரு – சுக்கிரன் சேர்க்கை பெற தாரம் இரண்டு கஷ்டங்களால் தொல்லை.கடன் தொல்லையும் உண்டு..
- 7 ல் குரு , சனி , புதன் , பெண்களால் பலகேடுகள் உண்டு . 7.அம்சாலக்கினத்திற்கு 7 ல் சனி , புதன் சேர்க்கை ( அ ) சனி சந்திரன் சேர்க்கை இருப்பின் ஒருமுறை விவாகம் ஆன பெண்ணை மணப்பார்.
- 7 ல் புதன் குரு சேர்க்கை இருந்து சனியால் பார்க்கப்பட்டு அம்சத்தில் சுக்கிரனுடன் சம்பந்தப்பட்டு சனி வீட்டில் அமர்ந்தால் கன்னி கழியாத பெண்னை புணர்ச்சி செய்ய அவல் உள்ளவன்.
- 7 க்கு 10 க்குரியவர் செவ்வாய் விட்டில் அமர்ந்து சூரியனுடன் கலந்து சுபர் பார்வை பெற்றால் ரணசிகிச்சையில் தேர்ச்சி பெற்ற டாக்டரை மணக்கலாம்.
- 7 க்குரியவர் 11 ல் , 3 , 6 , 8 ல் சுக்கிரன் , செவ்வாய் , ராகு சேர்க்கை 2 – ல் கேது இருப்பின் , காதல் திருமணம் ஏற்பட்டு , மறுவிவாகம் ஏற்படும்.வாழ்க்கை பெரும்பாலும் அமைதியில்லாமல் காணப்படும் .இல்லறம் சோபிக்காது.
- 1,2,3க்குரியவர் சேர்க்கை 1ல் இருந்து 3ல் பாவர் அமர்ந்தால் ,7க்குரியவர் 11ல் இருப்பின் ஏக களத்திரம், திருமணத்திற்கு பிறகு நல்ல யோகம், மனைவி நல்ல குணம் ,கல்வி தகுதி பணபலம் உடையவளாக இருப்பாள்.
- 7க்குரியவர் 3ல் நட்பு ஆட்சி உச்சம் பெற்று சுக்கிரன் நீசபங்கம் பெற்று, குடும்பாதிபதி உச்சம் பெற்றால் நல்ல வசதியும் வாய்ப்பும் உள்ள பெண் மனைவியாக அமைவாள்.திருமணத்திற்கு பிறகு நல்ல யோகம் உண்டு.
- இருவர் ஜாதகத்திலும் 2,7 – மிடங்களில் சுபரும் பாவரும் ஆக கலந்து இருப்பது தோஷம்.விவாகரத்து போன்றவையும் , வேறு நபர் சேர்க்கையும் , அன்னிய ஸ்திரீ சேர்க்கையும் ஏற்படலாம்.
- இருவர் ஜாதக லக்கினமும் ஒன்றுக்கொன்று பாதக லக்கின பாவகமாக வரக் கூடாது.
- இருவரும் ஒரே மாதம் ஒரு பட்சம் என பிறப்பு இருப்பது கூடாது.மலமாத , க்ஷய மாத ஜனனம் கூடாது.
- பெண் ஜாதக லக்கினாதிபதியானவர் , ஆண் ஜாதகத்தில் 1 , 4 , 5 , 7 , 9 , 10 , 11 – ல் இருக்க வேண்டும்.நீசம் அஸ்தமனம் பகை பெறாமல் இருப்பது.இதேபோல் , ஆணிற்கும் பார்க்கவும்.
- ஆண் – பெண் ஜாதகத்தில் 1 , 2 , 4 , 5 , 7 , 9 , 10 , 11 -க்கு உரியவர்கள் ஆண் அல்லது பெண் ஜாதகத்தில் 2 , 6,8 , 12 – ல் அல்லது நீசம் – அஸ்தமனம் பெறாமல் இருப்பது முக்கியம்.
- 1 , 4 , 5 , 7 , 9 , 10 , 11 ஆன இந்த பாவாதிகளில் குறைந்தது நான்கு பாவாதிபதிகளாவது இருவருக்கும் நன்றாக இருக்க வேண்டும் .
- ஆணின் ஜென்ம லக்கின ராசியே , பெண்ணின் சந்திரன் நின்ற ராசியாக வருவதும் , ஆணின் ஜென்ம ராசியே பெண்ணின் ஜென்ம லக்கினமாக வருவது மிகச் சிறப்பு .
- பெண் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற இடமே ஆணின் ஜென்ம லக்கினமாக வருவதும் , ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற இடமே பெண் ஜென்ம லக்கினமாக வருவதும் மிகச் சிறப்பு .
- ஆணின் களத்திர ஸ்தானாதிபதி ( 7 – க்குரியவர் ) நின்ற வீடே பெண்ணின் ஜென்ம லக்கினமாக வருவதும் , பெண் ஜாதகத்தில் மாங்கல்ய ஸ்தானாதிபதி ( 8 – க்குரியவர் ) நின்ற வீடே லக்கினமாக ஆணுக்கு வருவதும் சிறப்பு.
விதிகள் தொடரும்….