பிறப்பு ஜாதகத்தில் கோச்சார ராகு நல்கும் பலா பலன்கள் !!!

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

கோச்சார ராகு

ஜனன ஜாதகத்தில் சூரியன் நின்ற ராசிக்கு ராகு கோச்சாரத்தில் வரும் காலம், ஜாதகரின் தகப்பனாருக்கு விரக்தி மனப்பான்மை உண்டாகும். ஜாதகரின் தகப்பனாருக்கும், குழந்தைகளுக்கும் ஆபத்துகள் நேரிடலாம். (அல்லது) குழந்தை நோய்வாய் படலாம்.

ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசியில் ராகு சஞ்சரிக்கும் காலம் ஜாதகர் அல்லது ஜாதகிக்கு ஒருவித இனம் புரியாத பய உணர்வு தோன்றலாம். (அல்லது) தீய சக்திகளால் ஜாதகனுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படலாம். மாந்திரீக கோளாறுகள் நீங்க துர்க்கை அல்லது ருத்ர ஜெபம் நலம் தரும்.

ஜனன ஜாதகத்தில் செவ்வாய் நின்ற ராசியில் ராகு சஞ்சாரம் செய்யும் காலம் ஜாதகனுக்கு விபத்துகள் நேரிடலாம். சகோதரனது வாழ்க்கை பாதிக்கப்படலாம். (அல்லது) பூமி லாபம் குறையலாம். (அல்லது) அண்டை அயலாறுடன் பகை உண்டாகலாம்.

கோச்சார ராகு

பொதுவாக தீய சக்திகள் என்றால் (பிளாக் மேஜிக்) பில்லி, சூனியத்தை குறிக்கும். இதற்கு மகாகணபதி சுதர்சன ஹோமம் தக்க பரிகாரமாகும். சூரிய ஹோரை, ஆவணி மாதம், சித்திரை மாதம் சுதர்சன ஹோமத்திற்கு சிறப்பாகும்.

கோச்சாரத்தின் போது 6, 8, 12 ஆம் அதிபதிகள் சம்பந்தப்பட்ட தசா புத்திகளை கவனிக்க வேண்டும். மாறாக பாதகாதிபதிகளின் தசா புத்தியையும் பராசர ரிஷி வாக்கியபடி அறியவும்.

ஜனன ஜாதகத்தில் புதன் நின்ற ராசிக்கு ராகு வரும் காலம் ஜாதகனின் புத்திசாலித்தனம் மங்கும். விவசாயியாக இருந்தால் பயிர் பச்சைகள் சேதம் அடையும். ஜாதகனின் இளைய சகோதரி வாழ்க்கையில் கஷ்டப்பட நேரிடும். மேலும் காலியிடங்கள், மனை சம்பந்தமான பிரச்சனைகள், வழக்குகள், நண்பர்களுடன் பகை, காதலியுடன் பகை, நட்புக்கு தடைகள் ஏற்படலாம்.

ஜனன ஜாதகத்தில் குரு நின்ற வீட்டுக்கு ராகு வரும்போது ஆணாக இருந்தால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படலாம். பெண் ஜாதகம் எனில் கணவனது உடல் நலம் பாதிக்கப்படலாம். சுய கௌரவம் பாதிக்கப்படலாம் (அல்லது) பிள்ளைகள் வழியில் மனக்கசப்புகள் உருவாகலாம். ரத்த சம்பந்தமான உறவினர் ஒருவரின் மரணம் ஏற்படலாம். ஜாதகனின் முகம், மூக்கு இவற்றில் கரும்புள்ளிகள் விழலாம்.

ஜனன ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற ராசியில் ராகு வரும் காலம் மனைவி ,மூத்த சகோதரி ஆகியோருக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்படலாம். புதிய வண்டி வாகனங்களில் முதலீடுகள் உண்டாகும் (அல்லது) பழைய வாகனங்களை புதுப்பித்தல் உண்டாகும். திடீர் பணவரவுகள், ஆடம்பரப் பொருள்கள் வாங்குதல் ஆகியவன உண்டாகும்.

ஜனன ஜாதகத்தில் சனி நின்ற ராசிக்கு கோச்சார ராகு வரும் காலம் நெருங்கிய உறவினர்கள் ஒருவருக்கு மரணம் உண்டாகலாம். ஈமச்சடங்குகள் செய்ய வேண்டிய நிலை உருவாகும். தீயவர்களுடன் நட்பு ஏற்பட்டு அதனால் அவமானம் சங்கடங்கள், உருவாகும். பொருள் இழப்பும், நஷ்டமும் உண்டாகும்.

ஜனன ஜாதகத்தில் கேது நின்ற இடத்திற்கு கோச்சார ராகு வரும்போது வம்பு, வழக்குகள் ஏற்படலாம். அரசு அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடலாம். செய்து தொழிலுக்கு இடையூறுகள் உண்டாக்கலாம்.

Leave a Comment

error: Content is protected !!