ரஜ்ஜூ பொருத்தமும் தாம்பத்ய சுகமும்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

ரஜ்ஜூ

பெரும்பாலும் வசியப் பொருத்தம் இருந்தாலே மண வாழ்வு சிறக்கும். அடுத்தது ரஜ்ஜுப் பொருத்தம். ரஜ்ஜூ என்றால் உடலுறுப்பு என்று பொருள். இது கொஞ்சம் அந்தரங்கமான விஷயம் பற்றியது. கணவன் மனைவி தாம்பத்திய உறவைப் பற்றிக் கூறுவது. கணவன் அல்லது மனைவியின் கை படும்போது கணவருக்கோ மனைவிக்கோ குறிப்பிட்ட உறுப்பில் கூச்சம். முழு இன்ப நாட்டம் உண்டாகும். அதாவது சென்ஸ்டிவ் பாயிண்ட் சிலருக்குத் தலையில் பரிசம் பட்டால் உணர்வு அதிகரிக்கும். எந்தெந்த நட்சத்திரங்களுக்கு எந்தெந்த பாகம் சென்ஸ்டிவ் பாயிண்ட் என்று சொல்வதே ரஜ்ஜு”.

உறுப்புகள் ஐந்து வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை: 1. பாதம், 2.தொடை, 3. தொப்புள்,4. கழுத்து, 5. தலை (சிரசு).

இந்த ஐந்தும் ஆரோகணம், அவரோகணம் என்று இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. ஆரோகணம் என்றால், ஏறு வரிசை (ஏறு முகம்) என்று பொருள்.

அவரோகனம் என்றால், இறங்கு வரிசை (இறங்கு முகம்) என்று பொருள்.

ரஜ்ஜூ

அசுபதி, மகம், மூலம் இம்மூன்றும் பாத ரஜ்ஜூ இவர்கள் காலை அதாவது பாதத்தைத் தொட்டால் கூச்சம் பெறுவர். இம்மூன்று நட்சத்திரக்காரர்களின் கணவர்/மனைவி பாதத்தைத் தடவினால் முழு தாம்பத்திய உறவு உண்டாகும்.

இவர்கள் கணவர்/மனைவி விஷய சுக(தாம்பத்ய கல்வி) நிகழ்வின்போது கீழிருந்து மேலேறுவர். அதனால்தான் இவை ஆரோகண ரஜ்ஜு நட்சத்திரங்கள் ஆகும்.

ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரக்காரர்களும் பாத ரஜ்ஜு என்பதால், அவர்களது காலை வருடினால் உணர்ச்சி வசப்படுவர். இவர்கள் விஷய சுகம் (தாம்பத்திய கலவி) இன்புறும்போது மேலிருந்து கீழிறங்குவர்.

மனைவி கணவரின் தலை, கழுத்து, மார்பு என்று முத்தமிட்டபடி இறங்குவர். எனவே, இவர்கள் அவரோகண ரஜ்ஜூவினர்.

பரணி, பூரம், பூராடம் நட்சத்திரக்காரர்கள் தொடையை வருடினால் இன்புறுவர். இவர்கள் உறவின் போது பாதம், தொடை, கழுத்து என்று முத்தமிட்டபடி இன்புறுவர். இவர்கள் அவரோகணத்தினர்,

பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களும் தொடை ரஜ்ஜூவினர். இவர்கள் மனைவி/ கணவரிடம் அனுதாபத்தையும் ஆதரவையும் பெறவே கலவியில் ஈடுபடுவர். இவர்கள் உடலின் மேலிருந்து கீழிறங்கி இன்பம் நுகர்வர். இவர்கள் அவரோகணத்தினர்.

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் தொப்புள் ரஜ்ஜு உடையவர்கள். இவர்கள் ஆரோகண ரஜ்ஜீவினர். பெரும்பாலும் துக்கத்துடன் தாம்பத்திய இன்பம் துய்ப்பர்.

ரஜ்ஜூ

புனர்பூசம்,விசாகம், பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தொப்புள் ரஜ்ஜூவினர். இவர்கள அவரோகண ரஜ்ஜூவினர். கணவர்மனைவியைத் தாம்பத்தியத்தின் போது ஆளுமையுடன் நடத்துவர்.

ரோகிணி, ஹஸ்தம், திருவோணத்தினர் கழுத்து ரஜ்ஜு மற்றும் ஆரோகணத்தினர்.

திருவாதிரை, சுவாதி, சதயத்தினர் அவரோகணம் மற்றும் கழுத்து நல்ல குணமுள்ளவர்.

மிருகசீரிஷம். சித்திரை, அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் தலை ரஜ்ஜூவினர் இவர்களுக்கு ஆரோகணம் அவரோகணம் கிடையாது.

ஒரே ரஜ்ஜுவினர் திருமணம் செய்தால் தொல்லைகள் உண்டு. அடுத்தடுத்த ரஜ்ஜுவானால் (அதாவது தலை, கழுத்து) சுகம் உண்டு.

அதாவது அசுபதி நட்சத்திரப் பெண் மகம் நட்சத்திர ஆணைத் திருமணம் செய்தால் ரஜ்ஜு தட்டும் என்பர்.

ஒரே ரஜ்ஜு சகோதர உணர்வையே தரும், அதே அசுபதி நட்சத்திரப் பெண் பாத ரஜ்ஜுவான கேட்டை நட்சத்திரக்காரரைத் திருமணம் செய்தால் சந்தோசம் பெறுவார். அதாவது ஆரோகண ரஜ்ஜு அதிக சுகம் தரும்.

அதாவது பரணி நட்சத்திரக்காரர் பூரம் நட்சத்திரக்காரரை மணந்தால் தொல்லை. ஆனால் உத்திரட்டாதி நட்சத்திரக்காரரை மணந்தால், அதே தொடை ரஜ்ஜு அவரோகணமானதால் அதிக சுகம் தரும். இப்படியே எல்லாவற்றுக்கும் பார்க்கலாம். வெவ்வேறு ரஜ்ஜுவாக இருப்பதே சிறப்பு.

Leave a Comment

error: Content is protected !!