சூரியன் செவ்வாய் சேர்க்கை – விதவை யோகம்
ஒருவர் ஜாதகத்தில் சூரியன் செவ்வாயுடன் இணைந்திருந்தால் அது விதவை யோகமாகும். இப்படிப் பார்க்கையில் சூரியன்+செவ்வாய் ஒரு ஜாதகத்தில் லக்கினத்தில் இணைந்தால் முதல் கணவனை ஓரிரு வருடத்தில் இழந்து மறுமணம் பூணுவார்.
மிக முக்கிய குறிப்பு :
கீழே கொடுக்கப்பட்டுள்ள கட்டங்கள் எடுத்துக்காட்டு கட்டங்களே. இதே லக்னம் என்று கொள்ள வேண்டாம். எந்த லக்னமானாலும் அங்கிருந்து கணக்கில் கொள்ள வேண்டும். எந்த லக்னம் ஆனாலும் அங்கிருந்து 1,2,7,12-ல் சூரியன் செவ்வாய் சேரின் விதவை யோகம்.
சூரியன் செவ்வாய் இணைவு 7 இல் இருந்தால், விவாகரத்தாகும்.
சூரியன் செவ்வாய் இணைவு இரண்டில் இருந்தால், உடல் ஊனமுற்று கணவர் செயலிழந்து இருப்பார். 12 இல் இருந்தால், கணவன் உயிருடன் இருந்தும் நகைகள் அணியாதிருப்பார்.
சூரியன் செவ்வாய் இணைவு 6, 8, 12 இல் இருந்தால், கணவர் / மனைவி பிறருடன் கள்ளத் தொடர்பு கொள்ள விதவை நிலை எய்துவர் என்பது விதி.
சூரியன், செவ்வாய் இரண்டில் ஒன்று நீச்சமுற்றால் கணவர் / மனைவி பைத்தியம் பிடித்து அலைவார். செவ்வாய் அல்லது சூரியன் உச்சமானால் இரண்டு திருமணம் புரிவார்.
சூரியன், செவ்வாய் இணையும் போது ஒரு கிரகம் தான் உச்சமாகும் அல்லது நீச்சமாகும். இரண்டும் ஆகாது. பிறன் மனை பேணல், பைத்தியம் பிடித்தனும் விதவாநிலைக்குச் சமம்.
சூரியன், செவ்வாய் பரஸ்பர பார்வை பார்த்தால் விதவை நிலை உண்டு. ஆனால். வர்கோத்தமமானால் (ஒன்றோ அல்லது இரண்டுமோ) விதவை யோகம் கிடையாது. புதன் பார்வை செவ்வாய் மீது பட்டால் வெள்ளுடை தரிப்பார். துறவியோல் இருப்பார்.