கோமேதகம் | Hessonite Garnet Stone
இக்கல்லை அணிபவர்கள் நீதிமான்களாய் இருப்பர், நீதி மன்றம் மற்றும் நியாய விலைக்கடைகளில் வேலை செய்பவர்கள் இக்கல்லை அணியலாம். தணிக்கையாளர்களும், விமானப்படைத் தளபதிகளும், அலுமினியம் மற்றும் வெல்லமண்டி, சர்க்கரை ஆலையில் பணியாற்றுபவர்களும், அதன் முதலாளிகளும் இக்கல்லை அணியலாம்.
இக்கல்லை அணிபவர்கள் வடமொழிப் புலமை பெறுவர்.
மீனத்தில் சுக்கிரன் இருக்கப் பிறந்தவர்களும், அரசியல்வாதிகளும் இதை அணியலாம். இறை வழிபாடு செய்பவர்கள் அணியலாம். தரை விரிப்பு தயாரிப்பாளர்கள். நாதஸ்வர வித்வான்கள் மற்றும் இந்து அறநிலையத்துறை. கோயில் கணக்கு எழுதுபவர்கள் அணியலாம்.
அபாயம் இல்லாத இக்கல்லை யார்வேண்டுமானாலும் அணியலாம். இக்கல் சிறுநீரக இடர்ப்பாடுகளை நீக்கவல்லது பெட்டிக்கடை வைத்திருப்பவர். இரும்பு வியாபாரம் செய்பவர்கள் அணியலாம். அழகுப் பொருட்கள் விற்பவர்கள் அணிவதால் நல்ல இலாபமுண்டாகும்.