உங்கள் ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளதா ? எவ்வாறு கண்டுபிடிப்பது ? பரிகாரம் என்ன ?

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Updated on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

பித்ரு தோஷம்

பித்ரு தோஷம்

குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை ‘பித்துருக்கள்’ என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் “பித்ரு தோஷம்“, இந்த தோஷம் நமக்கு உள்ளதா என்பதை எளிமையாக கண்டறிய முடியும்.

ஜாதகத்தில் கண்டறிவது எப்படி ?

ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்துருதோஷம் உண்டு.

பரிகாரம்:

ராமேஸ்வரம் சென்று ‘திலஹோமம்’ செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத் சென்று திவசம் செய்வதும், ‘திருவெண்காடு’ சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்திற்குப்பரிகாரம்.

திலஹோமம்:

குடும்பத்தில் யாரேனும் விபத்துக்களில் இறந்திருந்தாலோ அல்லது தற்கொலை செய்து கொண்டிருந்தாலோ மட்டும் ‘திலஹோமம்’ செய்ய வேண்டும்.அப்படி இல்லாமல் இயற்கை மரணம் அடைந்திருந்தால் திலஹோமம் செய்ய வேண்டியதில்லை.

தோஷத்தினால் ஏற்படும் தீயவிளைவுகள் :

  • பித்ரு தோஷம் உள்ளவர்களுக்குதிருமணம் நடக்காது அல்லது மிகவும் தாமதமாக நடக்கும். விவாகரத்து ஏற்படலாம் அல்லது அன்னி யோன்னியம் இராது.அல்லது குழந்தைபாக்கியம் இருக்காது.
  • ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதை. மனநோய் காரணமாக தாம்பத்ய வாழ்க்கை பாதிக்கும்.
  • ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.
  • கலப்புத்திருமணம், ரகசியதிருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு.

பித்ரு தோஷம்சாபம் நீங்க மந்திரம்

பித்ரு தோஷம்

தோஷம் வர பல்வேறு காரணம்:

  • கருச்சிதைவு
  • பெற்றோர்களை இறுதிக்காலத்தில் கவனிக்காதது.
  • இளையதாரத்துப்பிள்ளைகள் மூத்தோருக்கு திதி தராதது.
  • தந்தைக்கு எத்தனை தாரம் இருந்தாலும் அனைவருக்கும் தவறாமல் திதி தர வேண்டும்.
  • ஆண் வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை, சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டாலும் பித்ரு தோஷம் வரும்.
  • துர்மரணம் அடைந்தவர்களுக்கு திதி கொடுப்பதோடு மட்டுமின்றி கயா சென்று சிரார்த்தம் செய்யாவிடில் பித்ரு தோஷம் வரும்.

தோஷத்தில் மிக கொடிய தோஷம் பித்ரு தோஷம்.

இவர்களது குடும்பம் ஜோதிடரீதியில் எவ்வளவு அதிர்ஷ்டமான கிரக நிலைகள் பெற்று இருந்தாலும், அந்த பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருகளும், பித்ரு தேவதைகளும் தடை செய்வார்கள். பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் தன்மை உடையது.

பரிகாரம்

“சிவபெருமானுக்கு சந்தன அபிஷேகம்” செய்யவும். இந்த அபிஷேகம் அமாவாசை அன்று செய்யவும். இந்த அபிஷேகத்தை பார்த்த நாள் முதல் உங்கள் பித்ரு தோஷம் விலகும்.

பித்ரு பூஜை செய்ய சிறந்த தலம்

சிவன் கோயில் சென்று அபிஷேகம் செய்ய இயலாதவர்கள்,

100 கிராம் பச்சரிசி, அகத்திக்கீரை, 50 கிராம் கருப்பு எள், 100 கிராம் வெல்லம், ஒரு வாழைக்காய் ஆகியவற்றை அமாவாசை அன்று பசுமாட்டுக்கு கொடுக்க “பித்ரு தோஷம்” நீங்கும். தொடர்ந்து ஒன்பது அமாவாசைக்கு இந்த எளிய பரிகாரத்தை செய்ய வேண்டும் இதனால் “பித்ரு தோஷம்” முழுமையாக நீங்கும்.

பித்ரு தோஷம்

பல்வேறு இடையூறுகள் தீர

உலகம் முழுவதும் பல்வேறு பறவைகள் இருந்தாலும் குறிப்பிட்ட ஊரில் தான் சில பறவைகளைக் காண முடியும். ஆனால் காக்கை உலகம் முழுவதும் பரவி இருக்கும் ஒரே பறவை இனமாகும். இந்த காக்கையை ‘சனிபகவானின்’ வாகனமாக மட்டும் பார்க்காமல் நமது முன்னோர்களின் வடிவான பித்ருகளாகவும் வழிபட்டுள்ளனர். நமது முன்னோர் தொடர்ந்து பல்வேறு பிரச்சனைகளால் உழல்பவர்கள் தினமும் காக்கைக்கு ஒரு பிடி உணவு அளித்தால் அவர்களின் பிரச்சனையின் தீவிரமும் பிடி அளவு வீதம் கரைய துவங்குவதாக முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்தப் பழக்கம் மெதுவாக மறைந்து தற்போது அமாவாசை, மஹாளய அமாவாசை போன்ற நாட்களில் மட்டும் காக்கைக்கு உணவு விடுகிறோம். முன்னோர் பழக்கத்தை நாமும் பின்பற்றினால் பிரச்சனைகளின் தீவிரத்தில் இருந்து விடுபடுவோம்.

Leave a Comment

error: Content is protected !!