Homeஜோதிட குறிப்புகள்ஜோதிடம் : சூரியன் சந்திரன் புதன் ஆகிய கிரகங்கள் சேர்ந்து எந்த பாவத்தில் இருந்தால் என்ன...

ஜோதிடம் : சூரியன் சந்திரன் புதன் ஆகிய கிரகங்கள் சேர்ந்து எந்த பாவத்தில் இருந்தால் என்ன நடக்கும் ?

சூரியன் சந்திரன் புதன்

சூரியன், சந்திரன், புதன் லக்னத்தில் இருந்தால், ஜாதகருக்கு நல்ல பேச்சாற்றல் இருக்கும். நன்கு படித்தவராக இருப்பார். பெயர், புகழ் இருக்கும். விவாதம் புரிவதில் வல்லவராக இருப்பார். பல கலைகள் அறிந்தவராக இருப்பார். வாழ்க்கையின் பிற்பகுதி சந்தோசமாக இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன் இரண்டாம் பாவத்தில் இருந்தால். ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். சிலர் மருத்துவராக இருப்பார்கள். கண்ணில் நோய் இருக்கும். நல்ல பண வசதி இருக்கும். ஜாதகர் சூழலுக்கு ஏற்றபடி பேசுபவராக இருப்பார். தைரியசாலியாக இருப்பார். 

சூரியன், சந்திரன், புதன் மூன்றாம் பாவத்தில் இருந்தால் ஜாதகருக்கு துணிச்சல் குணம் இருக்கும். கடுமையாக உழைத்து பணத்தை சம்பாதிப்பார். சுய முயற்சியால் முன்னுக்கு வருவார். பகைவர்கள் அதிகமாக இருப்பார்கள். பெயர், புகழ் இருக்கும். ஜாதகர் பல கலைகளை கற்றவராக இருப்பார்.

சூரியன், சந்திரன் புதன் நான்காம் பாவத்தில் இருந்தால் ஜாதகர் தைரியமானவராக இருப்பார். பெற்றோரால் சந்தோஷம் இருக்கும்.சிலருக்கு குடும்பத்தில் இருப்பவர்களே துரோகம் செய்வார்கள்.சொத்தை அபகரிக்க முயற்சிப்பார்கள். சிலர் கலைத்துறையில் வித்தகர்களாக இருப்பார்கள். சிலர் கைத்தொழிலில் திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். சிலர் நன்கு படித்தவர்களாக இருப்பார்கள். வாரிசுகளால் சந்தோஷமிருக்கும். கணவன் மனைவி உறவு சுமாராக இருக்கும்.

 சூரியன், சந்திரன், புதன் ஐந்தாம் பாவத்தில் இருந்தால் ஜாதகர் நல்ல அரசாங்க அதிகாரியாக இருப்பார். நிறைய படித்தவராக இருப்பார். ஒரு வாரிசு இருக்கும். பெண்ணுக்கு உஷ்ணம் இருக்கும். சிலருக்கு வயிற்றில் புண் இருக்கும். ஜாதகருக்கு குடும்பத்தில் மரியாதை இருக்கும். அவர் கடுமையான உழைப்பாளியாக இருப்பார்.

சூரியன், சந்திரன், புதன் ஆறாம் பாவத்தில் இருந்தால் ஜாதகர் சூழலுக்கு ஏற்றபடி செயல்படுவார். மற்றவர்களிடம் எப்படி பழக வேண்டும் என்பதை தெரிந்தவராக இருப்பார். பல வியாபாரங்களில் ஈடுபடுவார். ஒரே தொழிலில் நிரந்தரமாக இருக்க மாட்டார். பகைவர்களை வெல்வார். அன்னைக்கு உடல் நல பாதிப்பு இருக்கும். சிலருக்கு சிறுநீரக பாதிப்பு இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன் ஏழாம் பாவத்தில் இருந்தால் ஜாதகரின் மனைவி அழகாக இருப்பாள். சிலருக்கு திருமண தடை இருக்கும். ஜாதகர் கடுமையான உழைப்பாளியாக இருப்பார். சிலருக்கு கோப குணம் இருக்கும். சிலருக்கு ரத்த அழுத்தம் இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன் எட்டாம் பாவத்தில் இருந்தால் வாழ்க்கையின் முன் பகுதியில் பிரச்சனை இருக்கும். நோய்களின் பாதிப்பு இருக்கும். எட்டு வயது வரை அடிக்கடி மருத்துவரை பார்க்க வேண்டியதாக இருக்கும். சிலருக்கு முன்கூட்டியே சில விஷயங்களை தெரிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கும். சிலருக்கு அதிகமான கனவுகள் வரும். சிலருக்கு நீரால் விபத்து இருக்கும்.

கிரகங்களின் பார்வை பலன்கள்

சூரியன், சந்திரன், புதன் ஒன்பதாம் பாவத்தில் இருந்தால் பெயர், புகழ் இருக்கும். ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். ஜாதகர் சுய முயற்சியால் குடும்பத்தை காப்பாற்றுவார். சிலர் தேவையற்றதை பேசுவார்கள். அதன் காரணமாக எதிரிகள் உண்டாவார்கள்.

சூரியன், சந்திரன், புதன் பத்தாம் பாவத்தில் இருந்தால் ஜாதகர் புகழ்பெற்ற மருத்துவராகவோ, விஞ்ஞானியாகவோ, நல்ல அரசாங்க அதிகாரியாகவோ இருப்பார். நிறைய பணத்தை சம்பாதிப்பார். திறமைசாலியாக இருப்பார். 36 வயதுக்கு பிறகு வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

சூரியன், சந்திரன், புதன் பதினோராம் பாவத்திலிருந்தால் ஜாதகர் நன்கு சம்பாதிப்பார். தைரிய குணம் இருக்கும். சூழலை பார்த்து பேசுவார். பயணம் செய்து நிறைய மனிதர்களை சந்திப்பார். அவர்களிடம் தன் திறமையை வெளிப்படுத்துவார். அதன் மூலம் பணத்தை சம்பாதிப்பார். நிறைய படித்தவராக இருப்பார். வயிற்றில் பிரச்சனை இருக்கும்.

சூரியன், சந்திரன் புதன் 12ஆம் பாவத்தில் இருந்தால், திருமண தடை இருக்கும். பெயர், புகழ் இருக்கும். தூக்கம் சரியாக வராது. வயிற்றில் பிரச்சனை இருக்கும். சிலரின் தந்தைக்கு உடல்நல பாதிப்பு இருக்கும். சிலர் வெளியூர்களில் சென்று தொழில் செய்வார்கள். சிலருக்கு தலைவலி இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!