கனவு பலன்கள்
குறிப்பு :பகலில் காணும் கனவிற்கு பலன் இல்லை
இரவில் முதல் ஜாமத்தில் மாலை 6:00 மணி முதல் இரவு 8:24 மணிக்குள் கண்ட கனவு ஒரு வருடத்தில் பலிக்கும்.
இரண்டாம் ஜாமத்தில் இரவு 8:24 மணி முதல் 10:48 மணிக்குள் கண்ட கனவு 3 மாதத்தில் பலிக்கும்.
மூன்றாம் ஜாமத்தில் இரவு 8:48 முதல் 1:12 மணிக்குள் கண்ட கனவு ஒரு மாதத்தில் பலிக்கும்.
நான்காம் ஜாமத்தில் இரவு 1:12 முதல் 03:36க்குள் கண்ட கனவு பத்து தினங்களில் பலிக்கும்.
ஐந்தாம் ஜாமத்தில் அருணோதயத்தில் விடியற்காலையில் 03:36 மணி முதல் 06:00 மணிக்குள் கண்ட கனவு உடனே பலிக்கும்.
நல்ல கனவு கண்டால் மறுபடியும் நித்திரை செய்யலாகாது. கெட்ட கனவு கண்டால் கை, கால், கழுவி கடவுளை தியானித்து பிறகு தூங்க வேண்டும்.
சுப கனவுகள்
பசு, எருது, யானை, தேவாலயங்கள், அரண்மனை, மலை உச்சி, விருட்சம் இவைகளில் மேலேறுதல், மாமிச பக்ஷணம், தயிர் அன்னம் புசித்தல், வெள்ளை வஸ்திரம் தரித்தல், ரத்தினாபரங்கள் கானல், சந்தனம் பூசிக்கொள்ள, வெற்றிலை பாக்கு தரித்தல், கற்பூரம், அகில், வெள்ளை புஷ்பம் இவைகளை கண்டால் சொற்ப செல்வம் உண்டாகும்.
வெண்ணிற பாம்பு கடித்தல், தேள் கடித்தல், சமுத்திரம் தாண்டல், நெருப்பில் அகப்படுதல், மலஜலம் இவைகளை கண்டால் தன லாபம் உண்டு.
ஜீவன பட்சி சகுனங்கள்
வலியன், கருடன், காட்டுகாடை, கழுகு, உடும்பு, ஆந்தை, கீரி, குரங்கு, பராதுவாசம், மான், காடை, கோட்டான், நாய், அணில், மூஞ்சுறு இவை வலப்பக்கம் இருந்து இடது பக்கம் போனால் சுபம். காரிய ஜெயம்.
நாரை, விச்சுளி, காக்கை, செம்போத்து, கிளி, கொக்கு, மயில், கோழி, ஓணான், புள்ளிமான், புனுகு பூனை, புலி, நரி, நாராயணபட்சி, கள்ளி காக்கை, குயில், மாடு, எருமை இவைகள் இடமிருந்து வலப்பக்கம் போனால் சுப காரியம் ஜெயம்.
பாம்பு பூனை முயல் குறுக்கிடல் ஆகாது.
சுப சகுனங்கள்
கன்னிகை, பசு, பட்சி கூட்டம், சங்கு நாதம், தயிர், புஷ்பம், குதிரை, யானை, மூஞ்சூரின் சத்தம், வேத ஓசை, கழுதை குதிரை கனைத்தல், நாய் உதறல், ஆந்தை கிளை கூட்டல், ரிஷபம், கட்டுச் சாதம், பிரேதம், கல்யாணம், மேள வாத்தியம், ரெட்டை மீன், ரெட்டை பூரண கும்பம்,தாசி, சுமங்கலி, மாமிசம், பிரியமான வாக்கு,இரட்டை பிராமிணர், கொடி, கடை, கரும்பு, நரி, கள்ளு, அரசன், முத்து, அட்சதை, பொறி, பேரி வாத்தியம், தாமரை, ஏரி, நெருப்பு, சலவை வஸ்திரம், வாகனம் இவை எதிர் பட்டால் உத்தமம்.
அசுப சகுனங்கள்
பைத்தியக்காரர், குருடர், விரூபிகள், நொண்டி, விறகு கட்டு, மொட்டை தலை, விரிதலை, எண்ணைதலை, நோயாளி, வைத்தியன், வானியன், தட்டான், ஒற்றை பிராமணன், இரட்டை சூத்திரர்,மூன்று வைசியன், கணக்கண், கணக்கோலை, சடாதாரி, குயவன், சன்னியாசி, நம்பி, தூரஸ்திரி, அமங்களை, அழுத குரல், அலி, எண்ணெய் குடம், பால், பயங்கர வேஷதாரி, அரிவாள், கோடாலி, கடப்பாரை, புதுப்பானை, மோர் குடம், குரங்கு, பருத்தி, மூக்கில்லாதவன், சிவந்த புஷ்பம், ஈர வஸ்திரம் தரித்தவன், பூனை சண்டை, குடும்ப கலகம், அகால மழை தூறல்,பசுவினுடைய தும்மல், தடுக்கி விழுதல், இடி, காற்று, உபவாசம்,ஷவரம் ,துக்கம்,ஒற்றை குரலோசை,பன்றியுருமள்,அபான வாயு பறிதல்,கொக்கரித்தல்,ஓவென கத்தல்,தலை தட்டல்,