உங்கள் ஜாதகத்தில் குலதெய்வ சாபம் உள்ளதா? எப்படி கண்டுபிடிப்பது? குலதெய்வ சாபத்தால் ஏற்படும் விளைவுகள்?சாபத்திற்கான பரிகாரம் ?

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

குலதெய்வ சாபம்

சாபங்களில் மொத்தம் 13 வகை உண்டு. அதில் கொடுமையான சாபம் என்றால் அது குலதெய்வ சாபம் என்றே கூற வேண்டும். இந்த குலதெய்வ சாபம் எதனால் ஏற்படுகிறது? நமது ஜாதகத்தில் குலதெய்வத்தின் சாபம் இருக்கிறதா என்பதை கண்டறிவது எப்படி? அதற்குண்டான பரிகாரங்கள் என்ன? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

நமது முன்னோர்கள் வழி வழியாக வணங்கும் ஒரு தெய்வமே குலதெய்வம் ஆகும். மற்ற அனைத்து தெய்வங்களை காட்டிலும் குலதெய்வத்திற்கு சக்தி அதிகம். எமன் கூட ஒருவரின் உயிரை பறிக்க வேண்டும் என்றால் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே பறிப்பார். இப்படி பல அபூர்வ சக்திகளை கொண்ட குல தெய்வத்தின் சாபம் எதனால் ஏற்படுகிறது?

ஒருவரது வம்சாவழியில் வரும் தாத்தா, பாட்டி தாய், தந்தையர் போன்றோர்கள் குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய வருடாந்திர பூஜையை முறையாக செய்ய தவறினாலோ, குலதெய்வத்தை அடியோடு மறந்து வேறு இஷ்ட தெய்வங்களை மட்டுமே வணங்கத் தொடங்கி குலதெய்வ கோயிலுக்கு செல்வதை முற்றிலும் தவிர்த்து விட்டாலோ, குலதெய்வத்தின் சாபம் நிச்சயம் ஏற்படும்.

குலதெய்வம் சாபம் இருக்கிறதா என்பதை ஜாதகத்தை வைத்து எப்படி அறிவது?

குல தெய்வசாபம்
குல தெய்வசாபம்

ஒருவருடைய ஜாதகத்தில் குலதெய்வத்தை குறிக்கக்கூடிய கிரகமாக விளங்குகிறார் சனிபகவான். அதன் அடிப்படையில் ஒருவருடைய ஜாதகத்தில் சனி பகவான் இருக்கின்ற வீட்டிலிருந்து 6-ம் வீட்டில் புதன்,சந்திரன், சூரியன் ஆகிய கிரகங்கள் இருந்தால் அந்த ஜாதகருக்கு குலதெய்வ சாபம் இருக்கிறது என்பதை தெளிவாக அறியலாம்.

குலதெய்வ சாபத்தால் ஏற்படும் விளைவுகள் என்ன?

குலதெய்வ சாபம் உள்ள ஒருவருக்கு திருமணத்தில் தடை இருக்கும். சிலருக்கு குழந்தை பேறு இருக்காது. எதைத் தொட்டாலும் அதில் ஒரு இழுபறி இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்காது. இப்படி குலதெய்வ சாபத்தால் பல துன்பங்கள் வரும். இந்த துன்பமானது நமக்கு மட்டுமில்லாமல் நமது சந்ததியினருக்கும் தொடரும். நம்மோடு இந்த சாபம் முடிந்து நமது சந்ததியினருக்கு இது தொடராமல் இருக்க சாபம் நிவர்த்தி செய்வது அவசியம்.

குலதெய்வ சாபம்

குலதெய்வ சாபத்திற்கான பரிகாரம்

நம்முடைய குலதெய்வம் யார் என்பதை அறிந்திருந்தால் குலதெய்வ சாப பரிகாரம் என்பது மிக எளிதாக இருக்கும். குலதெய்வம் பற்றி அறியாதவர்கள் முதலில் குலதெய்வத்தை அறிவது அவசியம். பின் நம் முன்னோர்கள் எப்படி குல தெய்வத்தை வழிபட்டார்களோ அதே போல் நாமும் குல தெய்வத்தை வழிபட வேண்டும். ஒரு சிலருக்கு கிடாய் வெட்டி பொங்கல் வைக்கும் பழக்கம் இருக்கும். சிலர் வெறும் பொங்கல் வைத்து குல தெய்வத்திற்கு அபிஷேகம் செய்வார். இப்படி நம் முன்னோர்கள் எந்த முறையில் குல தெய்வத்தை வணங்கினார்களோ அதே முறைப்படி நாம் வணங்க வேண்டும்.

நாம் இத்தகைய நாள் செய்த தவறுக்கு குலதெய்வத்திடம் மன்றாடி வேண்டி நாம் கொடுக்கும் பூஜையை ஏற்கும் படி கேட்க வேண்டும். இதனால் குலதெய்வம் மனம் மகிழ்ந்த நிச்சயம் நம்மை மன்னித்து ஏற்றுக் கொள்ளும்.

Leave a Comment

error: Content is protected !!