ஆயுத பூஜை ,சரஸ்வதி பூஜை கொண்டாடுவது ஏன் ? ஆயுத பூஜை என்றால் என்ன ? சரஸ்வதி பூஜையின் பலன்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

ஆயுத பூஜை – சரஸ்வதி பூஜை

நவராத்திரி பண்டிகையின் முக்கிய விழாவான ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர்.

கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்திற்கு உரிய லட்சுமி தேவியையும், வீரத்திற்கு உரிய பார்வதி தேவியையும் போற்றி வணங்கும் பண்டிகையாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

கல்வியும், நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றை கடவுளாக கருதி வழிபடுவதே இதன் ஐதீகம்.

நவராத்திரி பண்டிகை நாளில் 9 நாட்களும் பூஜை செய்ய இயலாதவர்கள் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாளில் பூஜை செய்து வணங்குவார்கள்.

ஆயுத பூஜை அன்று தாங்கள் செய்யும் தொழிலில் நிபுணத்துவம் பெற்று தங்கள்தொழில் நன்கு விருத்தி அடைவதற்காக தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள், இசைக்கருவிகள் போன்ற பொருட்களை நன்கு சுத்தப்படுத்தி பூஜை செய்வார்கள்.

இந்த நாளே ஆயுத பூஜை என்று அழைக்கப்படுகிறது. இந்த பூஜை நவராத்திரியின் 8ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

ஆயுத பூஜை

ஆயுத பூஜை என்றால் என்ன?

நவராத்திரி கொண்டாட்டத்தின் இறுதி நாளான 9வது நாள் வழிபாடு தான் ஆயுத பூஜை துர்க்கை அம்மனுக்கும், மகிஷாசுரனுக்கும் இடையே 8 நாட்கள் சண்டை நடைபெறுகிறது. 5 நாட்கள் கழித்து 9வது நாள் மகிஷாசுரனை வதம் செய்கிறாள் துர்க்கை. இந்த நாளையே துர்க்கா பூஜை என்றும், ஆயுத பூஜை என்றும் அழைக்கின்றனர். 9 நாட்கள் சண்டை, மகிஷாகரன் வதத்துடன் வெற்றிப்பெறுவதால் 10வது நாளை விஜயதசமி என்றும் கொண்டாடுகின்றோம்.

மக்கள் தன் தொழிலுக்கான மூல ஆயுதமாக இருக்கும் பொருட்களை பூஜிக்கும் நாளாகவும் நவமி திதியில் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இத்தினம் சரஸ்வதி பூஜை என்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது.

ஆயதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்த தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இறைவன் அனைத்திலும் நிறைந்திருக்கிறார் என்பதை உணர்த்துவதே இதன் ஐதீகம். இதுவரை தொழில் சிறப்பாக நடந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், இனி சிறப்பாக நடப்பதற்கு அருள் வேண்டும் வகையிலும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த நாளானது ஆயுத பூஜை என்றும், மஹாநவமி என்றும் அழைக்கப்படுகிறது.

வழிபடும் முறை

அன்றைய நாள் வீடு, கடைகளை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் கடவுளின் இருப்பிடமாகும்.

அன்றைய நாள் வாகனங்களையும் சுத்தம் செய்தல் அவசியம்.

தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள் போன்றவற்றை சுத்தம் செய்தல் வேண்டும்.

சுத்தம் செய்த பின் தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களை கடவுளாக எண்ணி பூஜை செய்ய வேண்டும்.

பூஜையின் போது பொரி, பழங்கள், பேரீச்சம்பழம் போன்றவற்றை நெய்வேத்தியமாக படைத்து வழிபடுவது சிறப்பு.

ஆயுத பூஜையின் சிறப்பு

செய்யும் தொழிலே தெய்வம். நாம் செய்யும் தொழிலுக்கு உதவிகரமாக இருக்கும் ஆயுதங்களை கடவுளாக போற்றி வணங்குவது ஆயுத பூஜையின் நோக்கமாகும். ஆயுத பூஜையன்று. ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு மட்டுமே ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று உறுதி கொள்ள வேண்டும்.

ஆயுத பூஜை

சரஸ்வதி பூஜை என்றால் என்ன ?

கல்வி அறிவை தந்து நம்மை வல்லவர்களாக்கும் சக்தி படைத்தவள் சரஸ்வதி தேவி கலைவாணியான சரஸ்வதி தேவியை பிரதானமாக கருதி, ஆராதனை செய்து வணங்கும் நாள் தான் சரஸ்வதி பூஜை.

வழிபடும் முறை

ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதி படம் அல்லது மஞ்சள், சந்தனத்தில் செய்த முகம் வைக்க வேண்டும்.

படத்திற்கு அருகம்புல், மலர் மாலைகள் அணிவிக்க வேண்டும்.

மேஜையின் மேல் புத்தகங்களை அடுக்கி, படத்தின் முன் இலை விரித்து, வெற்றிலை பாக்கு, பழம், பொரி, கண்டல், சர்க்கரை பொங்கல் ஆகியவற்றை படைக்க வேண்டும்.

அதன் பிறகு சரஸ்வதி தேவிக்கு நெய் தீபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.

சிறு குழந்தைகளுக்கு பிரசாதம், கல்வி உபகரணங்கள் போன்றவற்றை கொடுக்க வேண்டும்.

மறுநாள் காலையில் புதிதாக இலைபோட்டு வெற்றிலை பாக்கு, பழம், பொரி படைத்து பூஜை செய்த பின் சரஸ்வதி படத்தை எடுத்து விட வேண்டும்.

மஞ்சள் அல்லது சந்தனத்தில் முகம் வைத்திருந்தால் அதை நீரில் கரைத்து செடிகளுக்கு ஊற்றலாம்.

ஆயுத பூஜை

சரஸ்வதி பூஜையின் சிறப்பு

நவராத்திரி நாட்களில் அன்னையின் அருள் பெற ஒன்பது நாட்களும் விரதமிருந்து பூஜிக்க இயலாதவர்கள் சரஸ்வதி பூஜையன்று மட்டும் அம்மனை பூஜித்து வணங்கினால் அம்பிகையின் அருள் பூரணமாய் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்நாள் கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாளாகும்.

Leave a Comment

error: Content is protected !!