திருமண தடை
காலா காலத்தில் திருமணம் ஆகாத ஆண்கள் கீழ்கண்ட பொருட்களை ஒரு வெள்ளிக்கிழமை அன்று காலையில் குளித்து முடித்த பின் சேகரிக்க வேண்டும்.
1.சந்தனக்கட்டிகள் – 7
2.காசு (நாணயம் )- 7
3.கற்கண்டு – 7
4.அரிசி -70கிராம்
5.லவங்கம் -7
6.பூணூல் -7
7.வெள்ளை மலர் -7
8.வெள்ளைத்துணி -70 செ.மீ
சேகரித்த பொருட்களை சிவனும் பார்வதியும் திருமண கோலத்தில் இருக்கும் போட்டோ அல்லது படத்தின் முன்வைத்து திருமண தடைகள் நீங்கி தனக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என மனதிற்குள் வேண்டிக் கொள்ளவும். மனதிற்குள்ளேயே ஒரு குறிப்பிட்ட தொகையை காணிக்கையாக அளிப்பதாக தெய்வத்திடம் தெரிவிக்க வேண்டும்.
பின் மேற்கண்ட பொருள்களையும், காணிக்கை தொகையையும் ஒரு வெள்ளை துணியில் கட்டி யாருக்கும் தெரியாத மறைவிடத்தில் வைக்கவும். தொடர்ந்து 40 நாட்கள் சிவனையும் பார்வதியையும் வழிபட வேண்டும். அவ்வாறு வழிபடும்போது தன்னுடைய எண்ணம் நிறைவேற அருள் புரியுமாறு வேண்டிக் கொள்ள வேண்டும்.
40 ஆம் நாள் குளித்து முடித்த பின் சிவனும் பார்வதியும் எழுந்தருளியுள்ள ஆலயத்திற்கு சென்று வழிபட்டு பின் மேற்கண்ட பொருள்களையும், காணிக்கையையும் கோயில் பூசாரிக்கு தானமாக கொடுக்கவும். இவ்வாறு முழு நம்பிக்கையுடன் செய்தால் திருமண தடைகள் நீங்க விரைவில் திருமணம் நடைபெறும்.