நிறங்கள் பேசும் என்றால் நம்புவீர்களா? எந்த நாளில் எந்த நிறம் பயன்படுத்த வேண்டும்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

நிறங்கள் பேசும் என்றால் நம்புவீர்களா? ஆம், தினம் நிறங்கள் மனிதர்களுடன் பேசிக்கொண்டேதான் இருக்கின்றன. அதனை புரிந்து கொள்ளும் திறன் நமக்கு இருக்கிறதா “என்றால் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். 

கருநீலம் பழமையை இரக்கத்தை பேசுகிறது. பச்சை நிறம் பசுமையை குளிர்ச்சியை பேசுகிறது. வெண்மை நிறம் கம்பீரத்தை பேசுகிறது. பிங்க் நிறம் அன்பை பேசுகிறது. ஆம், வாரத்தின் நாட்கள் ஏழு, சூரியனில் இருந்து பிரியும் வண்ணங்களும் ஏழு. ஆகவே, வாரத்துடன் வண்ணங்கள் தொடர்பு கொண்டுள்ளதால், கிழமைகளுடன் வண்ணங்கள் தொடர்பு கொண்டுள்ளது என்பதை உணரலாம்.

கிழமைகளும் அதன் வண்ணங்களும்

ஞாயிறு 

ஞாயிறு  என்பது சூரியனுக்கு உகந்த நாள். அன்று சூரியனின் கதிர்கள் அதிகமாக இருப்பதால், ஆரஞ்சு வண்ணம் அதிகமாக இருக்கும். அதற்கேற்ற உடைகளையோ வண்ணத்தையோ பயன்படுத்துவதன் காரணத்தால் ஆரோக்கியம், தந்தையின் ஆசி ஆகியவற்றை பெறலாம். 

உயர் அதி காரிகளை இந்த நாட்களில் சந்திப்பதால் உங்களுக்கு ஆதரவான வாய்ப்புகள் வரும்.

திங்கள் 

 திங்கள் என்பது சந்திரனுக்கு உகந்த நாள். அன்று, சந்திரனின் கதிர்கள் அதிகமாக இருப்பதால், வெண்மை நிறத்தின் வண்ணம் அதிகமாக இருக்கும். திங்களன்று வெண்மையின் நிறத்தையோ அல்லது வெளிர் நிறத்தையுடைய உடைகளை பயன்படுத்துவதால், தாயின் ஆசியையும், மனமகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் பெறுவீர்கள்.

எந்த நாளில் எந்த நிறம் பயன்படுத்த வேண்டும்

செவ்வாய்

செவ்வாய்,என்பது சிவந்த வண்ணத்தை தங்களுக்குள் கொண்டுள்ளதால், மருத்துவம் தொடர்பான முயற்சிகளும், புது முயற்சிகளும் நன்மையை அளிக்கும். போட்டி, நிலம் மற்றும் இளைய சகோதரர் தொடர்பான விஷயங்களுக்கு தீர்வு காணலாம். சிவப்பு என்பது வண்ணம் அல்ல வேகம்.

புதன்

புதன்,என்பது பச்சை வண்ணத்தை தாங்கியுள்ள குளிர்ச்சி தன்மை உடை யது. ஜோதிடம், படிப்பு, ஆய்வு, தாய் மாமன் தொடர்பான விஷயங்களுக்கு பச்சை நிறத்தை கொண்டு தீர்வு காணலாம். பச்சை என்பது ஈர்க்கின்ற குளுமையாகும்.

வியாழன்

வியாழன் என்பது மஞ்சள் வண்ணத்தை தாங்கியுள்ளது. ஞானம், கற்பித்தல், குரு, பக்தி, ஆசிரியர் தொடர்பான விஷயங்களுக்கான தீர்வை மஞ்சள் நிறத்தைகொண்டு தீர்வு காணலாம். மஞ்சள் என்பது ஞானத்தின் வண்ணமாகும்.

வெள்ளி

வெள்ளி என்பது பிங்க் வண்ணத்தை தொடர்புபடுத்துகிறது. வாசனை உடைய பிங்க் நிறம் அதாவது இளஞ்சிவப்பு நிறத்தை பயன்படுத்தினால் போதும். கணவன், மனைவி, கவிதை, ஆடம்பரம், அத்தை, காதலி தொடர்பான விஷயங்களை தொடர்பு கொள்ளும் போது, இளஞ்சிவப்பு நிறம் வைத்துக் கொண்டால் பேருதவியாக இருக்கும்.

சனி

சனி என்பது கருநீலத்தை குறிக்கும். சனி என்பது பழமையை குறிக்கும். பாரம்பரிய சொத்துகள் தொடர்பான பிரச்னைகள் மற்றும் தொழிலாளர்கள், தொழில் தொடர்பான பிரச்னைகளுக்கு

தீர்வு காணும் போது, நீல வண்ணத்தை பயன்படுத்திக் கொள்ளும் போது, சரியான தீர்வுகள் கிடைக்கும்.

Leave a Comment

error: Content is protected !!