ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025 – கடக ராசி

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

திரு கார்வனம்

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025 – கடக ராசி

மனோகாரகனான சந்திரனை ஆட்சி வீடாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே!! உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! வரும் 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு சாதகமாக இருக்குமா? அல்லது பாதகமாக இருக்குமா? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்..

ஆண்டின் தொடக்கத்தில் முயற்சிகளை முடுக்கிவிட்டால் முன்னேற்றம் மளமளன்னு இருக்கும். இதுவரைக்கும் இருந்த மன பயம் விலகி தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இந்த சமயத்தில் வீண் ரோஷம், வேண்டாத தர்க்கத்தை மட்டும் தவிர்த்தால் வருஷம் முழுக்க வசந்தமாக இருக்கும்.

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025
ஆங்கில புத்தாண்டு கிரக நிலைகள்

வேலை செய்யும் இடத்தில் உங்கள் செயல்களில் திட்டமிடல் இருந்தால் அல்லல்கள் படிப்படியாக விலகும். இடமாற்றமும், பதவி உயர்வும் மனதிற்கு பிடித்தபடி வரணும் என்றால் நேரம் தவறாமை அவசியம். முயற்சிகளை தளர்ச்சி இல்லாமல் செய்யுங்கள். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள். வெளிநாடு, வெளியூர் செல்லும் வாய்ப்பு வந்தால் தவிர்க்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள்.

குடும்பத்தில் அடுத்தடுத்து விசேஷங்கள் வரத் தொடங்கும். விலகி இருந்த உறவும், நட்பும் விரும்பி வந்து சேருவார்கள். மூன்றாம் நபர் முன்னால் விளையாட்டான கேலி கூட விபரீதமான விளைவை ஏற்படுத்திவிடலாம் உணர்ந்து பேசுங்கள். ஆடை, ஆபரணம், வீடு ,வாகனம் சேரும். வரவுக்கும் செலவுக்கும் சமமாக இருக்கும். வேண்டாத கேளிக்கை, வீணான ஆடம்பரம் தவித்தால் சேமிப்பு உயரும். எந்த சமயத்திலும் உங்கள் வார்த்தைகளில் கட்டுப்பாடு இருந்தால் வாழ்க்கையில் நிம்மதிக்கு தட்டுப்பாடு இருக்காது. நாவடக்கமே நன்மதிப்பு உணர்ந்து நடந்து கொள்ளுங்கள்.

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025
ஆங்கில புத்தாண்டு கிரக நிலைகள்

செய்யும் தொழிலில் சலிக்காத உழைப்பு இருந்தால் மாற்றமும் ஏற்றமும் படிப்படியாக வரும். தெரியாத வர்த்தகத்தில் பிறர் பேச்சை நம்பி பெரும் முதலீடு செய்ய வேண்டாம். உங்களிடம் வேலை செய்யும் யாரையும் உதாசீனப்படுத்துவது கூடாது. அயல்நாட்டு ஒப்பந்தங்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு நிலைக்கும். அதே சமயம் உடன் இருப்போர் தவறுக்கு நீங்கள் பழி ஏற்க நேரிடலாம். உஷாராக இருங்கள்.. மேலிடத்தில் அனுமதி பெறாமல் உங்கள் பெருமைக்காக வாக்குறுதிகள் தருவதை தவிருங்கள்.

கலை ,படைப்பு துறையினருக்கு திறமைக்கும் முயற்சிக்கும் ஏற்றபடி வாய்ப்புகள் உங்கள் வாசல் தேடி வரும். சபலத்துக்கும் சஞ்சலத்துக்கும் ஆட்படாமல் இருப்பது உயர்வு நிலைக்க செய்யும்.

மாணவர்கள், புதிய நட்புகளிடம் எல்லை வகுத்து பழகுங்கள். தேவையில்லாத கேளிக்கைகளை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே இந்த வருடம் உங்களுக்கு சிறப்பை தரும்.

வாகனத்தில் செல்லும்போது கவனச்சிதறல் கூடவே கூடாது. இரு சக்கர வாகனத்தை ஓட்டும் போது வேகத்தை தவிர்ப்பது அவசியம். நரம்பு உபாதைகள், முதுகு தண்டுவட பிரச்சனை, ஒற்றைத் தலைவலி, கண் பிரச்சனைகள் வரலாம். உங்களுக்கு காயம்படலாம் கவனமாக இருங்கள்.

இந்த வருடத்தில் ஒருமுறை காளகஸ்தி சென்று வணங்கி வாருங்கள். மாதம் ஒருமுறை அருகில் உள்ள கோயில்களுக்கு சென்று நாகர்களை கும்பிடுங்கள். முடிந்தால் மாதம் ஒரு ஏழைக்கு தயிர் சாதமும், எலுமிச்சை ஊறுகாயும் தானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கை வசந்தமாகும்..

Leave a Comment

error: Content is protected !!