குரோதி வருட பலன்கள் 2024-சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன் அவர் ஒன்பதாம் இடத்தில் உச்சத்தன்மையுடன் ஜொலிக்கிறார். கூடவே குருபகவானும் உள்ளார். இந்த வருட கிரக நிலைப்படி சிம்ம ராசியினரின் பணம் அத்தனையும் எங்காவது லாக் ஆகிவிடும். அல்லது பணத்தை வாங்கியவர்களால் திருப்பித் தர இயலாமல் போய்விடும். வெளிநாட்டில் ஒளித்து வைத்த பணம் திரும்ப உங்கள் கைக்கு வர தடுமாறும். பணத்தைக் கைக்கு கொண்டு வரும் முயற்சிகள் கடும் தோல்வியடையும். பணம் மிக பத்திரமாக, மறைவாக இருக்கும். ஆனால் அனுபவிக்க முடியாது.
குரோதி வருட கிரகநிலைகள்
உங்கள் இளைய சகோதரியின் காதல் விஷயம் வெளியே வந்து களேபரம் ஆகிவிடும்.அல்லது உங்கள் இளைய சகோதரி அரசியலில் நுழைய அது உங்களுக்கு மகா எரிச்சலை தரும். குத்தகை எடுத்தவர்கள் தொகை தராமல் ஏமாற்றுவர். உங்கள் பணியாளர்கள் நிறைய பொய் சொல்வதோடு வேலையில் சுணக்கம் காட்டுவர். உங்கள் கைபேசி தரும் தகவல் மூலம் உங்கள் வங்கி கணக்கு பணம் வழித்தெடுக்கப்படும் .
சிம்ம ராசியின் எட்டாம் இடத்தில் இருக்கும் கிரகங்கள் சிம்ம ராசியினரை கும்மி எடுக்கும். வீடு, வாகன மாற்றம் உண்டு. உங்கள் சொந்த வீட்டை பழுது பார்க்கும் நிலை ஏற்பட்டு அதுவரை வாடகை வீட்டில் தங்கலாம் அல்லது இப்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு மாறுவீர்கள். சிலர் வாழ்க்கைத் துணையின் வேலையின் பொருட்டு வீடு மாற்றம் ஏற்படும்.
இப்போது பிரசவம் ஆகும் பெண்களில் சிலருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்கும். இந்த தமிழ் புது வருடத்தில் எட்டாம் இடத்தில் ராகுவும், ஏழாம் இடத்தில் சனியும் இருந்து பெரிய இக்கட்டுகளை கொடுக்க முற்படும்போது உங்கள் வாரிசுகள் அரணாக இருந்து காப்பாற்றுவார்.
சிறுநீர் பிரச்சனை, மூத்திரக்கல் தோன்றுவது என வலி வரும் இதனால் அடிவயிற்றில் வலி எடுக்கும். உங்களில் நிறைய சிம்ம ராசியினர் அரசு வேலைக்கு செல்ல இயலும். சிலர் ஆசிரியர் வேலைக்கு செல்வர். சிலர் கணக்கு எழுதும் அக்கவுண்ட்ஸ் துறையில் சேர்ந்து விடுவர். உங்கள் எதிரிகள் பம்மி இருட்டிலிருந்து கல் எறிவர், எதிரிகளை இனங்கான இயலாமல் தவிப்பீர்கள்.வழக்குகள் கிணற்றில் போட்ட கல் மாறி இருக்கும்.
உங்கள் பெற்றோர் சம்பந்தத்துடன் ஒன்று விருப்ப திருமணம் அல்லது கலப்பு மனம் என ஒன்று நடக்கும். இப்போது தொடங்கும் வியாபாரத்தில் உங்கள் பெற்றோரே பங்குதாரர் ஆகிவிடுவர். இந்த வருடம் உங்களுக்கு நிறைய செலவாகும் ஆனால் முக்காவாசி செலவுக்கு கணக்கே எழுத முடியாது எல்லாம் மறைமுக செலவாக இருக்கும்.
குரோதி வருட குரு பார்வை
பரிகாரம்
சூரியனார் கோவில் சென்று தரிசனம் செய்து வணங்கவும். சூரியன் எதிரில் குரு இருப்பார் அவரையும் நன்கு சேவித்து கொள்ளவும்.
சனி+செவ்வாய் சேர்க்கைக்கு ஞாயிற்றுக்கிழமை பன்னீர் பூ மாலை மற்றும் அகல் விளக்கில் புங்கம் எண்ணெயில் 19 மிளகை மூட்டை கட்டி சிகப்பு நிறத்தில் கொண்டு தீபம் ஏற்றவும்.
இந்த வருடம் உங்களுக்கு நாட்களை தள்ளுவதே பெரும்பாடாக இருக்கும். இதில் பிறருக்கு என்ன உதவி செய்ய இயலும். வார்த்தைகளால் பிறரை நோகடிக்காதீர்கள் அதுவே பரிகாரம்.!!