புஷ்கர நவாம்சம்
புஷ்கர நவாம்சமாக கருதப்படும் 108 நவாம்சங்களில் சுமார் 24 நவாம்சம் அல்லது நக்ஷத்திர காலாண்டுகள் உள்ளன. சமஸ்கிருதத்தில் புஷ்கரம் என்றால் நீல தாமரை மற்றும் ஏரி என்று பொருள். இதற்கு ‘ஊட்டமளிப்பவன்’ என்றும் பொருள். நவாம்ச அட்டவணையில் இது ஒரு சிறப்பு புள்ளியாகும், இது அதில் உள்ள கிரகங்களை வளர்க்கிறது. புஷ்கரம்சத்தில் உள்ள கிரகங்களின் பலம் அதிகரிக்கும். இதில் உள்ள கிரகங்கள் மிகவும் சுபமாக செயல்படும். புஷ்கர நவாம்சத்தில் உள்ள கிரகங்கள் வர்கோத்தம கிரகங்களாக செயல்படுவதாக நம்பப்படுகிறது. பெரும்பாலும், புஷ்கரம்சம் ஆன்மீகத்தை ஊக்குவிக்கிறது மற்றும் புஷ்கரம்சத்தில் உள்ள கிரகங்கள் இந்த திசையில் பூர்வீகத்தை இயக்கும். நன்மை தரும் கிரகங்கள் புஷ்கர நவாம்சத்தில் இருக்கும் போது தீவிரம் அதிகமாக இருக்கும்.
லக்னம் புஷ்கர நவாம்ச பாதத்தில் அமைந்துவிட்டால் ஜாதகருக்கு யோகம் அமைந்து கொண்டே இருக்கும்.லக்கினாதிபதி ஆட்சி ,உச்சம் பெற்று விட்டால் ஜாதகர் உலக புகழ் பெரும் வாய்ப்பு உண்டாகும்.
ஜாதகத்தில் 2 அல்லது அதற்க்கு மேற்பட்ட கிரகங்கள் புஷ்கர நவாம்ச நட்சத்திர பாதத்தில் அமர்த்துவிட்டால்,ஜாதகர் மதிப்பு மிக்கவர் ,அதிஷ்டம் உடையவர்,கடவுள் அருள் பெற்றவராக இருப்பார்.
ஜாதகனின் அந்தஸ்து மற்றும் உயர் நிலையை புஷ்கார நவாம்சத்தின் மூலம் அறியலாம்.
ராசிச்சக்கரத்தில் கீழ்க்காணும் நட்சத்திர பாதங்களில் கிரகங்கள் அமர்ந்திருப்பின் அது புஷ்கர நவாம்சத்தில் உள்ளதாக தனித்து அடையாளம் காட்டப்படுகிறது.
இதையும் கொஞ்சம் படிங்க : எளிமையான முறையில் திருமண பொருத்தம் பார்க்கும் நட்சத்திர பொருத்தம் அட்டவணை
புஷ்கர நவாம்சம் நட்சத்திரம்–புஷ்கர நவாம்ச அட்டவணை
பரணி 3, கிருத்திகை 1, கிருத்திகை 4, ரோகிணி 2, திருவாதிரை 4, புனர்பூசம் 2, புனர்பூசம் 4, பூசம் 2, பூரம் 3, உத்திரம் 1, உத்திரம் 4, அஸ்தம் 2, சுவாதி 4, விசாகம் 2, விசாகம் 4, அனுஷம் 2, பூராடம் 3, உத்திராடம் 1, உத்திராடம் 4, திருவோணம் 2, சதயம் 4, பூரட்டாதி 2, பூரட்டாதி 4, உத்திராட்டாதி 2 ஆகிய நட்சத்திர பாதங்களே புஷ்கர நவாம்ச பாதங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன.
இந்த நட்சத்திர பாதங்கள் முறையே சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன், சனி, ராகு ஆகிய ஆறு கிரகங்களை மட்டும் உள்ளடக்கியவை. செவ்வாய், புதன், கேது ஆகிய மூன்று கிரகங்களைக் குறிக்கும் நட்சத்திரங்களில் புஷ்கர நவாம்ச பாதங்கள் அமைவதில்லை.
இதை சுருக்கமாக வேறு வகையில் சொல்லப்போனால் சூரியனின் கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்று நட்சத்திரங்களின் முதல் மற்றும் நான்காம் பாதங்களும், சந்திரனின் ரோகினி, ஹஸ்தம், திருவோணம் ஆகியவற்றின் இரண்டாம் பாதமும், குருவின் புனர்பூசம், விசாகம், பூரட்டாதியின் இரண்டு, நான்காம் பாதங்களும், சுக்கிரனின் பரணி, பூரம், பூராடத்தின் மூன்றாம் பாதமும், சனியின் பூசம், அனுஷம், உத்திராட்டாதியின் இரண்டாம் பாதமும், ராகுவின் திருவாதிரை, சுவாதி, சதயத்தின் நான்காம் பாதமும், புஷ்கர நவாம்சம் எனப்படும்.
புஷ்கர நவாம்ச அமைப்பில் உள்ள அனைத்துக் கிரகங்களும், நவாம்சத்தில் சுப வீடுகளிலேயே அமையும். இங்கே கிரகங்களின் சேர்க்கை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ராசிச் சக்கரத்தில் ஒரு கிரகம் உச்சம், ஆட்சி, நட்பு, பகை, நீசம் போன்ற எத்தகைய வலிமையில் இருந்தாலும், அது நவாம்சத்தில் சுபரின் வீடுகளில் அமரும்போது வலிமையைப் பெறுகிறது என்பதன் அடிப்படையில்தான் புஷ்கர நவாம்சம் சொல்லப்பட்டிருக்கிறது.
ராசிக்கட்டத்தில் 6, 8, 12 போன்ற இடங்களில் கிரகங்கள் மறைந்தே இருந்தாலும், நவாம்சத்தில் அவை சுப வீடுகளில் அமரும்போது சுபத்துவம் அடைகின்றன. எனவே சுபத்துவத்தின் ஒரு பகுதிதான் புஷ்கர நவாம்சமாகும். இது தவிர்த்து புஷ்கர பாகை என வேறு சில இன்னும் துல்லிய அமைப்புகளும் கிரகங்களின் சுப வலிமையைக் கணக்கிட மூல நூல்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.
இதையும் கொஞ்சம் படிங்க : மகாபாக்யங்களை அள்ளி தரும் மகா மேருவின் மகிமைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!
புஷ்கர நவாம்சத்தில் இருக்கும் கிரகங்கள், அந்த லக்னத்திற்கு சுப கிரகங்களாக அமைவதே சிறப்பு. குறிப்பாக லக்னாதிபதி மற்றும் கேந்திர, கோணாதிபதிகள் எனப்படும் 4, 5, 9, 10 ஆகிய லக்ன சுபர்கள் புஷ்கர நவாம்சத்தில் இருப்பதும், அந்த கிரகங்களின் தசை நல்ல பருவத்தில் வருவதும் ஒரு மனிதனை ஏதேனும் ஒரு துறையில் உச்சத்திற்கு கொண்டு செல்லும்.
அதிலும் குறிப்பாக, சில நிலைகளில் பெருங்கேந்திரம், பெருங்கோணம் எனப்படும் ஒன்பது, பத்தாம் அதிபதிகளான தர்ம, கர்மாதிபதிகள் புஷ்கர நவாம்சத்தில் அமர்ந்து அவர்களின் தசையும் அடுத்தடுத்து நடக்கும்போது அந்தக் கிரகங்களின் காரகத்திற்கேற்ப ஜாதகர் மிக உயரத்திற்கு செல்வார்.
ஆகவே ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதியும், லக்னமும், அதனையடுத்த மிக முக்கிய சுபர்களான 5, 9 க்குடையவர்கள் புஷ்கர பாதத்தில் அமைவதும், இறுதியாக நான்கு, பத்துக்குடையவர்கள் புஷ்கர பாத அமைப்பில் இருப்பதுமே சிறப்பானது.