மகா மேரு
சக்திதேவிக்கு எந்திர வடிவம் தேவை என்று ‘மகாமேரு’ எந்திர வடிவை ஏற்படுத்தினார் ஆதிசங்கரர். இதற்கு ஸ்ரீசாயனர், சுரேஸ்வராச்சார்யர், கைவல்யாச்ரமர் போன்ற மகான்கள் தனி வடிவமும் வழிபாட்டு விதிகளும் ஏற்ப டுத்தினர்.‘ஸ்ரீவித்யை னும் தெய்வக்கலை ரகசியத்தை அறிந்திருப்பவர்கள் பாக்கியசாலிகள்’ என்று ஸ்ரீசக்கரத்தின் மூல ஆதார நூல்கள் சொல்கின்றன.
குரு மூலமாக உபதேசம் பெற்று, ஸ்ரீசக்கர பூஜையைச் செய்பவர்கள் இந்த உலகில் மகாபாக்யங்களைப் பெற முடியும் என்கிறது ஸ்ரீவித்யா ரகஸ்யம்.ஸ்ரீசக்கரத்தின் மகிமைகள் குறித்து பல்வேறு வகையான தகவல்கள் நம்மை வியக்க வைக்கிறது.
மேரு மலையின் மீது புஷ்பதந்தர் என்பவரே இந்த சக்கர வழிபாட்டை வரை கலையாக எழுதி வைத்தார் எனவும், விநாயகப் பெருமான் அதற்கு முழுவதுமாக வடிவம் கொடுத்தார் என்றும், ஆதிசங்கரரின் குருவான கவுடபாதர் தான் அதை கிரஹித்து அவருக்கு உபதேசித்தருளினார் என்றும் லிங்கபுராணச் செய்யுள் குறிப்பிடுகிறது.
மறைபுகழும் சவுந்தரிய லகரியினை வகுத்தெழுதும் விறல் கெழுமு வேழமுகன் விரைமலர்த் தாளினைத் தொழுவாம் மகாமேருவின் சமப்படுத்தப்பட்ட வடிவமே ஸ்ரீசக்கரம். சக்தி வாய்ந்த இதன் வழிபாட்டுப் பாடலைத் தமிழில் ‘அம்பிகையின் அழகு அலை’ என்று முதன்முதலாக எழுதித் தொகுத்தவர் வீரை கவிராஜ பண்டிதர் ஆவார்.
இதையும் கொஞ்சம் படிங்க : மிருகசீரிடம் நட்சத்திரத்தை வசிய படுத்தும் அதி அற்புத ரகசியம் !!
ஸ்ரீசக்கர வரைமுறை விதியை லக்ஷ்மீதரரும் கைவல் யாச்ரமரும் சிறு மாறுதல்களுடன் வரைந்து காட்டினர். சவுக்கியவர்த்தினி என்ற விதி நூலின்படி 11 பாடல்களால் இதை எப்படி சக்தி பொருந்தியதாக வரைவது என்று அறியலாம்.
அதன்படி, பிந்து, முக்கோணம், எண்கோணம், இரு பத்து கோணம், பதினான்கு கோணம், எட்டு தளம், பதி னாறு தளம், மூன்று வட்டம், மூன்று வரைகோட்டுப் பூபுரம் என்று ஸ்ரீசக்கர அமைப்பு, ஓலைச்சுவடியின் வாயிலாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மிகவும் பெரியதான இந்தப் பிரபஞ்சத்தில் சக்திதேவி ஸ்ரீசக்கரத்தைத் தன் சொந்த வீடாகக் கொண்டு ஆட்சி புரிந்து வருகி றார். லலிதா சகஸ்ரநாமத் தின் 996-வது நாமாவளி யான, ‘ஸ்ரீசக்ர ராஜநிலயாயை’ என்ற நாமாவளி யினால் அறியலாம்..
அந்நிய தேசத்தவர் வியந்த ஸ்ரீசக்கரம்:-
சில ஆண்டுகளுக்கு முன்னர் மாஸ்கோவில் உள்ள கணிதவியல் விஞ்ஞானி அலெக்ஸி குலச்சேவ் என்பவர் ஸ்ரீசக்கரத்தை வைத்து சிறு ஆய்வு நடத்தினார். மிகச்சரியாக வரைந்த ஒரு சக்கரத்தையும், சரியாக வரையாத ஒன்றையும் வெவ்வேறு நண்பர்கள் வீட்டில் வைத்துச் சில நாட்கள் பொறுத்துப் பார்த்தபோது நல்ல ஸ்ரீசக்கரம் இருந்த வீட்டில் நலனும், அடுத்ததில் நோய் குணமாகாமையும் உள்ள சூழ்நிலையைக் கண்டார்.இதுபற்றி ஆய்வுக் கட்டுரை எழுதிய குலச்சேவைப் பாராட்டிய அவர் நண்பர் உண்மையாகவே ஸ்ரீசக்கரத்தில் சக்தி உள்ளது என்று பத்திரிகையில் செய்தி வெளியிட அனைவரும் வரைகலையைக் கண்டு அதிசயித்தனர்.
முற்காலத்திலிருந்தே ஸ்ரீசக்கர பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளகோயில்களில் மக்கள் ஈர்ப்புத்தன்மை ஏற்பட்டு புகழ் பெற்றிருப்பதைக் காண முடிகிறது. பூர்வ புண்ணியச் சேர்க்கை இருந்தால்தான் கலியுகத்தில் சக்தியை வழிபட்டு மேன்மைக்கு வரமுடியும் என்று ஆதிசங்கரர் தன் சவுந்தர்ய லஹரியில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் கொஞ்சம் படிங்க : பிரம்மஹத்தி தோஷம் அகற்றும் குச்சனூர் சனீஸ்வரன் கோவில் !இந்தியாவிலேயே தனி தலம் !
ஸ்ரீசக்கர வழிபாட்டு முறை:
ஸ்ரீசக்கரத்தை முறையாக தாமிர தகட்டில் வரைந்து கோணங்கள் தவறாமல் கோடுகளால் பூர்த்தி செய்து அமைத்து விதிமுறைப்படி வழிபடுவது அவசியம். எல்லோருடைய வீடுகளிலும் இந்தச் ஸ்ரீசக்கரம் இருப்பதைக் காணலாம். ஸ்ரீசக்கர வழிபாட்டுக்கான விதிமுறைகளைச் சரியாகக் கடைப் பிடிக்கவேண்டும். ஸ்ரீ சக்கரம் பூஜிக்கப்படும் வீடு சுத்தமாக நல்ல காற்றோட்டம் உடையதாக இருக்க வேண்டும். பூஜை அறை யின் மேற்பகுதிகளில் மகாலட்சுமிக்கு உரிய மலர்கள், விருட்சங்களை வரைந்து அழகுபடுத்தி வைக்க வேண்டும்.
பசு, சிம்மம், சங்கு,சக்கரம்,தாமரை, குதிரை, யானை, ஸ்வஸ்திகம் போன்ற குறிகளை அமைக்கலாம். பூஜை அறைக்குள் முன்னோர்கள் படத்தை மாட்டி வைக்காமல் வேறு சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்கும் குருதேவர் படங்கள், பீடாதிபதிகள் தரும் பஸ்மம், குங்குமப் பிரசாதம் போன்றவற்றை ஸ்ரீசக்கரம் அருகில் வைக்கக் கூடாது.
வெள்ளிக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, பூர நட்சத்திர நாள், பூஜை செய்பவருடைய ஜென்ம நட் சத்திர நாளில் ஸ்ரீ சக்கரத்துக்காக உபதேசிக்கப்பட்ட மந்தி ரத்தைத் தவறாமல் பூஜையுடன் ஜெபிக்க வேண்டும்.
வீட்டில் சிராத்தம் செய்வதாக இருந்தால், அன்று முன்னோர் வழிபாடு செய்த பிறகே ஸ்ரீசக்கர வழிபாடு செய்தல் வேண்டும்.