108 திவ்ய தேசத்தில் மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் மட்டுமே நவகிரகங்கள் உள்ளது.
பஞ்சபூத தலங்கள் மதுரை மாநகரிலேயே உள்ளது.
சிவபெருமானுக்கு மற்றும் அம்பாளுக்கு பட்டாபிஷேகம் இங்கு மட்டுமே செய்யப்படுகிறது.
அறுபடை வீட்டில் மதுரை திருப்பரங்குன்றமும் முருகனுக்கு மட்டுமே பட்டாபிஷேகம் செய்யப்படுகிறது.
வேற்று வர்ணத்தவர்களும் அறநிலைத்துறை கோவில்களில் அர்ச்சகர் ஆனது முதன் முதலில் மதுரை தல்லாகுளம் ஐயப்பன் கோவிலில் தான்.
சிவபெருமானுக்கு மனித உருவம் மதுரையில் இரண்டு இடத்தில் உள்ளது. திருப்பரங்குன்றம் மற்றும் இம்மையில் நன்மை தருவார்.
ஆதீன மடம் முதன் முதலில் உருவானது மதுரையில் தான்.
சொக்கநாதர், கள்ளழகர் கிட்ட மட்டும் தான் இடுப்பில் கத்தி இருக்கும். வேறு எந்த சிவபெருமானிடமும், பெருமாளிடமும் இருக்காது.
நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் பிறந்தது மதுரை திருவாதவூர்.
278 தேவார பாடல் பெற்ற திருத்தலங்களில் மூன்று மதுரையில் உள்ளது.
மகாத்மா காந்தி மதுரைக்கு ஐந்து முறை வந்துள்ளார்.
மகாகவி சுப்ரமணிய பாரதியார் மதுரை சேதுபதி பள்ளியில் பணிபுரிந்தார்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் படித்தது மதுரை திருநகர் முக்குலத்தோர் பள்ளி மதுரை பெரியார் யூனியன் கிறிஸ்டியன் பள்ளி.
ரமண மகரிஷி படித்தது மதுரை ஸ்காட் பள்ளி.
மதுரைக்கு நிறைய பெயர்கள் உண்டு.
பல்லவ நாடு போதிதர்மர் போல் பாண்டியநாடு போதி சேனா பற்றி யாருக்கும் தெரியாது. இவர் மதுரையில் பிறந்தவர். போதிதர்மர் போல புத்த மதத்தை சீனா மற்றும் ஜப்பானில் பரப்பினார்.
சாம்ராஜ் மாறினாலும் தலைநகராக மதுரையே இருந்துள்ளது. இந்தியாவிலேயே வேறு எந்த ஊரும் இப்படி இருந்ததில்லை.
மதுரையில் இரண்டு முறை திரு தாண்டவம் ஆடியுள்ளார் நடராசர்.வலது கால் மாற்றி ஆடியதும் இங்கு மட்டுமே.
மதுரை பிறக்க, வாழ, இறக்க, தரிசிக்க, நினைக்க, கேட்க, சொல்ல முக்தி தரும் திருத்தலம்.
இந்து மதத்தின் 6ல் நான்கு உட்பிரிவுகளுக்கு (சைவம், வைணவம், சாக்தம் கௌமாரம்) முக்கியத்துவம் தந்த ஊர் மதுரை.