Homeஆன்மிக தகவல்ஆடி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் ?

ஆடி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் ?

ஆடி

ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் தங்கள் குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டு இருப்பார்கள். ஆனால் பாசத்தை வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் கற்பனை சக்தி கொண்டவர்கள். அந்த கற்பனையை செயல்படுத்துவதில் வல்லவர்கள்.

ஆடி மாதத்தில் பிறந்தவர்களுக்கு தாங்கள் தாய் நாடு மற்றும் தாய்மொழி மீது அதிக நாட்டம் இருக்கும். ஆடி மாதத்தில் பிறந்தவர்களை யாராவது கடிந்து கொண்டால் அதை மனதில் வைத்துக் கொண்டு தக்க சமயத்தில் அதற்கு பதிலடி கொடுப்பார்கள். இவர்களுக்கு அபார ஞாபக சக்தி இருக்கும். இவர்களுக்கு யாரையாவது பிடித்து விட்டால் அவர்களுடன் விரைவில் நட்பு ஏற்படுத்திக் கொள்வார்கள். அதே நேரம் அவர்களால் பிரச்சனை ஏற்பட்டால் விரக்தியின் உச்சத்திற்கே சென்று விடுவார்கள். அதனால் ஆடி மாதத்தில் பிறந்தவர்கள் நண்பர்களை பொறுத்தவரை அளவோடு இருந்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

ஆடி மாதத்தில் பிறந்தவர்களிடம் பேசுவதற்கு முன் நன்கு யோசித்துப் பேச வேண்டும். ஏனெனில் இவர்கள் பேச்சாற்றலில் சிறந்தவர்கள். அதேசமயம் இவர்கள் எளிதில் பிரச்சனையில் சிக்கிக் கொள்ள மாட்டார்கள். இவர்களுக்கு பிரச்சனை ஏற்படும் என்று தெரிந்தால் அதில் எளிதில் அகப்பட்டுக் கொள்ளாமல் நழுவி ஒதுங்கி கொள்வார்கள். எந்த ஒரு விஷயத்திலும் சிக்கலில் மாட்டிக் கொள்ளாதவாறு இவர்கள் எதையும் திட்டமிட்டு அந்த செயலை செய்வார்கள்.

ஆடி

சொந்த பந்தங்கள் சிலருடன் இவருக்கு இவர்களுக்கு ஒத்துப் போகாது.அவர்கள் மூலம் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. நண்பர்கள் அக்கம்பக்கத்தார்கள் மூலம் பிரச்சனைகள் வரும் வாய்ப்பு குறைவு. இவர்கள் அரசியலில் ஈடுபட்டால் முந்தைய தலைவர்களின் புகழை பாடியே நிறைய பணம் சம்பாதித்து விடுவார்கள். இவர்கள் பணம் சம்பாதிக்க வேண்டுமென்று திட்டமிட்டு அதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயலில் தீவிரமாக இறங்கினால் இவர்கள் எளிதில் அதில் வெற்றி பெறுவார்கள். அதே நேரம் சோம்பேறியாக இருந்தால் இவர்கள் பிற்காலத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.

ஆடி மாதத்தில் பிறந்த பெண்களிடம் மனம் கோணாமல் நடக்க முயற்சி செய்தால் வாழ்க்கையில் மிக வேகமாக முன்னேறி விடுவார்கள். இவர்கள் எப்போதும் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். கடிந்து பேசினாலும் தூற்றினாலும் வசை பாடினாலும் எதற்கும் உடனுக்குடன் நேரடியாக பதில் அளிக்க மாட்டார்கள். பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படுபவர்கள். இவர்கள் இடம், பொருள் அறிந்து செயல்படுவதில் வல்லவர்கள்.

எந்த ஒரு விஷயத்தையும் எளிதில் புரிந்து கொள்ள மாற்றம் கொண்டவர்கள் சில சமயங்களில் பிடிவாத குணம் காரணமாக சொந்த பந்தங்கள் நண்பர்களிடையே மனக்கசப்பு ஏற்படும். அடிக்கடி தங்கள் குணத்தையும் முடிவுகளையும் மாற்றிக் கொள்வார்கள். சந்தேகம் இவர்களின் உடன் பிறந்த ஒன்றாகும். பிடிவாதம் கொண்டவர்கள் சுவையான சத்தான உணவுகளை விரும்பி உண்பார்கள். தாங்கள் ஒரு விஷயத்தில் லாபம் அடைவதாக இருந்தால் அதற்காக எதையும் செய்ய தயங்க மாட்டார்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!