ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025-மகர ராசி

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Updated on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025-மகர ராசி

சனிபகவானின் அருள் பெற்ற மகர ராசி அன்பர்களே உங்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!.. வரும் 2025 ஆம் வருடம் உங்களுக்கு நற்பலன்களை நல்குமா? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்…

எண்ணம் போல ஏற்றமும், மாற்றமும் ஏற்படக்கூடிய வருடமாக இந்த வருடம் அமையும். இந்த சமயத்தில் எதையும் திட்டமிட்டு செய்தால் எதிர்காலத்தில் ஏற்றம் தொடர்ந்து இருக்கும்..

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025

வேலை

வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட கஷ்டங்கள் எல்லாம் பணிபோல மறையும். மேலதிகாரிகளுக்கும் உங்களுக்கும் இடையே இருந்த விரிசல்கள் மறைந்து, உங்கள் திறமை அவர்களால் உணரப்படும். வீண் பழி சுமந்த நிலை மாறும். விரோத அமைப்பில் இருந்தவர்கள் கூட தவற்றை உணர்ந்து உங்களிடம் நட்புடன் பழகத் தொடங்குவார்கள். இந்த சமயத்தில் அவசரமும், அலட்சியமும் எந்த வேளையிலும் வேண்டாம். புதிய பொறுப்புகளை பெறும்போது எல்லாம் தெரியும் என்று நினைக்காமல் அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளை கேட்டு நடந்து கொள்வது நல்லது. உங்கள் மனம் போல் மாற்றமும், ஏற்றமும் கைகூடி மகிழ்ச்சி நிறைய செய்யும்.

குடும்பம்

குடும்பத்தில் குதூகலம் நிறைய தொடங்கும். உறவுகள் சேர்க்கையும் அதனால் ஆதாயமும் ஏற்படும். நீண்ட காலமாக வாட்டின கடன் சுலபமாக அடையும் அளவுக்கு வரவு அதிகரிக்கும். சின்ன சின்ன விஷயத்துக்கு கூட சீறிப்பாயாமல் இருந்தால் குடும்ப உறவுகள் சிதறாமல் இருக்கும். வாரிசுகளால் பெருமை சேரும். வாரிசுகள் வாழ்க்கையில் இருந்த சுபகாரிய தடைகள் சீக்கிரமே விலகும். ஆடை, ஆபரணம் சேரும். வீடு, வாகனம் மாற்ற புதுப்பிக்க நேரம் அமையும். மனம்போல மாங்கல்யமும், மழலை பாக்கியமும் கிட்டும். மூன்றாம் நபர் தலையிட்டால் முறிந்து கிடந்த வாழ்க்கை இப்போ உண்மை உணரப்பட்டு மீண்டும் துளிர்க்கும். வார்த்தை தான் வாழ்க்கையை தீர்மானிக்குது உணர்ந்து நடந்தால் உன்னதம் தொடரும்.

தொழில்

செய்யும் தொழிலில் சீரான போக்கு ஏற்படும். அரசு வழியில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். வங்கிக் கடன்கள் கண்டிப்பாக கைகூடிவரும். அதனை முறையாக திருப்பி செலுத்தி விடுவது, உரிய குறிப்புகளை பத்திரமாக வைத்திருப்பது அவசியம். அயல் நாட்டு வர்த்தகத்தில் ஆதாயம் அதிகரிக்கும். அதே சமயம் புதிய முதலீடுகளை செய்யும் முன் உரிய ஆலோசனை செய்வது அவசியம்.

அரசு ,அரசியல் துறை சார்ந்தவர்கள் இதுவரை அடங்கியே இருந்த சூழல் மறையும். உங்கள் திறமையும், அனுபவமும் மேலிடத்தால் உணரப்படும். உடன் இருந்து உங்களுடைய வளர்ச்சியை தடுத்த சிலரோட முகமூடிகள் கழன்று இப்போது நிஜ முகம் தெரியவரும். அறிமுகம் இல்லாத யாருக்காகவும், அவசியமில்லாத வாக்குறுதிகளை தரவோ, ஜாமீன் கையெழுத்திடவோ செய்யாதீர்கள். பொது இடங்களில் வாக்குறுதி எதுவும் தரும் முன் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செயல்படுங்கள்.

மாணவர்களுக்கு மதிப்பும், மதிப்பெண்ணும் உயரும். அதே சமயம் அன்றாட பாடங்களை அன்றே படித்தால் என்றென்றும் பெருமை பேசப்படும். இரவு நேரத்தில் இல்லத்தை விட்டு வெளியிடங்களில் தங்குவதாக இருந்தால் பெற்றோர், பெரியோர் அனுமதி பெறுவது அவசியம். உயர்கல்வி வாய்ப்புகள் உங்கள் மனம் போல் கிட்டும். அதில் பெற்றோர் ஆசிரியர் வழிகாட்டலை அவசியம் கேளுங்கள்.

உங்கள் பிறப்பு ஜாதகத்தின் அடிப்படையில் பிரத்தியேக பலன்களைப் பெற இங்கே சொடுக்கவும்

கலை ,படைப்பு துறையினருக்கு திறமைக்கு உரிய வாய்ப்புகள் நிச்சயம் கிடைக்கும். கைக்கு எட்டும் வாய்ப்புகளை சிறப்பாக செய்தால் எதிர்காலம் ஏற்றம் பெறும். உங்கள் படைப்பு சார்ந்த ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். இருட்டான நபர்களோட சவகாசம் நெருங்காமல் பார்த்துக் கொண்டால் உங்கள் வாழ்க்கையில் வெளிச்சம் நிரந்தரமாக இருக்கும்.

அறிவுரை

போதுமான ஓய்வு இல்லாமல் தொலைதூரம் வாகனத்தை தொடர்ந்து இயக்க வேண்டாம். பொது இடத்தில் உறவுகளிடம் உங்கள் குடும்ப பகிர்ந்து கொள்ள வேண்டாம் பயண பாதையில் செல்போன் பேசினாலும் அக்கம் பக்கம் பார்த்து பேசுங்கள்.

அஜீரணம், வயிறு சார்ந்த உபாதைகள், உணவு குழாய் அழற்சி, உணவு எதுக்களிப்பு, போன்ற தொல்லைகள் வரலாம் சிலருக்கு அசிடிட்டி அவஸ்தை தரக்கூடும்.

ஆலய வழிபாடு

இந்த வருடத்தில் ஒருமுறை காணிப்பாக்கம் சென்று கணபதியை மனதார வணங்குங்கள். முடிந்தால் கணபதி ஹோமத்தில் கலந்து கொள்ளுங்கள். மாதம் ஒரு முறை பக்கத்து பெருமாள் கோவிலில் பெருமாள் தாயார் சக்கரத்தாழ்வாரை வணங்கி விட்டு வாருங்கள் வாயில்லா ஜீவன்களுக்கு இயன்ற தீவனம் வாங்கிக் கொடுங்கள். உங்கள் வாழ்க்கை பசுமையாக இருக்கும்..

மொத்தத்தில் வரும் புத்தாண்டு உங்களுக்கு நல்லவை அனைத்தும் நல்கும் புத்தாண்டாக இருக்கும். 70% நற்பலன்கள் கிடைக்கும் ஆண்டாக இந்த புத்தாண்டு அமையும்

Leave a Comment

error: Content is protected !!