விசுவாவசு வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2025:மீன ராசி
புத்திரகாரனாகிய குருவை ஆட்சி வீடாகக் கொண்ட மீன ராசி அன்பர்களே ! இதுவரை உங்கள் ராசிக்கு 3மிடம் இருந்த குருபகவான் மே 14ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 4மிடம் வருகிறார். மேலும் அக்டோபர் 18ந் தேதி முதல் 4மிடத்திலிருந்து அதிசாரமாக 5மிடம் செல்கிறார். மீண்டும் வக்ரகதியில் டிசம்பர் 5ந் தேதி முதல் 5மிடத்திலிருந்து 4மிடம் செல்கிறார்.
ராகு-கேதுக்கள் மே 18ந் தேதி முதல் 1. 7மிடங்களிலிருந்து 12. 6மிடங்களில் சஞ்சாரம் செய்கிறார்கள்.
இவ்வருடம் முழுவதும் சனிபகவான் ஜென்ம சனியாக உங்கள் ராசியிலேயே சஞ்சாரம் செய்கிறார்.

தொழில்துறையில் அலைச்சலும் வேலைப்பளுவும் அதிகமாகும். நண்பர்கள், உறவினர்களின் உதவிகள் கிடைக்கும். வேலைப்பளுவின் காரணமாகத் தூக்கக் குறைவு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு உண்டு. வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. தொழில்துறையில் எவ்வளவு சம்பாதித்தாலும் அதற்குரிய செலவினங்கள் உண்டு, உங்களுக்குக் குருபலம் இல்லாவிட்டாலும் வரனுக்குக் குருபலம் இருந்தால் திருமணம் நடக்கும். ஆரோக்யத்தில் இருந்த குறைபாடுகளுக்கு நல்ல மருத்துவம் கிடைக்கும்.
மனைவியின் ஆரோக்யத்தில் சிறு குறைபாடு ஏற்பட்டுப் பிறகு சரியாகும். தாயின் ஆரோக்யத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. பூர்வ புண்ணிய சொத்துக்கள் விரைவில் தடையின்றி கிடைக்கும். மாணவர்கள் கடுமையாக உழைத்தால் மட்டுமே நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். தொழில்துறையில் சற்றுதாமதமாகக் காரியங்களைச் சாதிப்பீர்கள்.
பரிகாரம்: பிரதி சனிக்கிழமை சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபமும், ஆஞ்சநேயருக்கு நெய்தீபமும் ஏற்றி வரவும்.
மொத்தத்தில் இவ்வருடம் 65 சதவீத நன்மைகளைப் பெறுவீர்கள்.