Homeஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026: மிதுனம்

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026: மிதுனம்

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026

மிதுனம்

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்… இந்த ஆண்டில் உங்களது கஷ்டங்கள் விலகி நன்மைகள் நடைபெற இறைவனை பிரார்த்திக்கின்றேன்….

புதன் பகவானின் அருள் பெற்ற மிதுன ராசி அன்பர்களே!! இந்த ஆங்கில புத்தாண்டில் உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் சனிபகவான் இருப்பதும், ஆண்டின் நடுப்பகுதியில் ஏற்படக்கூடிய பெயர்ச்சியில் குருபகவான் இரண்டாம் இடத்துக்கு செல்வதும், வருட கடைசியில் ராகு எட்டாம் இடத்துக்கும், கேது இரண்டாம் இடத்துக்கும் வருவதும் கவனிக்க வேண்டிய விஷயம். இந்த அடிப்படையில் 2026 ஆம் ஆண்டு உங்களுக்கு முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றத்தை கொடுக்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். 

வேலை செய்யும் இடத்தில் உங்கள் திறமைகள் மதிக்கப்படும். உங்களுடைய பலகால முயற்சிகள் பலன் தரத் தொடங்கும். பிறர் தலையீட்டை உங்கள் பணிகளில் அனுமதிப்பது கூடாது. பொறுப்புகள் அதிகரிக்கலாம். அதை சுமையாக நினைக்காமல் இருப்பதுதான் எதிர்காலத்தில் ஏற்றத்தை தரும். இடமாற்றம், பதவி உயர்வுகள் தாமதமானாலும் நிச்சயம் வந்து சேரும். 

குடும்பத்தில் நிலவி வந்த குழப்பமான சூழல் விலகும். பெற்றோர் ஆசியால் சுபதடைகள் படிப்படியாக விலகும். பூர்வீக சொத்தில் பிடிவாதம் வேண்டாம். பணவரவு சீராக இருக்கும். சூதாட்டம், போட்டி பந்தயங்களுக்கு செலவிட்டால் உங்களது பணம் முழுமையும் கரைந்து விடும். வாரிசுகளை அன்பால் அரவணைத்து செல்லுங்கள். விலை உயர்ந்த பொருட்களை இரவல் தரவோ பெறவோ வேண்டாம். 

அரசு,அரசியல் துறையினருக்கு சீரான வளர்ச்சி இருக்கும். எந்த சமயத்திலும் விளையாட்டாக கூட மேலிடத்துக்கு எதிரான வார்த்தைகளை பேச வேண்டாம். வாக்கு தரும் சமயத்திலும், ஜாமீன் தரும் நேரத்திலும் கவனமாக இருங்கள். 

மாணவர்களுக்கு திறமைக்கு உரிய முன்னேற்றம் ஏற்படும் வருடமாக இந்த வருடம் இருக்கும். வெளிநாடு, வெளியூர் படிப்பை விரும்புகிறவர்கள் பெற்றோர், பெரியோர் ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி செயல்படுங்கள்.

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026 மிதுனம்

கலை,படைப்பு துறையினர் சின்ன வாய்ப்பாக இருந்தாலும் சின்சியராக செய்தால் சீரும் சிறப்பும் சேரும். 

பெண்களுக்கு வளமும் நலமும் ஏற்படக்கூடிய காலகட்டம். பிறரை நம்பி தெரியாத செயல்களில் இறங்க வேண்டாம். குழந்தை பேறும், திருமணமும் கிட்ட குலதெய்வத்தையும் , முன்னோரையும் வழிபடுங்கள். உங்களின் கணவரின் ஆலோசனைகளுக்கு மதிப்பு கொடுங்கள். பணிபுரியும் பெண்களுக்கு சங்கடங்கள் குறைந்து சாதகம் அதிகரிக்கும். 

இரவு நேர பயணத்தை இயன்றவரை தவிர்த்து விடுங்கள். இரு சக்கர வாகனத்தில் செல்வோர் சற்று கவனமாக வாகனத்தை இயக்கவும். காது,மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தலை தூக்கலாம். கவனமுடன் இருங்கள். 

இந்த வருடம் முழுவதும் சிறப்பாக இருக்க உங்களுக்கு பிடித்த சித்தரை வணங்குங்கள். முடிந்தால் ஒருமுறை ராகவேந்திரரை மந்திராலயம் சென்று வணங்கி விட்டு வாருங்கள். இந்த வருடம் முழுவதும் வசந்த காற்று உங்கள் வாழ்வில் வீசும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!