Homeஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026: கடகம்

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026: கடகம்

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026

கடகம்

அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்… இந்த ஆண்டில் உங்களது கஷ்டங்கள் விலகி நன்மைகள் நடைபெற இறைவனை பிரார்த்திக்கின்றேன்….

சந்திர பகவானின் அருள் பெற்ற கடக ராசி அன்பர்களே!!! இந்த ஆங்கில புத்தாண்டில் உங்கள் ராசிக்கு 9ஆம் இடத்தில் சனி பகவான் இருக்கிறார். ஜூன் மாதத்தில் நடக்க இருக்கும் பெயற்சியில் குரு பகவான் உங்கள் ஜன்ம ராசிக்கு வருகிறார். மேலும் வருடத்தின் முடிவில் ராசிக்கு கேதுவும், ஏழாம் இடத்திற்கு ராகுவும் வரக்கூடிய பெயர்ச்சியும் ஏற்பட இருக்கிறது. இவைகள் அனைத்தையும் கணக்கிடும் பொழுது இது உங்கள் நன்மைகள் அதிகரிக்கும் ஆண்டாகவே இருக்கும். 

வேலை செய்யும் இடத்தில் இதுவரை நிலவி வந்த சங்கடமான சூழல் விலகி சாதகமான சூழல் நிலவத் தொடங்கும். பிறரால் மறைக்கப்பட்டிருந்த உங்கள் திறமை இந்த காலகட்டத்தில் நிச்சயம் வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் வந்தால் தவிர்க்க வேண்டாம். இதுவரை வேலை தேடிக் கொண்டிருந்த நபர்களுக்கு நிச்சயம் வேலை கிடைக்கும்.

குடும்பத்தில் நிம்மதி நிறையும். இதுவரை தடைபட்ட சுபகாரியங்கள் இனிமேல் படிப்படியாக நடக்க துவங்கும். வாரிசுகளின் வளர்ச்சி உங்களுக்கு பெருமை சேர்க்கும். பணவரவு படிப்படியாக அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதத்தை தவிருங்கள். வீடு மனை வாங்க யோகம் வரும். பத்திரங்களை கவனமாக படித்துப் பார்ப்பது அவசியம். 

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026

அரசு, அரசியல் துறை சார்ந்தவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். சிலருக்கு புதிய பதவிகளும், பாராட்டுகளும் கிட்டும். புதிய பணிகள் எதையும் உயர்தலமையின் உத்தரவு இல்லாமல் செய்ய வேண்டாம். பங்கு வர்த்தகத்தில் முன் அனுபவம் இல்லாமல் இறங்க வேண்டாம். புதிய முதலீடுகளில் நிதானமாக இருங்கள். 

மாணவர்களின் தனித்திறமை நிச்சயம் பளிச்சிடும். தொடக்கத்தில் சிறிது தாமதமானாலும் பின்னர் தடையாக இருந்த விஷயங்கள் படிப்படியாக மாறும். 

கலை,படைப்பு துறையினருக்கு வாய்ப்புகள் நிச்சயம் வரும். உங்கள் படைப்பை ஊரே புகழும் பொழுது உங்கள் நடத்தையும் அப்படி இருப்பது அவசியம். உணர்ந்து செயல்படுங்கள். 

பெண்களுக்கு திடீர் யோகத்தால் பெரும் அதிர்ஷ்டம் ஏற்படக்கூடும். ஆடை, ஆபரணம், பொருள் சேரும். மனதுக்குப் பிடித்த வகையில் மாங்கல்ய பாக்கியமும், மழலை பாக்கியமும் கிட்டும். இளம் வயதினருக்கு குடும்பத்தில் ஆதரவோட காதல் கைகூடும். பணிபுரியும் பெண்களுக்கு பலகால கனவுகள் பலிக்கும். 50 வயதை கடந்தவர்கள் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

வாகனத்தில் சிறிது பழுது ஏற்பட்டாலும் உடனே சீர் செய்வது அவசியம். கழுத்து, நரம்பு, சுவாச உபாதைகள், இடது பக்க உபாதைகள் வரலாம். 

குரு பகவான் வழிபாடு உங்கள் குறைகளை போக்கும், ஆகையால் வியாழக்கிழமையில் குரு பகவான் வழிபாடும் குரு பகவான் காயத்ரி மந்திரமும் கூறி வாருங்கள் இந்த வருடம் முழுவதும் வசந்தமாக இருக்கும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!