Homeஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026: துலாம்

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026: துலாம்

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026

துலாம்

சுக்கிர பகவானை ஆட்சி வீடாகக் கொண்ட துலாம் ராசி அன்பர்களே!! இந்த வருடத்தில் உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் சனிபகவான் உள்ளார். வருடத்தின் மத்தியில் நடக்கக்கூடிய பயிற்சியில் குரு பகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்துக்கு வருவார். அதே மாதிரி வருட இறுதியில் ராகுவும்-கேதுவும் உங்கள் ராசிக்கு நான்கு மற்றும் பத்தாம் இடத்திற்கு வருகிறார்கள். இத்தகைய கிரக அமைப்புகளால் இந்த வருடம் உங்கள் எண்ணங்கள் ஈடேறக்கூடிய ஆண்டாக இருக்கும். அதே சமயம் தர்க்கம் தவிர்த்து தன்னம்பிக்கையை வளர்ப்பது அவசியம். 

அலுவலகத்தில் முடங்கியும், அடங்கியும் இருந்த நிலை மாறும். தடை கற்கள் எல்லாம் தவிடு பொடியாகும் சமயத்தில் அதை தலைகனமாக மாத்தி சுமந்து தடுமாற வேண்டாம். உடன் இருப்போர் பாராட்டும் மேல் அதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும். இடமாற்றம் உயர்வுகள் கைகூடும். வெளிநாட்டுப் பணிக்காக முயற்சி செய்தவர்கள் மனம் மகிழும் படி வாய்ப்புகள் வரத் தொடங்கும். 

குடும்பத்தில் இருந்த சங்கடமான சூழல் விலகி சந்தோசமான நிகழ்ச்சிகள் நடக்கத் துவங்கும். குழந்தைகளால் குதுகலம் அதிகரிக்கும். சுப காரியங்கள் சுலபமாக கைகூடும். உறவுகள் சேர்க்கையும் அதனால் ஆதாயமும் ஏற்படும். பூர்வீக சொத்து சார்ந்த வழக்குகள் சாதகமாக தீர்வாகும். இந்த சமயத்தில் குடும்பத்தில் மூத்த உறவுகள் மனம் நொந்து போக பேசுவது கூடாது. வாகனம் புதுப்பிக்க, வாங்க யோகம் உண்டு. 

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2026 துலாம்

செய்யும் தொழிலில் செழிப்பு ஏற்படும். அயல்நாட்டு வர்த்தகத்தில் ஆதாயம் அதிகரிக்கும். கூட்டுத் தொழில் புதிய ஒப்பந்தங்களில் முழு கவனமாக இருங்கள். 

அரசு மற்றும் அரசியல் சார்ந்தவர்களுக்கு புதிய பொறுப்புகள் பதவிகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. மதிப்பு உயரும் அதே சமயத்தில் மறைமுக எதிர்ப்புகளும் எழும். 

மாணவர்கள் மதிப்பும், மதிப்பெண்ணும் நிச்சயம் உயரும் ஆண்டாக இந்த வருடம் அமையும். அதே சமயம் மனதை ஒருநிலைப்படுத்துவதும். தீய சகவாசத்தை ஒதுக்குவதும் அவசியம். 

கலை மற்றும் படைப்புத் துறையினருக்கு பொறுமைக்கு பரிசாக வாய்ப்புகள் வரத் தொடங்கும். அதை அலட்சியத்தாலும், வீண் ஜம்பத்தாலும் நழுவ விட வாய்ப்பு உண்டு. கவனமாக இருங்கள். 

பெண்களுக்கு பொருளும், பெருமையும் சேர வாய்ப்பு உண்டு. வீடு, வாகனம் வாங்க புதுப்பிக்க நேரம் அமையும். பழைய கடன்களை சுலபமாக பைசல் செய்யலாம். பணிபுரியும் பெண்கள் யாரோ செய்த தவறுக்கு வீண் பழி சுமந்த நிலை மாறும். உயர் அதிகாரிகளுக்கு உங்கள் திறமை தெரிய வந்து அதனால் உயர்வுகள் கிடைக்க தொடங்கும். வாரிசுகளால் பெருமையும் வாழ்க்கைத் துணையுடன் அன்னோனியமும் ஏற்படும். 

பற்கள், அடிவயிறு, தோல் நிற மாற்றம், பாதம், கழுத்து உபாதைகள் வரலாம் கவனம். 

வராகி அம்மன் வழிபாடு உங்கள் வாழ்வில் வசந்தத்தை கொண்டு வரும். ஒருமுறை தஞ்சை பெரிய கோயிலில் வீற்றிருக்கும் வராகிய தரிசனம் செய்துவிட்டு வாருங்கள் இந்த வருடம் நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமையும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!