நீங்க ஒரு Perfume அடிச்சுட்டு வெளியே போறீங்க. ஆனா யாரும் திரும்பி பார்க்கல. இன்னொருத்தர் அதே Perfume அடிச்சா எல்லாரும் “என்ன வாசனை சூப்பரா இருக்கு”னு கேட்கிறாங்க. ஏன் தெரியுமா?
காரணம் உங்க வாசனை உங்க கிரகத்துக்கு ஒத்துப்போகல.
ஜோதிடத்தில் சுக்கிரன் தான் அழகு, காதல், கவர்ச்சி, வாசனைக்கு காரணம். உங்க ஜாதகத்தில் சுக்கிரன் எந்த ராசியில் இருக்காரோ, அதுதான் உங்க Vedic Venus Sign. அதுக்கு ஏத்த வாசனையை போட்டா, உங்க கவர்ச்சி தானா கூடும். காதல், வேலை, அதிர்ஷ்டம் எல்லாமே தேடி வரும்.
உங்க Venus Sign என்னனு தெரியலையா? உங்க ஜாதகத்துல சுக்கிரன் இருக்கிற ராசியை பாருங்க. அது தான் உங்க Venus Sign.
இப்போ ஒவ்வொரு ராசிக்கும் என்ன வாசனை சரியா இருக்கும்னு பார்க்கலாம்.
1. மேஷம் – Spicy & Bold
உங்களுக்கு காரமான வாசனை தான் சரி. Pink Pepper, Ginger கலந்த Perfume போட்டா, நீங்க போற இடத்துல எல்லார் கண்ணும் உங்க மேல தான் இருக்கும். நீங்க பிறவியிலேயே Leader. உங்க வாசனையும் அப்படியே இருக்கணும்.
2. ரிஷபம் – Rose & Luxury
சுக்கிரனின் சொந்த வீடு நீங்க. உங்களுக்கு Rose, Vanilla, Sandalwood தான் ராஜ வாசனை. இதை போட்டா பணம், சொகுசு, காதல் எல்லாமே உங்களை தேடி வரும். விலை கொஞ்சம் அதிகமானாலும் தரமான Perfume வாங்குங்க.
3. மிதுனம் – Fresh & Cool
உங்களுக்கு எப்பவும் Fresh-ஆ இருக்கணும். Citrus, Mint வாசனை உங்க மூளையை சுறுசுறுப்பாக்கும். பேச்சில் உங்களை ஜெயிக்க யாராலும் முடியாது. இந்த வாசனை உங்க பேச்சுக்கு இன்னும் பவர் கொடுக்கும்.
4. கடகம் – Soft & Loving
உங்களுக்கு Soft Musk, Jasmine தான் சரியானது. இது உங்களை ரொம்ப அன்பானவரா, பாசமானவரா காட்டும். காதலில் இருக்கிறவங்களுக்கு இந்த வாசனை தான் Best. உங்க துணை உங்களை விட்டு போகவே மாட்டாங்க.
5. சிம்மம் – Royal & Bold
நீங்க ராஜா / ராணி. உங்களுக்கு சாதாரண வாசனை செட் ஆகாது. Saffron, Amber, Bold Oud தான் உங்க வாசனை. இதை போட்டா, நீங்க வர்றீங்கன்னு தூரத்துல இருந்தே தெரியும்.
6. கன்னி – Clean & Neat
உங்களுக்கு சுத்தம் தான் முக்கியம். Vetiver, Green Tea வாசனை உங்களுக்கு ஏற்றது. ரொம்ப கும்முனு இல்லாம, நீட்டா, டீசண்டா இருக்கும். வேலைக்கு போறவங்களுக்கு இது தான் Perfect.
7. துலாம் – Elegant & Romantic
உங்களுக்கு Rose, Iris, Powdery வாசனை தான். இது உங்களை ரொம்ப அழகா, ரொமாண்டிக்கா காட்டும். காதல் விஷயத்தில் உங்களுக்கு இந்த வாசனை ரொம்ப லக்கி.
8. விருச்சிகம் – Mysterious & Deep
உங்களுக்கு சாதாரண வாசனை வேண்டாம். Oud, Leather, Patchouli மாதிரி ஆழமான, மர்மமான வாசனை தான் உங்களுக்கு. இதை போட்டா, எதிர்பாலினத்தவர் உங்களை பத்தி தெரிஞ்சுக்க ஆசைப்படுவாங்க.
9. தனுசு – Warm & Spiritual
Cedarwood, Warm Incense வாசனை உங்களுக்கு. இது உங்களுக்கு நிம்மதியையும், அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும். கோவிலுக்கு போகும் போது, முக்கியமான வேலைக்கு போகும் போது இந்த வாசனையை பயன்படுத்துங்க.
10. மகரம் – Earthy & Classy
Vetiver, Tobacco கலந்த Earthy வாசனை உங்களுக்கு. இது உங்களை ரொம்ப கம்பீரமா, நம்பிக்கையானவரா காட்டும். பிஸ்னஸ் Meeting-க்கு இது தான் Best.
11. கும்பம் – Unique & Different
எல்லார் மாதிரி நீங்க இருக்க மாட்டீங்க. உங்களுக்கு Ozonic, Aquatic, Unusual வாசனை தான். கடல் காற்று மாதிரி, மழைக்கு பிறகு வரும் மண் வாசனை மாதிரி இருக்கும் Perfume-ஐ தேர்ந்தெடுங்க.
12. மீனம் – Dreamy & Soft
Lotus, Watery Florals வாசனை உங்களுக்கு. கனவு காணும் உங்க மனசுக்கு இது தான் சரி. இந்த வாசனை உங்களுக்கு அமைதியையும், காதலையும் கொண்டு வரும்.
உங்க Venus Sign-க்கு ஏத்த Perfume-ஐ தேர்ந்தெடுத்து போட்டு பாருங்க. ஒரே வாரத்துல மாற்றம் தெரியும்.
உங்க Venus Sign என்ன? கீழே Comment பண்ணுங்க. உங்க Sign-க்கு எந்த Brand Perfume வாங்கலாம்னு நான் சொல்றேன்.