உங்க ஜாதகத்தை எடுத்து பாருங்க. புதன் 6-ஆம் வீட்டில் இருக்கா? இருந்தா நீங்க ரொம்ப Lucky. ஏன்னா இந்த அமைப்பு வேலை, போட்டி, சவால் எல்லாத்திலும் உங்களை ஜெயிக்க வைக்கும்.
ஜோதிடத்தில் 6-ஆம் வீடு என்றாலே எதிரி, கடன், நோய், போட்டி, வேலைக்கான வீடு. இங்கு புதன் இருந்தா என்ன நடக்கும்?
புதன் 6-ஆம் வீட்டில் இருந்தா உங்களுக்கு இருக்கும் 5 பலம்:
1. கூர்மையான அறிவு
நீங்க ரொம்ப புத்திசாலி. கணக்கு, லாஜிக், பகுப்பாய்வு எல்லாத்திலும் நீங்க தான் Best. ஒரு பிரச்சனையை மத்தவங்க 1 மணி நேரத்தில் யோசிப்பதை, நீங்க 10 நிமிஷத்தில் முடிச்சிடுவீங்க.
2. போட்டி தேர்வில் வெற்றி
TNPSC, UPSC, Bank Exam, NEET மாதிரி போட்டி தேர்வுகளில் இந்த அமைப்பு உள்ளவர்கள் தான் அதிகம் ஜெயிப்பாங்க. படிக்கும் போது ஞாபக சக்தி அதிகமா இருக்கும். தேர்வில் என்ன கேட்பாங்கனு கணிச்சிடுவீங்க.
3. வேலையில் திறமை
வேலையில் உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை. Office-ல் யாருக்கும் தெரியாத விஷயத்தை நீங்க கண்டுபிடிப்பீங்க. Boss-க்கு நீங்க தான் Right Hand. வேலையில் பதவி உயர்வு சீக்கிரம் கிடைக்கும்.
4. சட்ட விஷயத்தில் வெற்றி
கோர்ட், வழக்கு, சட்டம் சம்பந்தமான விஷயத்தில் நீங்க ஜெயிப்பீங்க. வக்கீல், CA, Auditor, கணக்கு துறையில் இருப்பவர்களுக்கு இந்த அமைப்பு மிகவும் நல்லது. எதிரிகள் உங்களை வழக்கு போட்டு ஜெயிக்க முடியாது.
5. பிரச்சனையை தீர்க்கும் திறன்
எவ்வளவு பெரிய பிரச்சனையா இருந்தாலும், அதற்கு தீர்வு கண்டுபிடிப்பீங்க. எல்லாரும் குழம்பும் இடத்தில், நீங்க தெளிவா முடிவு எடுப்பீங்க. இது தான் உங்களை Leader ஆக்குது.
ஆனா கவனமா இருக்க வேண்டியது:
புதன் கெட்டிருந்தா, பாதிக்கப்பட்டிருந்தா சில பிரச்சனை வரும்.
- மன கவலை, Anxiety அதிகம் வரும்
- வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சண்டை, தவறான புரிதல் வரும்
- அதிகம் யோசிச்சு மன அழுத்தம் வரும்
- தூக்கம் குறையும்
இப்படி இருந்தா பயப்படாதீங்க. இதுக்கு எளிய பரிகாரம் இருக்கு.
புதனுக்கு எளிய பரிகாரம்:
🟢 புதன்கிழமை விநாயகரை வழிபடுங்கள். புதன்கிழமை காலையில் விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபடுங்கள். வேலையில் இருக்கும் தடை நீங்கும்.
🟢 “ஓம் பும் புதாய நமஹ” என்ற மந்திரத்தை புதன்கிழமை 108 முறை சொல்லுங்கள். மன குழப்பம் நீங்கி, தெளிவு பிறக்கும்.
🟢 பச்சை நிற ஆடை அதிகம் அணியுங்கள். புதனுக்கு பச்சை நிறம் மிகவும் பிடிக்கும்.
🟢 புதன்கிழமை பச்சை பயிறு தானம் கொடுங்கள். கடன், எதிரி தொல்லை குறையும்.
உங்க ஜாதகத்தில் புதன் எந்த வீட்டில் இருக்கு? கீழே Comment பண்ணுங்க. உங்களுக்கு என்ன நடக்கும்னு நான் சொல்றேன்.