உலகை வியக்க வைக்கும் பெரிய புத்தர் சிலை !!!

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

 பெரிய புத்தர் சிலை 
Large Buddha Statue

உலகில் சிலைகளாக அதிகம் வைக்க பட்ட மனிதர் புத்தர்தான்(Buddhar). வித விதமான பல நிலைகளில் புத்தர் சிலைகள் சீனா(China) ,ஜப்பான்(Jappan) மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வைக்கப்பட்டுள்ளது .
 
ஆனால் அவற்றிக்கெல்லாம் சிகரம் தொட்டது போல சீனாவில் இருக்கிறது .அச்சிலைதான் உலகிலேயே மிகப்பெரிய புத்தர் சிலையாகும் .இரு மலையின் மத்தியில் குடைந்து உருவாக்க பட்டது .
 
சீனாவின் தெற்கு பகுதியான லேசான் நகரத்தின் பிரம்மாண்ட மலையை குடைந்து இந்த பிரம்மாண்ட சிலையை உருவாக்கி இருக்கிறார்கள் .இந்த சிலை 233 அடி உயரமும் ,92 அடி அகலமும் கொண்டது .The leshan giant buddha என்று அழைக்கப்படும் இச்சிலையை உலகின் பாரம்பரிய சின்னமாக 1996ஆம் ஆண்டு யுனெஸ்கோ அறிவித்தது 
புத்தர் சிலை
இச்சிலை உருவாக்கிய பின் ஏற்பட்ட ஆச்சர்யம்: 
 
புத்தர் சிலை அமைத்திருக்கும் லேசான் மலைப்பகுதியை சுற்றி ‘மின்சியாங்’ என்று ஆறு ஓடுகிறது .தற்போது அமைதியாக ஓடும் இந்த ஆறு கி. பி7-ம் நூற்றாண்டில் ,அதிக சத்ததுடனும் ,அதிகமான இழுப்பு சக்தியுடனும் கரைபுரண்டு ஓடி கொண்டிருந்த இந்த ஆற்றை கடப்பதும் ,படகுகளில் பயணம் செய்து மறு கரையை அடைவதும் அப்பகுதி மக்களுக்கு சவாலாக இருந்தது .
 
அதனால் அப்பகுதி மக்கள் ‘ஹை டாங்’ என்ற புத்த துறவியிடம் உதவி கேட்டு இருக்கிறார்கள் .அந்த துறவி ,ஆற்றின் ஒரு கரையில் புத்தர் சிலை ஒன்றை அமைக்க சொன்னார் .மக்களும் சிலை வடிப்பதர்கக பணியை தொடங்கினர்.
 
கி. பி.713-ல் தொடங்கிய இந்த பணி வெகு விரைவாக நடைபெற்றது .புத்தரின் சிலை பாதி வடிக்கப்பட்ட நிலையில் ,அந்த துறவி இறந்து போனார் ,அதனால் சிலை வடிப்பு பணிகளில் தடை ஏற்பட்டு நின்று போனது .ஆனால் மின்சியாங் ஆற்றில் ஆக்ரோஷம் மட்டும் நிற்கவில்லை.
 
சுமார் 70 ஆண்டுகளுக்கு பின்னர் ,லேசான் நகரை பார்வையிட வந்த அந்த பகுதியை ஆட்சி செய்த டாக் வம்ச ஆளுநர் சிலையை பற்றி அறிந்த பிறகு அவரது முயற்சியால் .கி. பி 803-ல் புத்தர் சிலை முழு வடிவம் பெற்றது .இதில் ஆச்சர்யமிக்க விஷயம் என்னவென்றால் ,சிலை முழுமைபெற்றதுமே ..ஆக்ரோஷமான மின்சியங் ஆறு அமைதியின் மறு உருவமாக மாறிவிட்டது..
 
சிலையின் அமைப்பு: 
 
இந்த புத்தர் சிலையின் தலையில் 1021 சுருள் முடிகள் அமைக்கப்பட்டுள்ளன .முழுவதும் மலையின் பாறையிலேயே அமைக்கப்பட்ட இந்த புத்தரின் காதுகள் மட்டும் .மரத்தால் ஆனது .இப்படி காதுகளை மட்டும் மரத்தில் செய்து இணைப்பது என்பது அவ்வளவு எளிதாக நடந்துவிடவில்லையாம் .இதற்காக மட்டும் 1000பேர் தனிப்பட்ட முறையில் பணியாற்றி இருக்கிறார்கள்.
 
இந்த புத்தர் சிலையை காண வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு  மலையின் அடிவாரத்தில்  இருந்து மலை உச்சி வரை பத்தரை ரசித்தபடியே  செல்ல பாதை அமைக்கப்பட்டிருக்கிறது.
அனுமனின் அருளை எளிதில் பெற
click

Leave a Comment

error: Content is protected !!