சந்திர திசை பலன்கள் மற்றும் பரிகாரம்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Updated on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

சந்திர திசை

தசா புத்தி பலன்கள் – சந்திர திசை

சந்திர மகா திசை 10 வருடம் நடக்கும்.அதன் பலன்கள் தாயாருக்கும், பெண்களுக்கும் சுகம் தரும்,திருமணம் கைகூடும், பொருள் கிடைக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் ,வாகனம், பல்லாக்கு பூமி  வந்து சேரும் .

சந்திர திசை சந்திர புத்தி பலன்கள்

சந்திர புத்தி 10மாதம் நடக்கும்

பொன்,பூமி கிடைக்கும்.திருமணம் கைகூடும். ஆடு ,மாடு விருத்தியாகும்.செல்வம் பெருகும் வாணிபம் பலவிதமாகும்.உறவுகள் கூடிவரும். நண்பர்கள் மூலம் எதிரியை வெல்வார்கள்.

சந்திர பகவான் ஆட்சி உச்சம் பெற்று கேந்திர திரி கோணங்களிலும் வளர்பிறை சந்திரனாக இருந்து அவர் லாபஸ்தானத்தில் அமைந்திருந்தாலும் ஜென்ம லக்னத்திற்கு தன ஸ்தானத்தில் இருந்தாலும் நட்பு கிரக வீட்டில் அமையப் பெற்றாலும் சிறப்பான நற்பலன்கள் உண்டாகும்.அரசாங்கம் மூலம் அனுகூலம் அதிக புகழ், திருமணம் நடைபெறும் அமைப்பு குழந்தை பாக்கியம் உண்டாகும்.

சிறப்பானபூமி மனை, வண்டி, வாகனம், ஆடை, ஆபரண சேர்க்கை போன்ற சிறப்பான பலன்களையும் ஏற்படுத்தும். குரு பார்வை பெற்ற சந்திரனாக இருந்தால் எதிலும் உயர்வும், லாபமும் உண்டாகும்.

சந்திர திசை

சந்திர பகவான் தேய்பிறை சந்திரனாகி பலமிழந்து பகை நீசமாகி பாவிகளின் சேர்க்கை பெற்றோ, பாவிகளின் பார்வை பெற்றோ 6, 8, 12ல் மறைந்தோ, பாதக ஸ்தானத்தில் அமைந்து காணப்பட்டால் பண விரயம் ஏற்படும். இடம் விட்டு இடம் போகவும் நேரிடும். மனக்குழப்பம், தெளிவற்ற முடிவினால் தொல்லைகள் உண்டாகும். மனதிற்கு துக்கம் கவலை உடல்நலம் பாதிக்கும் அமைப்பு, நெருங்கியவர்களிடம் விரோதம், அரசாங்கம் மூலம் தொல்லைகளும் உண்டாகும்.

சந்திரனுக்கு பரிகாரம் செய்வது மூலம் நற்பலன்கள் உண்டாகும்.

சந்திர திசை செவ்வாய் புத்தி பலன்கள்

செவ்வாய் புத்தி 7 மாதம்

காய்ச்சல் ,பித்தம், அம்மை போன்ற நோய்கள் வந்து தாக்கும். வீட்டில் உள்ளவர்கள் நோயால் அவதிப்படுவார்கள். அலைச்சல் தீயினால் கண்டம் ,வழக்கு வந்து சேரும்.பூமி சேதமாகும்-கவனம் தேவை.

செவ்வாய் பகவான் லக்னத்திற்கும் திசா நாதனுக்கும் கேந்திர கோணங்களில் அமையப் பெற்று, செவ்வாய் ஆட்சி உச்சம் நட்பு பெற்று பலமுடன் அமையப் பெற்றாலும் செயற்கரிய செயல்களை வீரமும், விவேகமும் கொண்டு செய்வதால் புகழ் உண்டாகும். எதிரிகளை எளிதில் வெற்றி கொள்ள முடியும் பண வரவுகளால் குடும்பத்தில் வீடு மனை பூமி வண்டி வாகன அமைப்புகள் சேரும் சகோதர வகையில் ஒற்றுமையும் உதவியும் அனுகூலமும் உண்டாகும். நெருப்பு, மருந்து சம்பந்தமான தொழில்களில் உயர்வான வருமானமும் லாபமும் உண்டாகும். அரசாங்க வழியில் உயர் பதவிகள் அடைகின்ற யோகம் விருதுகள் பெறும் அமைப்பு உண்டாகும்.

சந்திர திசை

செவ்வாய் பகை நீசமாகி, பாவிகள் சேர்க்கை பாவிகள் பெற்று 8, 12ல் மறைந்து அமையப் பெற்று திசை நடந்தாலும் திசா நாதனுக்கு 8, 12ல் அமையப் பெற்றாலும் எதிர்பாராத விபத்துக்களை சந்திக்கும் நிலை, உடலில் காயம் உண்டாகும் அமைப்பு, சிலருக்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய அவசியமும் உண்டாகும். எதிரிகளால் தொல்லை மனதில் பயம், பண விரயம், வீடு மனை பூமி வழியில் வம்பு வழக்குகள் உண்டாகும். சகோதரர்களிடையே ஒற்றுமை இல்லாத நிலை பிரிவு, தீயால் சொத்துக்களுக்கு சேதம், தொழிலில் நலிவு அரசாங்கத்திற்கு அபராதம் செலுத்த வேண்டிய நிலை யாவும் உண்டாகும்.

கடுமையான வார்த்தைகளை பேசும் அமைப்பு, குடும்ப வாழ்வில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறையும். இதற்கு பரிகாரமாக கந்தர் சஷ்டி கவசம் படிப்பதும் முருக வழிபாடு மேற்கொள்வதும், அன்னதானம் செய்வது போன்றவற்றை செய்வதால் கெடுதிகள் விலகும்.

சந்திர திசை ராகு புத்தி பலன்கள்

ராகு புத்தி 1வருடம்6மாதம்.

எதிரிகளால் பண விரயம் ஏற்படும்.சர்ப்ப பயம் நேரும்,பூத பீடை வாட்டும்.மனைவி,குழந்தை இவரிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டும்.உடலில் காயங்கள் ஏற்படும்.கவனம் தேவை.

ராகுபகவான் லக்னத்திற்கு கேந்திர கோணங்களில் இருந்தாலும் சுப கிரக சேர்க்கை பார்வை பெற்றாலும் முற்பாதி காலம் சுகமான பலனும், பிற்பாதி காலம் உபாதைகளும் உண்டாகும். ராகு 3, 6, 11ம் இடங்களில் இருந்து சுப கிரக சம்பந்தம் பார்வை பெற்றால் வியாதி இல்லாத நிலை எதிர்ப்புகளை சமாளிக்கும் சூழ்நிலை எதிர்பாராத பெரிய பதவி கிடைத்து பெர் புகழ் பெறும் நிலை யாவும் உண்டாகும். எடுக்கும் காரியங்கள் யாவும் ஜெயமாகும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் அனுகூலம், வண்டி, வாகன யோகம், ஆடை, ஆபரண சேர்க்கைகளும் உண்டாகும்.

ராகு பகவான் 2, 5, 8, போன்ற இடங்களிலும் பாவிகள் சேர்க்கை பார்வை பெற்றுக் காணப்பட்டாலும் 8 ஆம் அதிபதி சேர்க்கை பெற்று காணப்பட்டாலும் உடல்நிலையில் விஷத்தால் கண்டம் உண்கும். உணவே விஷமாகும் சூழ்நிலை, வயிறு கோளாறுகளும் உண்டாகும். ராகு சூரியன்சேர்க்கை ராகு சனி சேர்க்கை, ராகு செவ்வாய் சேர்க்கை ராகு சந்திரன் சேர்க்கை, பெற்று புக்தி நடைபெற்றால் மனதிற்கு துக்கம், தந்தை வழியில் பிரிவு, தாய்க்கு தோஷம் வியாதி, தவறான பழக்க வழக்கம். தோல் வியாதி, குடும்பம் வாழ்வில் பிரிவு, பிரச்சனை போன்ற சாதகமற்ற பலன்கள் நடைபெறும். வெளிநாடுகளுக்கு செல்லும் அமைப்பு உண்டாகும்.

ராகு பகவான் சாதகமற்று புக்தி நடைபெறும் காலங்களில் செவ்வாய், வெள்ளி ஞாயிற்று கிழமைகளில் துர்க்கைக்கு ராகு காலத்தில் எலுமிச்சை பழ விளக்கு ஏற்றுவது செவ்வல்லி மலர்களால் துர்கைக்கும் அர்ச்சனை செய்வது, சர்பஸ்வரர், வழிபாடு, பாம்பு புற்றுக்கு பால் வைப்பது, திருகாளஹஸ்தி திருநாகேஸ்வரம் சென்று சர்ப சாந்தி செய்வதன் மூலம் கெடுதிகள் விலகி நற்பலன்கள் உண்டாகும்.

சந்திர திசை குரு புத்தி பலன்கள்

குரு புத்தி 1வருடம் 6மாதம்

விவசாய விளைச்சல் நன்றாக இருக்கும்.அரசங்கத்தால் நன்மை நேரும்.ஆடு, மாடு விருத்தியாகும்.உடம்பிலுள்ள நோய்கள் விரைவாக குணமாகும்.செல்வம் பெருகும் கீர்த்தி உண்டாகும்.

குரு பகவான் ஜெனன காலத்தில் ஆட்சி, உச்சம் பலம் பெற்று இருந்தாலும் கேந்திர திரிகோணத்திலும் 2, 11லும் அமையப் பெற்றாலும் திசா நாதனுக்கு கேந்திர கோணங்களிலும் அமையப் பெற்று புக்தி நடைபெற்றால் பொன் பொருள் சேர்க்கை, அரசாங்கத்தில் உயர் பதவி, செல்வாக்கு உண்டாகும். புத்திர வகையில் அனுகூலம் புத்திரர் உண்டாகும். யோகம் உடல்நலம் சிறப்பாக இருக்கும். வீடு, மனை, வண்டி, வாகன அமைப்பு யாவும் உண்டாகும். கல்வியில் மேன்மை ஏற்படும். மற்றவர்களுக்கு உபதேசிப்பார்கள்.

குரு பகவான் பலமிழந்து பகை நீசமாகி 6, 8, 12லும் திசா நாதனுக்கு 6, 8, 12ல் காணப்பட்டாலும் தன விரயம் உண்டாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாத நிலை நாணயக் குறைவு அவமானம் போன்றவை உண்டாகும். அரசாங்கம் மூலம் எதிர்ப்பு உத்தியோகத்தில் எதிர்பார்த்த உதவி அமைய இடையூறுகள் தெய்வ காரியங்களில் ஈடுபாடு குறையும் நிலை யாவும் உண்டாகும். மனைவி உற்றார் உறவினர்களுடன் வீண் விவாதம், வீண் பழி, தீராத வியாதி, குடும்பத்தில் தரித்திரமும் உண்டாகும்.

புத்திர தோஷம் புத்திரர் உண்டாகத் தடை, இடையூறுகள் போன்ற சாதகமற்ற பலன்கள் நடைபெறும். இக்காலத்தில் குரு ப்ரீதி தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வதும் கொண்ட கடலை தானம், ஏழை பெரியவர்களுக்கு உதவி செய்வது சிவ வழிபாடு மேற்கொள்வது போன்றவற்றின் மூலம் கெடுதிகள் விலகி நற்பலன்கள் அமையும். ஆலங்குடி சென்று வருவது உத்தமம். வியாழக் கிழமை விரதம் மேற்கொள்வதும் பிரதோஷ வழிபாடு செய்வதும் சிறந்த பரிகாரங்களாகும்.

சந்திர திசை சனி புத்தி பலன்கள்

சனி புத்தி 1வருடம் 7 மாதம்

பசி, தாகம்  உண்டாகும்.பகைசேறும். அரசுமற்றும் அரசு அதிகாரிகளால் பொருள் சேதமாகும்.எதிரிகளால் துன்பம் நேரும். பெருமை குறையும்.

சனி பகவான் லக்னத்திற்கு கேந்திர கோணங்களிலும் 3, 6, 11ம் இடங்களிலும் அமையப் பெற்று உச்சம், ஆட்சி, நட்பு போன்ற பலம் பெற்றுக் காணப்பட்டாலும் திசா நாதனுக்கு கேந்திர கோணம் 3, 6, 11ல் அமையப் பெற்றாலும் உற்றார் உறவினர்களுடன் ஒற்றுமை உதவி உண்டாகும். தன சேர்க்கை வண்டி வாகனம் பெறும் அமைப்பு, சேமிப்புகள் பெருகும் நிலை யாவும் உண்டாகும். எடுக்கின்ற காரியங்களில் வெற்றிமேல் வெற்றி ஏற்படும். உடல்நிலை சிறப்பாக அமையும். கருமை நிறமான பொருட்களால் அதிக லாபம் உண்டாகும்.

சனி பகவான 8, 12,ம் இடங்களில், இருந்து புக்தி நடந்தாலும், திசா நாதனுக்கு 8, 12ல் இருந்து புக்தி நடைபெற்றாலும் சனி பகவான் நீசம் பகை பெற்று பாவ கிரக சேர்க்கை, பார்வை பெற்று திசா நடைபெற்றாலும் உடல்நிலை பாதிப்பு, உற்றார், உறவினர்களை எதிர்பாராமல் இழக்கும் நிலை, வண்டி, வாகனம் பழுதடையும் நிலை, உண்டாகும். குடும்பத்தில் கலகம் வேலையாட்களால் பிரச்சனை நெருக்கமானவர்களே துரோகம் செய்யும் நிலை இருக்கும். இடத்த மாற்ற வேண்டிய சூழ்நிலை உத்தியோக இழப்பு, கடின உழைப்பிற்கு ஆளாகும் நிலை, எதிர்பாராத விபத்துக்களை சந்திக்கும் நிலை, தேவையில்லாத வம்பு வழக்குகளில் சிக்கும் நிலை யாவும் உண்டாகும்.

சனி பகவான் சாதகமற்று அமையப் பெற்றால் ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாடு செய்தல் சனி விரதம், சனீஸ்வரனுக்கு எள் முடிந்த திரியிட்ட விளக்கு ஏற்றுவதும் காக்கைக்கு அன்னம் வைப்பது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்வது, சபரிமலை யாத்திரை சென்று வருவது, திருநள்ளாறு சென்று நளன் குளத்தில் நீராடி வருவது போன்ற பரிகாரங்களை செய்தால் கெடுதிகள் குறைந்து நற்பலன்கள் உண்டாகும்.

சந்திர திசை

சந்திர திசை புதன் புத்தி பலன்கள்

புதன் புத்தி 1வருடம் 5 மாதம்

ஆடை ,ஆபரணங்கள்  கிடைக்கும்.பொன் பொருள் விருத்தியாகும்.வியாபாரம் விருத்தியாகும்.தொழில் அதிபர்களின் நட்பு கூடும்.அரசாங்கதால் உதவி கிடைக்கும்.

புதன் பகவான் ஜெனன காலத்தில் ஆட்சி, உச்சம், நட்பு, ஸ்தானத்தில் அமைந்து சுப கிரக சேர்க்கை பார்வை பெற்றும் கேந்திர கோணத்தில் 2, 11ம் இடங்களிலும் அமையப் பெற்றாலும் திசா நாதனுக்கு கேந்திர கோணங்களில் அமையப் பெற்றிருந்தாலும் சிறப்பு மிக்க பலன்கள் உண்டாகும். சிறப்பான வாக்கு சாதுர்யத்தாலும், எழுத்து, பேச்சால் எவரையும் கவர்ந்து சம்பாதிக்கும் உயர்வான நிலை உண்டாகும்.

உற்றார் உறவினர்களுடன், தாய் வழி உறவினர்கள், நண்பர்கள், தாய் மாமன் வழியில் சிறப்பான அனுகூலம், பொருள் சேர்க்கை உண்டாகும். கல்வியில் மேன்மை கற்ற கல்வியால் உயர்வான பதவிகளை வகிக்கும் அமைப்பு புக்தி கூர்மை, கலைத்துறை, கவிதையாற்றல், சிறந்த வித்தைகளை கற்கும் ஆற்றல் வளரும் வியாபாரத்தில் சிறப்பான லாபம், கணிதம், கம்ப்யூட்டரில் சாதனை செய்யும் அமைப்பு, அந்தஸ்து, பெருமைகளும் உண்டாகும். மற்றவர்களால் மதிக்கப்படும் நிலை உண்டாகும்.

புதன் பகவான் நீசம், பகை, பாதக ஸ்தானம் பெற்று லக்னத்திற்கு 6, 8, 12ல் மறைந்து திசா நாதனுக்கு 6, 8, 12ல் அமையப் பெற்று புக்தி நடந்தாலும் உற்றார், உறவினர்களிடமும் தாய் மாமன் வழியிலும் பகை விரோதம் உண்டாகும்.

கல்வியில் மந்தநிலை கற்ற கல்விக்கு தொடர்பில்லாத வேலை வாய்ப்புகள் அமையும். வண்டி, வாகனம் பழுதாகும். வியாபாரம் தொழில் மந்தமான போக்கும், நரம்பு சம்பந்த வியாதி தலைவலி, ஞாபக சக்தி குறைவு புத்திர பாக்கியம் ஏற்பட தடை யாவும் உண்டாகும். இக்காலத்தில் விஷ்ணுவுக்கு வழிபாடு செய்வது விஷ்ணு சகஸ்ரநாமம் ஜெபிப்பது பச்சைப்பயிறு தானம் செய்வது, சுதர்சன எந்திரம் வீட்டில் வைத்து பூனிப்பது, மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் சென்று வருவது புதனுக்கு பச்சை துண்டு சாற்றுவது மூலம் கெடு பலன்கள் விலகி நற்பலனை ஏற்படுத்தும்.

சந்திர திசை கேது புத்தி பலன்கள்

கேது புத்தி7 மாதம்

குழந்தை மற்றும் தாய் தந்தையாருக்கு கண்டம்.கால்களில் நோய் ஏற்படும்.அரசாங்கத்தால் பகை நேரும். ஆடு மாடுகள் நஷ்டமாகும்.ஆயுதங்களினால் காயம் உண்டாகும்-மிக கவனம்.

கேது பகவான் சுபபலன் பெற்றிருந்தால் நல்ல தெய்வ பக்தி உண்டாகும். 11ம் வீட்டில் அமையப் பெற்று புக்தி நடைபெற்றாலும் விசேஷமான பலன்கள் உண்டாகும்.

பொருளாதார நிலையில் ஏற்றம் உயர்வு அசையா சொத்து சேர்க்கை விசேஷ தன லாபமும் கிட்டும். எடுக்கும் காரியங்கள் வெற்றி தரும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உயர்ந்த ஞானம் உண்டாகும். மருத்துவம் விஞ்ஞான துறையில் நாட்டம், சாதனை செய்யும் நிலை, மற்றவர்களால் மதிக்கப்படும் உயர்வான நிலை உண்டாகும்.

கேது பகவான் அசுப பலன் பெற்று புக்தி நடைபெற்றாலும் 7, 8ல் அமையப் பெற்று புக்தி நடைபெற்றாலும் விஷ பயம் அறியாமை, முட்டாள் தனத்தால் எதையும் இழக்கும் நிலை, வயிற்று வலி, தோல் நோய்கள், கணவன் மனைவி பிரிவு, இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாத நிலை, புத்திர பாக்கியம் ஏற்பட தடை யாவும் உண்டாகும்.

உற்றார் உறவினர்களை வெறுக்கும் சுபாவம், சோம்பலாக செயல்படும் நிலை, சொத்து பணம், விரயமாகும் சூழ்நிலை, சரியான நேரத்தில் சாப்பிட முடியாத நிலை, எதிர்பாராத விபத்துக்கள் திருமணம் நடைபெறத் தடை, இடையூறுகள் அரசாங்க தண்டனை அடையும் நிலை வம்பு வழக்கு போன்ற சாதகமற்ற பலன்கள் ஏற்படும்.

சந்திர திசை

இக்காலத்தில் கேதுவுக்கு பரிகாரமாக விநாயகர் வழிபாடு, பாம்பு புற்றுக்கு பால் வைப்பது வெள்ளியில் நாகர் செய்து தானமளிப்பது, சர்பேஸ்வரரை வழிபாடு செய்வது, கீழ்பெரும் பள்ளம், திருகாளஹஸ்தி, சென்று சர்ப்ப சாந்தி செய்வது, கொள் தானம் செய்வது உத்தமம். வைடூரிய கல் பதித்த மோதிரம் கூட அணியலாம்.

சந்திர திசை சுக்ர புத்தி பலன்கள்

சுக்கிர புத்தி 1வருடம் 8 மாதம்

திருமணம் கைகூடும்.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.குழந்தை செல்வம் கிடைக்கும்.பாவங்கள் விலகும், கீர்த்தி உண்டாகும்.வியாபாரம் பெருகும், பொன், பொருள் ,பூமி சேர்க்கை உண்டாகும்.

சுக்கிர பகவான் ஜெனன காலத்தில் ஆட்சி, உச்சம் நட்பு பெற்று சுப கிரக சேர்க்கை, பார்வை பெற்றோ லக்னத்திற்கு கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்று 11ம் வீட்டில் அமைந்து புக்தி நடைபெற்றாலும், திசா நாதனுக்கு கேந்திர திரிகோணத்தில் அமையப் பெற்றாலும் ஜாதகர் சிறப்பான மேன்மை மிகு பலனை அடைவார். பெண்கள் வகையில் ஆதரவு பெருகும். செல்வச் சேர்க்கை வீடு வாகனம், ஆடை, ஆபரணம் சேர்க்கை உண்டாகும்.

திருமண சுபகாரியம் நடைபெறும். பெண் குழந்தை யோகம் நல்ல தூக்கம், கட்டில் சுகம், ஆடம்பர வாழ்வு அமையும். மனைவி, தாய், சகோதரி வழியில் மேன்மை உண்டாகும். குலத் தொழில், கலைத் துறைகளிலுமு மேன்மை, குடும்பம், லக்ஷ்மி கடாட்சம் நிறைந்ததாக இருக்கும். பெண்கள் உபயோகிக்கும் பொருட்கள், ஜவுளி, ஆடம்பர பொருட்கள், ஆடை ஆபரணம் யாவிலும் சிறப்பான லாபமும் உயர்வும் உண்டாகும்.

சுக்கிர பகவான் நீசம் பகையாகி பலமிழந்து, பாதக ஸ்தானம் அஸ்தங்கம் அடைந்து 6, 8, 12ல் மறைவு பெற்று பாவிகள் சேர்க்கை, பாவிகள் பார்வையாகி புக்தி நடைபெற்றாலும் தகாத செயலில் ஈடுபட்டு குடும்ப கௌரவம் பாதிக்கப்படும் நிலை மனதில் உற்சாக குறைவு குழப்பம் போன்றவை உண்டாகும்.அதுமட்டுமின்றி இல்லற வாழ்வில் பிரச்சனை, கட்டில் சுகம் பாதிக்கப்படும் நிலை மர்ம ஸ்தானங்களில் பாலியல் தொடர்பான நோய், கண்களில் பாதிப்பு, தீய பழக்க வழக்கங்களும், பெண்களால் அவமானப்படும் சூழ்நிலைகளும் உண்டாகும்.

வண்டி வாகனத்தை இழக்கும் நிலை, கடன் வறுமை, விபத்துக்களையும் சந்திக்க நேரிடும். இதற்கு பரிகாரமாக லக்ஷ்மி பூஜை செய்வது வெள்ளி கிழமை விரதம் மேற்கொள்வது, திருவிளக்கு பூஜை செய்வது நெய் விளக்கு ஏற்றுவது, ஏழை சுமங்கலிகளுக்கு அன்னதானம் ஆடை தானம் அளிப்பது, பசுவுக்கு உணவு அளிப்பது ஸ்ரீரங்கம் சென்றுலக்ஷ்மியை தரிசிப்பதால் துன்பம் விலகும்.

சந்திர திசை சூரிய புத்தி பலன்கள்

சந்திர திசை சூரிய புக்தி 6 மாதம்

சூரிய பகவான் உபஜெய ஸ்தானமான 3, 6, 10, 11ல் இருந்து திசை நடைபெற்றாலும் ஆட்சி உச்சம் நட்பு பெற்று காணப்பட்டு புக்தி நடைபெற்றாலும் வீரம், விவேகம், கூடும். எடுத்த காரியங்களில் வெற்றி மேல் வெற்றி உண்டாகும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்களால் மேன்மை, உயர்வு, அனுகூலம் உண்டாகும். அரசாங்க வழியில் பதவிகள், பெருமைகள் தேடி வரும். புத்திர பாக்கியம் ஏற்படும்.

சூரிய பகவான் அசுப பலன் பெற்று பகை நீசமாகி பாவிகள் சேர்க்கை, பார்வை பெற்று காணப்பட்டாலும் லக்னத்திற்கு 6, 8, 12ல் மறைந்து திசா நாதனுக்கு 6, 8, 12ல் மறைந்து காணப்பட்டாலும் ஜாதகருக்கு உஷ்ண நோய்கள், கண்களில் பாதிப்பு, இரு சுய கோளாறு, மூளை கோளாறு, எலும்புகளில் பாதிப்பு, மஞ்சள் காமாலை, ஜீரத்தால் பாதிப்பு, உண்டாகும். தந்தைக்கு தோஷம் தந்தை வழி யில் அனுகூலமில்லாத நிலை இருக்கும். இடம் விட்டு இடம் போக வேண்டிய நிலை, வண்டி வாகன விபத்துக்கள், அரசாங்கத்திற்கு அபராதம் கட்டும் நிலை, பகைவர்களால் பயம் உண்டாகும். உடன்பிறறந்தவர்களுடன் பிச்சனை கெட்ட வார்த்தைகளை பேசுதல், கெட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுதல் அவமானப்படும் நிலையும் உண்டாகும்.

இதற்கு பரிகாரமாக சூரிய நமஸ்காரம் செய்வது சிவ வழிபாடு, பிரதோஷ கால பூஜை செய்வது, ஆதித்ய ஹிருதயம் பிராயணம் செய்வது, ஞாயிற்றுக் கிழமைகளில் சூரியனை சக்கரை பொங்கல் செய்து வழிபட வேண்டும். சூரியனார் கோயில் ஆடுதுறையில் உள்ளது. அங்கு சென்று வருவதும் பரிகாரமாகும்.

சந்திர திசை தொடர்புடைய சில கேள்விகள் :

சந்திர திசை எத்தனை வருடம்?

பதில் : சந்திர மகா திசை 10 வருடம் நடக்கும்.

சந்திர திசைக்கு அடுத்த திசை?

பதில் : செவ்வாய் திசை

Leave a Comment

error: Content is protected !!