அதிசய லிங்கம்
நம்முடைய முழுமுதற் கடவுள் சிவபெருமான் ஆவர்.உலகிலேயே அனைத்து இடங்களிலும் சிவபெருமான் கோவில்கள் தான் அதிகமாக இருக்கும்.அதில் ஒன்றுதான் நிறம் மாறும் சிவலிங்கம் .இக்கோவில் தஞ்சை மாவட்டத்தில் அமைத்துள்ளது .
ஐந்து நிறங்களில் அருள்பளிக்கும் ஈசனாக பஞ்சவர்ணேஸ்வரர் என்ற திருநாமம் கொண்ட கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் பாபநாசத்தை அடுத்த நல்லூரில் அமைந்துள்ளது.
திருவாடுத்துறை ஆதினத்துக்கு சொந்தமான இத் திருக்கோவிலில் சுவாமி சுயம்பு மூரித்தியாக கல்யாணசுண்தரேஸ்வரர் என்ற பெயர் பெற்றவர் ..கோவில் முன்பு ஏழு கடல் என்னும் பெரிய தீர்த்தம் உள்ளது .
மூலவர் பஞ்சவர்ணேஸ்வரர் (கட்டு)மலைமீது உள்ளார்.இங்குள்ள இறைவனின் சிவலிங்க திருமேனி வேறு எங்கும் காண முடியாத அற்புதமான அமைப்பை உடையது.
ஒரு நாளில் ஆறு நாழிகைக்கு ஒருமுறை-ஒரு நாளில் ஐந்து முறை நிறம் மாறுகின்றது.இதனால்தான் இறைவனுக்கு பஞ்சவரனேஸ்வரர் என்ற பெயர் வழங்குகின்றது.
தினமும் இந்த கோவிலின் மூலவர் தாமிரம்,இளஞ்சிவப்பு, தங்கம்,மரகத பச்சை ,தவிர குறிப்பிட முடியாத நிறம் என்று ஐந்து நிறமாக காட்சி அளிக்கிறார்.
காலை 6 மணி முதல் 8.24 வரை தாமிர நிறம்,8.25 மணி முதல் 10.48 வரை இளஞ்சிவப்பு.10.49க்கு பின் உருகிய தங்க நிறம்.மாலை 3.36 க்கு மரகத பச்சை நிறத்தில் இந்த லிங்கம் மாறுகிறது..மாலை6.00மணிக்கு மேல் குறிப்பிட முடியாத நிறத்தில் காட்சி தருகிறார்…..