ஹரித்வார் கங்கை அம்மன்
கங்கை அம்மன் வரலாறு:
கங்கை என்றாலே புனிதம் என்று பெயர். கங்கை அம்மனை நாம் வழிபடுவதன் மூலம் நாம் வாழ்வும் புனிதம் அடையும். நம் பாவங்கள் யாவும் குறைந்து நம் முன் ஜென்ம கர்ம வினைகளும் கரையும் என்பது ஐதீகம்.
சிறப்பு
ஹரித்வாரில் அமைந்துள்ள கங்கை அம்மன் ஆலயம் மிகவும் பழமை வாய்ந்தது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு பகீரத மன்னனால் வேண்டப்பட்டு பிரம்மாவால் மேலோகத்திலிருந்து பூலோகத்திற்கு அனுப்பப்பட்டவள் கங்கை அம்மன். ஆரம்பகாலத்தில், மேலோகத்திலிருந்து பூலோகத்திற்கு வந்ததால் வருத்தமடைந்த கங்கா தேவி சிவனின் தலையில் கோபத்தோடு இறங்கினாள்.
சிவனின் தலையின் மீது பட்டதால் கங்கை மேலும் புனிதம் அடைந்தது. நாம் கங்கை நதியில் நீராடும்போது நம் பாவங்களை மேலும் குறைத்து நம்மை புனிதம் அடையச் செய்கிறது. கங்கை நதிக்கரையில் சூரிய அஸ்தமன காலத்தில் எடுக்கப்படும் கங்கா ஆரத்தியை காண கண் கோடி வேண்டும்.
பரிகாரம் :
கங்கை அம்மனுக்கு தீபமேற்றி வழிபடுவதும் , குளிர்ந்த மற்றும் புனித நீரால் அபிஷேகம் செய்வதும், ஆரத்தி வழிபாடும் நம் மனச் சுமையை குறைத்து நம் உள்ளங்களை குளிரவைக்கும்.
வழித்தடம்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹரித்வார் உள்ளது புதுடெல்லியில் இருந்து ரயில் வசதியும், பேருந்து வசதியும் உண்டு
கோவில் இருக்கும் சரியான இடத்தை தெரிந்து கொள்ள கீழே கொடுத்துள்ள google map லிங்க்கை தொடவும்