அடிப்படை ஜோதிடம்: பகுதி72
அஸ்வினி 4ம் பாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்
கடக நவம்சம்- அதிபதி சந்திரன்
பெரிய தலை உள்ளவன்.அதிக பணம் உள்ள தனவான்.யாரும் மலைத்துப் போகும் அளவிற்கு வல்லமை சாமர்த்தியம் உள்ளவன்.அழகிய வடிவமும், செம்மை நிறமான மேனியுள்ளவனுமாவான்.பல கலை, கல்வி மேம்பட்டவன்.
அடங்காத காளை போன்று வலிமையுடையவன்.வளர்ந்த உயரமான அகல தோள்கள் உள்ளவன்.இவையெல்லாம் பொருந்தியவனே சந்திர நவாம்சத்தில் பிறந்தவனாவான்.
அஸ்வினி 4ம் பாதத்தில் கிரகங்கள் நின்ற பலன்கள்
அஸ்வினி 4ம் பாதத்தில் சூரியன் நின்றால்:
நல்ல புத்திசாலி,தன் மக்களிடையே தலைவன்,சர்வாதிகாரியும் ஆவதுண்டு.தன் கடமை பொறுப்புகளை ஒழுங்காக செய்து முடிப்பவன்.அதிகமாக பயணம் செய்பவன்.கடைசி காலத்தில் நல்ல அதிர்ஷ்டம், பாக்கியம் உண்டு.
இது சூரியன் 10 முதல் 11 வது பாகைக்குள் இருந்த சிறப்பு பலன்.
அஸ்வினி 4ம் பாதத்தில் சந்திரன் நின்றால்:
பெரும் கல்வி,பல துறை கல்வி உண்டு.அரசாங்க பெரும் பதவிகள் வகிப்பதற்கு ஏற்ற வாய்ப்பு உண்டு.பெரிய மருத்துவர்கள், உயர்மட்ட அதிகாரிகளும் இவர்கள் ஆவதுண்டு.
செவ்வாய் நின்றால்,அதிக நல்ல சந்ததி உண்டு.கடமை உணர்வு அதிகம்.மெல்லிய மேனி.
13, 15 வயதுக்குள் நல்ல பொறியாளன் ஆவதுண்டு
இந்த செவ்வாயை குரு பார்த்தால் நல்ல பூர்வீக சொத்து கிடைக்கும்
அஸ்வினி 4ம் பாதத்தில் புதன் நின்றால்:
ஏழ்மை அதிகம்,நல்ல நடத்த இராது,தன் தொழில், வாணிபத்தில் தோல்வி தான் அதிகம்.
குரு பார்த்தால் எழுத்தாளன், நூலாசிரியர் ஆவதுண்டு.
அஸ்வினி 4ம் பாதத்தில் குரு நின்றால்:
குரு நின்றால் வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பவன்.பேரும் புகழும் பாக்கியமும் தனமும் ஏற்படும்.இவன் கீழ் வெகுமக்கள் பணிபுரிவர்.கடமை உணர்வுள்ள நன்மக்கள் உண்டு.போட்டி பந்தயம் லாட்டரி முதலியவற்றில் சிலசமயம் வெற்றி ஏற்படும்.
அஸ்வினி 4ம் பாதத்தில் சுக்கிரன் நின்றால்:
சிறந்த திரைப்பட நடிகை நடிகராக ஆவதுண்டு.இசைக்கலைஞன்,பாடகன், வாத்திய கலைஞன் ஆவதுண்டு.நல்ல எழுத்து திறன் உண்டு.சூரியன் பார்த்தால் மண வாழ்க்கை கெடும்.திருமணம் மிக இளம் வயதிலேயே நடக்கும்
அஸ்வினி 4ம் பாதத்தில் சனி நின்றால்:
பொதுவாக மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை உண்டு.அதிக சமயப்பற்று ஆசாரம் இவற்றை பின்பற்றுபவன்.சூதாட்ட பழக்கம் ஏற்படும்.சூரியன் பார்த்தால் பயிர் தொழில் மூலம் லாபம், மிராசுதாரர் ஆவான்.ஆனால் திருமணத்தடை அல்லது திருமணம் மூலம் துன்பம் உண்டு.
அஸ்வினி 4ம் பாதத்தில் ராகு நின்றால்:
தைரியம், வலிமை உண்டு.மெல்லிய உடல் உள்ளவன்.வாயுத்தொல்லை, செரியாமை உண்டு.சூரியன் பார்த்தால் அதிர்ஷ்டம். எந்த பொறுப்பையும் நிறைவேற்றுவான்.எந்த சிக்கலான சூழ்நிலைகளிலும் இவனை காப்பாற்ற ஆள் வரும்.
அஸ்வினி 4ம் பாதத்தில் கேது நின்றால்:
தன் பிறந்த ஊர் விட்டு ஓடுபவன்.பிறர் சாப்பாட்டை பங்கு போட்டுக் கொள்வான்.ஆயுள்காரகன் ,ஆயுள் பாவகம் வலுக்காவிட்டால் முப்பது வயது வரைதான் வாழ்வான்.
| கால சக்கர தசை | வருடம் |
| கடக சந்திர தசை | 21 வருடம் |
| சிம்ம சூரிய தசை | 5 வருடம் |
| கன்னி புதன் தசை | 9 வருடம் |
| துலாம் சுக்கிர தசை | 16 வருடம் |
| விருச்சிக செவ்வாய் தசை | 7 வருடம் |
| தனுசு குரு தசை | 10 வருடம் |
| மகர சனி தசை | 4 வருடம் |
| கும்ப சனி தசை | 4 வருடம் |
| மீன குரு தசை | 10 வருடம் |
| பரம ஆயுள் | 86 வயதாகும் |













